முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ப்ளீஸ்.. இதைப் படிக்காதீங்க


2014ம் கடந்து விட்டது. 2013 முடிந்த போது தொடங்கவிருந்த புதிய ஆண்டுக்கான எதிர்பார்ப்புகள் சில இருந்தன. வழக்கம் போல Expectations = Disappointments. அதனால் எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி 2015 எதிர்கொள்ளலாம் என்றிருக்கிறேன். இது இப்போதைய தற்காலிக மனநிலையா, மனமுதிர்ச்சியா இல்லை மனப்பிறழ்வா(?) தெரியவில்லை. பொதுவாக நடந்து முடிந்தவையைப் பற்றி நான் அலட்டிக் கொள்வதில்லை. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்னும் எண்ணமே மேலோங்கியிருக்கும். இருந்தாலும் வருட முடிவில்திரும்பிப் பார்க்கிறேன்என்று மகிழ்ந்த தருணங்களும் மிகக் குறைவே. Don’t know what HE has in reserve for me..

I m a perfect Gemini. அதனால் தானோ என்னவோ மிக நெருக்கமாக நான் உணரும் விஷயங்கள் எல்லாம் மிகத் தொலைவிற்கு என்னைத் தள்ளிவிடுகின்றன. எனக்காக இருப்பவை என நான் கொண்டாடும் விஷயங்கள் எல்லாம் மீண்டும் மீண்டும் முகத்திலறைந்து எனக்குத் தனிமையைப் பரிசளிக்கின்றன.  

இனப்படுகொலைகள், கொலைகள், விபத்துகள், மரண தண்டனைகள், போர் மரணங்கள், இயற்கைச் சீற்றங்கள், தற்கொலைகள், இழப்புகள், வறுமை, அநீதி என அடுக்கிக்கொண்டே போனாலும் உலகம் சுற்றுவதை ஒரு கணம் கூட நிறுத்துவதில்லை என்னும் கொடிய உண்மை தன் கோரப் பற்களைக் காட்டி அசிங்கமாகச் சிரித்துக் கொண்டிருக்கிறது. நொடியில் மறையும் இந்த வாழ்க்கையைச் சூன்யமாகக் கருதுவதா இல்லை கிடைத்தற்கரிய பொக்கிஷமாக எண்ணி ஆர்ப்பரிப்பதா என்று தெரியவில்லை.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் எனப் பூசி மொழுகும் எண்ணம் ஒரு கட்டத்தில் சலிப்பையே தந்துவிட்டுப் போகிறது. இறை நம்பிக்கை? அந்தத் தலைப்பே வேண்டாம்.. என்னருகே நின்றுததாத்சுசொல்லும் இரண்டு தேவதைகளுக்கும் கொஞ்சம் ஓய்வளிக்கலாம் என்றிருக்கிறேன். இனிமேல் எதுவும் சொல்லப்போவதில்லை.

அர்ஜுனனுக்குக் கண்ணன் உபதேசித்ததுபோல, திருநாவுக்கரசர் பாடியது போல, ‘என் கடன் பணி செய்து கிடப்பதேஎன்று இருக்கவேண்டியது தான். வேறு வழி நஹி

Last but not the least, If Contentment is the secret of Happiness, how would I aim for more?

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
Yaathoramani.blogspot.com இவ்வாறு கூறியுள்ளார்…
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
கவிஞர்.த.ரூபன் இவ்வாறு கூறியுள்ளார்…
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சீனு இவ்வாறு கூறியுள்ளார்…
உலகம் உங்களுக்காக சுற்றும் காலம் விரைவில் வரும். வரவேண்டும் என்ற நம்பிக்கையில் அந்த தேவதைகளை ததாத்சு சொல்லச் சொல்கிறேன் :-)
எம்.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி.
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@திண்டுக்கல் தனபாலன்

நன்றி.. தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@Ramani S

நன்றி.. தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ரூபன்

நன்றி.. தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@கவிப்ரியன் கலிங்கநகர்

நன்றி.. தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@சீனு

Thanks Sri..:)
sivamahan இவ்வாறு கூறியுள்ளார்…
Super thozhi iniya puthandu vazhthukkal
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@sivamahan

Thanks Muruga :)
Vijay Periasamy இவ்வாறு கூறியுள்ளார்…
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@Vijay Periasamy

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
கார்த்திக் சரவணன் இவ்வாறு கூறியுள்ளார்…
உலகின் எங்கெங்கோ நடக்கும் படுகொலைகளைப் பார்த்துவிட்டு கேட்டுவிட்டு ஒரு சிறிய உச் கொட்டலுடன் நாம் அடுத்த வேலைகளைப் பார்க்கப் போகிறோம்... நிதர்சனம்...
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ஸ்கூல் பையன்

வருகைக்கு நன்றி
வருண் இவ்வாறு கூறியுள்ளார்…
Hi Subatra! :)

***I m a perfect Gemini. ***

I am a Gemini too! But not a "perfect Gemini". I am a "sloppy Gemini" rather. We have a spectrum of Geminis it seems. At one end we got a perfect Subathra and in the other extreme we got a notorious Varun! :) Interesting or not? :)
'பரிவை' சே.குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா...
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…

வாழ்த்துக்கள் சுபா ..

"சில நேரங்களில் தேவை இல்லமால் சிந்தித்துக்கொண்டு இருக்கிறோம் என்பதை புரிந்துகொண்டால் மட்டும் போதும் அனைத்தும் சரி ஆகிவிடும்"

வருத்தபடதா வாலிபர் சங்கம்
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@வருண்

எல்லாரும் ஒரே மாதிரி இருந்தா உலகம் அழிஞ்சிறாது..? அதான் :-)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@-'பரிவை' சே.குமார்

நன்றி ஐயா. தங்களுக்கும் புத்தாண்டு சிறக்க வாழ்த்துகள்
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@Siva sankar

சரிதான் சிவா. எண்ணங்களில் தான் வாழ்க்கை..
ஜீவன் சுப்பு இவ்வாறு கூறியுள்ளார்…
முதிர்ந்த வாசகர்களுக்கான பதிவு போல ..
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ஜீவன் சுப்பு

ஆமா அண்ணா.. முத்திருச்சு :-)
'பரிவை' சே.குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

பொன்மொழிகள் - சுவாமி விவேகானந்தர்

நேற்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தையொட்டி அவரின் கருத்துக்களை நினைவுகூரலாம் என எண்ணியிருந்தேன். இன்று தான் முடிந்தது. Ø   Stand up, be bold, be strong. Take the whole responsibility on your own shoulders, and know that you are the creator of your own destiny. Ø   They alone live who live for others, rest are more dead than alive. Ø   Arise! Awake! And stop not till the goal is reached. Ø   To be good and to do good – that is the whole of religion. Ø   Strength is life, Weakness is death. Ø   All the power is within you; you can do anything and everything. Believe in that; don’t believe that you are weak. Stand up and express the divinity within you. Ø   Whatever you think, that you will be; if you think yourself strong; strong you will be. Ø   Stand and die in your own strength; if there is any sin in the world, it is weakness; avoid all weakness; for weakness is sin, weakness is death. Ø   Neither money pays, nor name pays, ...