சொல்வனம் – கவிதைகள்
Jul 12, 2018
உறவு
வாலாட்டி மேலேறிக்
குழைந்து எச்சில்படுத்திய
என் பசி
கோபம்
சோகம்
தீட்டு நாட்கள்
சோம்பல்
உறக்கம்
என எல்லாமும்
அதற்குப் புரிந்தது
போல் எதிர்வினையளித்தது.
கண்ணீர் உகுத்த
நாளொன்றில்
பிரிவென்று சொல்லிக்கொள்ளவாவது
அவன் உறவொன்றை
அளித்து
இம்மட்டுமாய் எனக்கருளிய
தேவனுக்கு நன்றி
எனப் புலம்பியதை அது
பார்த்துக் கொண்டிருந்தது.
வாலாட்டி மேலேறிக்
குழைந்து எச்சில்படுத்தும்
நாய்க்குட்டியாக நான்
இருந்தேன்
நான் என
ஒருவரும் இல்லை.
குடுவை உலகம்
குடுவையில் நீந்தும்
மீன்
மேலெழும்பி மூச்சுவிட்டுச் செல்கிறது
கூழாங்கற்களைக் கொண்டாட்டமாக
உரசுகிறது
இளையராஜா பாடல்
கேட்கிறது
சிதறிப்போடும்
மீன் உணவைக்
கொரித்துத் தின்கிறது
குடுவைக்குள் மிதந்து
தூங்குகிறது
திடுமெனக் கண்ணாடி
வழியாக
மீன்முகம் காட்டிப்
பழித்துக் கேட்கிறது
எங்கே என்
உலகமென.
-
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//திடுமெனக் கண்ணாடி வழியாக
மீன்முகம் காட்டிப் பழித்துக் கேட்கிறது
எங்கே என் உலகமென
Nice
மீன் இளையராஜா பாட்டு கேட்குதா...ஹ ஹ ஹா..இது ரொம்ப புதுசா இருக்கே ராதை (எ) சுபத்ரா மேடம்..
Post a Comment