முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பதிவுலகத் தோழர்களே..

என்னவோ நான்  “இது கதையல்ல நிஜம்”னு ஒரு பதிவு போட்டதைப் பத்தி.. ”இதெல்லாம் பொய், நம்பாதே.. ரொம்ப அப்பாவியா இருக்க.. அவங்கள பிச்சையெடுக்குறதுக்கு ஊக்குவிக்காத..” அப்படின்னும் ”சே.. என்ன ஒரு தாராள குணம்.. பத்து ரூபா கொடுத்திருக்கியே..” அப்படினு எல்லாம் நிறைய டையலாக் பேசினீங்களே.. மகா ஜனங்களே.. இங்க வாங்க. இதக் கொஞ்சம் படிச்சுப் பாருங்க.

http://gconnect.in/gc/lifestyle/get-ahead/narayanan-krishnan-hero-of-india.html

2002-ம் ஆண்டில் உயர்தர நட்சத்திர உணவகங்களில் பணிபுரியும் சமையல்காரர்களுக்கான (Chef) சிறந்த விருதைப் பெற்று சுவிட்சர்லாந்து சென்று வேலை பார்க்கும் ஒரு அருமையான வாய்ப்பை பெற்றார் நம் கதையின் ஹீரோ. 


சரி.. சுவிட்சர்லாந்து போறதுக்கு முன்னாடி நம்ம ஊருக்குப் போவேமேனு போயிருக்கார். மதுரையில் இருக்கிற ஏதோ ஒரு கோயிலுக்குப் போற வழியில ஒரு பாலத்துக்கு அடியில ஒரு காட்சியப் பார்த்திருக்கார். அங்க ஒரு வயதான மனிதர் பசியில.. சாப்பிடுறதுக்கு ஒன்னுமில்லாம தன்னோட கழிவைத் தானே சாப்பிட்டுட்டு இருந்திருக்கார்.

ஃபிரண்ட்ஸ்.. நான் கேக்குறேன்.. நம்மில் யாரோ ஒருத்தர் இதே காட்சியப் பார்த்திருந்தா என்ன செஞ்சிருப்போம்? உவ்வேனு சொல்லிட்டு ஓடிப் போயிருப்போம்.. அல்லது அதைப் பார்த்து சொச்சோ..னு பரிதாபப் பட்டிருப்போம்.. அல்லது ’பையித்தியம்.. இந்த மாதிரி பையித்தியத்துக்கு எல்லாம் இந்த அரசாங்கம் ஏதாவது செய்யக் கூடாதா’னு கேட்டுட்டுப் போயிகிட்டே இருப்போம். ஆமாவா? இல்லையா?

ஆனா நம்ப ஹீரோ என்ன செஞ்சார் தெரியுமா? அதப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அந்த நொடியிலிருந்து அந்தத் தாத்தாவுக்குத் தானே சாப்பாடு கொடுத்துட்டு வந்திருக்கார்.. அட.. எங்கப் போறீங்க? கதை இன்னும் முடியல.. இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கு.

அவருக்கு மட்டுமில்ல.. இந்த மாதிரி மனநலம் குன்றி பிறரால் கைவிடப் பட்டவர்களுக்கும் யாருமற்ற அனாதைகளுக்கும் தானே உணவளிக்க எண்ணி உடனே என்ன செஞ்சார் தெரியுமா? தான் பார்த்துட்டு இருந்த வேலைய ரிசைன் பண்ணிட்டார்.

சுவிட்சர்லாந்தாவது... ஸ்காட்லாண்டாவது.. இனிமேல் இது தான் நம்ம வேலை. வாழ்க்கைப் பூரா இதத் தான் செய்யப் போறோம்னு அன்னைக்கு முடிவு எடுத்தவர் தான். இன்னைக்கு உலகமெல்லாம் புகழ்ந்து பேசப்படுற ஒரு பெரிய மனிதரா உயர்ந்து நிக்கிறார். அவருக்குக் கோடி கும்பிடு!

சரி.. இதை மட்டும் தான் பண்ணுறாரானா அது தான் இல்ல. அவர் போற எடத்துக்கெல்லாம் முடித்திருத்துவதற்குத் தேவையான சாதனங்களைக் கொண்டு போறாராம். எதுக்கு? அந்த மனநலம் குன்றியவர்களுக்குத் தானே முடித்திருத்தம் செய்வதற்கு. இதை எல்லாம் அவர் வருசத்துக்கு அதிகமில்ல...365 நாள் தான் செய்றாராம். இதை மாதிரி கடந்த ஒன்பது வருஷமா செஞ்சிட்டு இருக்காறாம்.

ஆமா.. பார்த்துட்டு இருந்த வேலைய விட்டுட்டாரே... எங்க இருந்து இந்தச் சேவையச் செய்றார்னு பார்த்தா.. அவரோட தாத்தா தனக்குனு கொடுத்த ஒரு பாரம்பரியமான பழைய வீட்டை வாடகைக்கு விடுறாராம். அதோட இதையெல்லாம் செய்றதுக்குனே “அக்‌ஷயா”னு ஒரு தொண்டு நிறுவனத்தை ஆரம்பிச்சு(இது வேறயா) அதுக்குக் கிடைக்குற கொஞ்சம் உதவித்தொகைய வச்சு சமாளிக்கிறாராம். அதுசரி.. கொடுக்கிறவங்களுக்கு ஆண்டவன் கூரையப் பிச்சுகிட்டுக் கொடுப்பான்ங்க..

எனக்கு இதுக்கு மேல சொல்றதுக்கு வார்த்தை வரலங்க. ஒன்னே ஒன்னு மட்டும் சொல்றேன். என்னடா வேலை பார்க்கிறான்னு அவங்க அம்மா நினைச்சிட்டு இருந்த சமயத்துல ஒரு நாள் நம்ம ஹீரோ தான் பார்க்கிற வேலைக்கு அம்மாவக் கூட்டிட்டுப்போய்க் காட்டிருக்கார். வீட்டுக்கு வந்தவுடனே அவரோட அம்மா... “போடா.. போக்கத்தவனே”னு சொல்லியிருந்தா பரவாயில்லங்க. என்ன சொல்லிருக்காங்க தெரியுமா?

“நீ அவங்களுக்கு எல்லாம் சாப்பாடு கொடு. என் உயிர் இருக்கிற வரைக்கும் நான் உனக்குச் சோறு போடுறேன்”னு சொல்லிருக்காங்கப்பா!!

சரி.. விஷயத்துக்கு வருவோம். நம்ப ஹீரோ பேரு.. “நாராயணன் கிருஷ்ணன்”. CNN நியூஸ் சேனல்ல வருஷா வருஷம் “CNN-Hero of the Year"னு ஒருத்தரை கௌரவிக்கிறாங்க. இந்த வருஷத்துக்கு உலகெங்கும் இருந்து ஒரு பத்துப் பேர் நியமனம் செய்யபட்டிருக்காங்க. அதுல நம்ம ஹீரோ திரு. நாராயணன் கிருஷ்ணனும் ஒருத்தர்!!

நாம செய்ய வேண்டியது ஒன்னு தான். CNN சேனலுக்கான லின்க்க க்ளிக் பண்ணி நம்மளோட ஓட்டுக்களை அவருக்குப் போடனும். அவ்வளோ தான். உலகம் முழுவதிலும் பத்தே பத்துப் பேர். அதில ஒருத்தர் தான் இந்தியர். அதுவும் தமிழர் :-)

அவரோட இந்த ஈடுஇணையற்ற செயலுக்கு இன்னும் நிறைய உதவி கிடைக்கிறதுக்கும் அவரை உற்சாகப்படுத்துறதுக்கும் இந்த ஒரு சின்ன செயல நாம் செய்யனும்னு நினைக்கிறேன்.

Friends.. Please..??

ஓட்டிடுவதற்கு இங்கே க்ளிக்கவும்
ENCOURAGE THIS YOUNG & ENERGETIC HELPING SOUL

கடைசித் தேதி நவம்பர் 18, 2010. அதுகுள்ள எவ்வளோ ஓட்டு வேணும்னாலும் போடலாம்!
நன்றி..... கமெண்ட்ஸ்-ல மீட் பண்ணலாம். (ஓட்டு போட்டுட்டு மெதுவா வாங்க :-) )*
*

கருத்துகள்

மர்மயோகி இவ்வாறு கூறியுள்ளார்…
நீங்கள் சொன்னமாதிரியே அவருக்கு ஓட்டு போட்டாகிவிட்டது..தமிழர் என்பதற்காகவல்ல..ஒரு மிகச்சிறந்த மனிதர் என்பதற்காக..நன்றி..
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ மர்மயோகி

நன்றி மர்மயோகி
ஜெயந்த் கிருஷ்ணா இவ்வாறு கூறியுள்ளார்…
நான் ஓட்டளித்துவிட்டேன் சகோதரி.. நண்பர்களுக்கும் சொல்கிறேன்...
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ வெறும்பய

அண்ணா.. ரொம்ப நன்றி!
R.Gopi இவ்வாறு கூறியுள்ளார்…
நிறைய இடங்களில் இவரை பற்றி படித்து ஆச்சரியம் அடைந்தேன்... இப்போது உங்கள் ப்ளாக்கிலும்...

இவரை போலவும் இருக்கப்போய் தான், மழையும் அவ்வப்போது நம்மூரில் எட்டி பார்க்கிறது...

நானும், இது போல், என்னாலான உதவியை எவ்வளவோ பேருக்கு செய்து கொண்டிருக்கிறேன்.. தொடர்ந்து செய்வேன்...
pichaikaaran இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல விஷ்யங்களை பற்றி பேசுவதும் ஒரு நல்ல செயல்தான்... பகிர்வுக்கு நன்றி
a இவ்வாறு கூறியுள்ளார்…
முன்பே ஓட்டு போட்டுவிட்டேன்.........
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ R.Gopi

மிக்க மகிழ்ச்சி கோபி அண்ணா.
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ பார்வையாளன்

நன்றி பார்வையாளன். நமக்கு வேற என்ன வேலை? ;-)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ வழிப்போக்கன் - யோகேஷ்

சூப்பர். அதுனால என்ன? எனக்காக இன்னொரு தடவை ஓட்டளியுங்களேன்..?? :-)
தனி காட்டு ராஜா இவ்வாறு கூறியுள்ளார்…
நான் ஒட்டு போட்டு கொண்டு இருந்த போது என் நண்பன் கருத்து கந்தசாமி வந்தான் ....அவனிடம் இது பற்றி கேட்டேன் .....நீ என்னடா நினைகிறாய் என்று .....
வழக்கம் போல் கருத்து ஒன்றை சொன்னான் ........அவன் என்ன சொன்னான......

"இது எல்லாம் வேருக்கு நீர் ஊற்றாமல் கிளைக்கு நீர் ஊற்றும் வேலை தான் .....
அடிப்படையில் எந்த மாற்றமும் இதன் மூலம் வரப் போவதில்லை .....
வாழ்க்கை என்பது மர்மமானது .....எல்லாவற்றிக்கும் விடை தேடி கொண்டு இருக்க கூடாது...
கருத்து கந்த சாமி கூட ஆரம்ப காலத்தில் ...ஒரு அநாதை இல்லம் வைத்து உதவ வேண்டும் என நினைத்து இருந்தா னாம்.........அவன் வாழ்க்கை அனுபவம் ......இதெல்லாம் ஒரு விதத்தில் உதவலாம் .....ஆனால் இதெல்லாம் இன்னொரு விதத்தில் பார்த்தால் முட்டாள் தனம் என்று கற்று கொடுத்ததாகச் சொன்னான் ....."

சரி விடுங்க ...அவன் இப்படி தான் ஏதாவது கருத்து சொல்லி கொண்டே இருப்பான் ...இல்லை என்றால் மண்டை வெடித்து விடும் அவனுக்கு .....

சரி...நீங்க எத்தனை ஓட்டு போட்டீங்க....நான் ஒரு 10 ஒட்டு போட்டேன்....
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ தனிகாட்டு ராஜா

சொல்றவங்க எப்படியும் சொல்லிட்டே தான் இருப்பாங்க.

//"இது எல்லாம் வேருக்கு நீர் ஊற்றாமல் கிளைக்கு நீர் ஊற்றும் வேலை தான் .....
அடிப்படையில் எந்த மாற்றமும் இதன் மூலம் வரப் போவதில்லை .....//

வேருக்கு நீர் ஊற்றணும்னா என்ன செய்யணும்னு கருத்து கந்தசாமி கிட்டே கேட்டுச் சொல்லுங்க.

ப்ளாக்-ல ஒரு போஸ்ட் போட்டாலே நிறைய பேர்..”ஐயோ இப்படி ஒருத்தரா.. அவரோட முகவரி, வங்கிக் கணக்கு எண், தொலைபேசி எண் ஏதாவது கொடுங்கனு கேட்டு உதவி செய்றாங்க. வெறும் ஓட்டு மட்டும் போடலை. அப்புறம் ஓட்டு போடுறதைச் சாதாரணமாக நினைக்க வேண்டாம். CNN Hero of the Year ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் இவரது சேவை உலகெங்கும் உள்ளவர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும். அதனால் பல உதவிகள் இவரைத் தேடி வரலாம். இவரைப் போன்று உள்ளம் படைத்தவர்கள் இவரைச் சேர்ந்து கொள்ளலாம். எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன.

//கருத்து கந்த சாமி கூட ஆரம்ப காலத்தில் ...ஒரு அநாதை இல்லம் வைத்து உதவ வேண்டும் என நினைத்து இருந்தா னாம்.........//

நினைக்கலாம். நீங்களும் நினைக்கலாம்; நானும் நினைக்கலாம். நினைப்பது முக்கியமல்ல. அதை ஒருத்தர் செய்கிறாரே!! அதற்குத் தான் நாம் தலைவணங்க வேண்டும்.

இது எந்த விதத்திலும் முட்டாள்தனமாக எனக்குத் தெரியவில்லை. உங்க ராஜயோகத்துல எப்படி இருக்குனு எனக்குத் தெரியல. ஆனால், மறுபடியும் சொல்கிறேன். என்னைப் பொறுத்தவரை இது என் கடமை.

கணினியை ஆன் செய்யும் போதெல்லாம் மற்றும் தோன்றும் போதெல்லாம் நான் ஓட்டு போட்டு வருகிறேன். நீங்க இன்னும் நிறைய ஓட்டு போடுங்க :-)

நன்றி தோழா :-)
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
//வேருக்கு நீர் ஊற்றணும்னா என்ன செய்யணும்னு கருத்து கந்தசாமி கிட்டே கேட்டுச் சொல்லுங்க.//

ஹிட்லர் என்றொரு மனிதன் அடிபடையில் ஓவியன் தான் ....ஆனால் அவன் லச்சகனக்கான யூதர்களை கொன்று குவித்தான் .....அதற்கு காரணம் இன வெறி .....
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் எத்தனயோ வேறுபாடுகள் ...இனம் ,மொழி ,மதம் ,பணக்காரன் ,ஏழை etc....
நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஹிட்லர் உறங்கி கொண்டு தான் உள்ளான் ...வெவ்வேறு உருவத்தில் .....

ஹிடலர் மட்டும் ஓவியனாக இருந்து இருந்தால் ஒரு உலக புகழ் பெற்ற ஓவியன் கிடைத்து இருப்பான்.....அவனுக்குள் இருந்த ஓவியனை தூண்டி விடுவது தான் அடிப்படை .....
இதன் பெயர் தான் வேருக்கு நீர் ஊற்றுவது .........

ஒரு 1000 பேருக்கு சேவை செய்வதை விட ...ஒரு ஹிட்லரை மாற்றி இருந்தால் லச்சகணக்கான மக்களை காப்பற்றி இருக்கலாம்....இங்குள்ள அரசியல் வாதிகள் ஒருவகையில் ஹிட்லரின் உறவினர்கள் தான் .....

அடிபடையில் நம் நிலை என்ன என்றே நமக்கு தெரியாது ......நாம் எப்படி மற்றவர்களை காப்பாற்ற முடியும் .....

உண்மை என்பது வேறு ...நல்ல விஷயம் என்பது வேறு ....நல்ல விஷயம் முட்டாள் தனமானதாக இருக்கலாம்.....உண்மை ஒருபோதும் முட்டாள் தனமாக இருக்காது....

இந்த உலகில் தேவைக்கு அதிகமாகவே வளங்கள் உள்ளன .....முதல் உலக பத்து பணக்காரர்களில் 4 பேர் இந்தியர் தான் ....ஆனால் 60% மக்கள் உணவுக்கே திண்டாடுகிரார்கள்......
எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன.....[ அட ...நீங்க சொன்ன அதே டயலாக் ...]


//நீங்களும் நினைக்கலாம்; நானும் நினைக்கலாம். நினைப்பது முக்கியமல்ல. அதை ஒருத்தர் செய்கிறாரே!! அதற்குத் தான் நாம் தலைவணங்க வேண்டும்.//


ஆனால் இங்கு குறிப்பிட பட்ட கிருஷ்ணன் செய்வது பொது சேவை கிடையாது ......இது உயிர் சேவை ....ஏன் என்றால் அவர் தன் உயிர் போல எல்லா உயிரையும் நினைக்க முடிவதால் தான்....அவர்களை குளிப்பாட்டி ...முடி வெட்டி எல்லாமே செய்கிறார்...எல்லா உயிரிலும் உள்ள இதே கிருஷ்ணனை (பரமாத்மா) தலை வணங்குகிறேன்...

இப்படிக்கு
தனிக்காட்டு ராஜாவின் நண்பன் கருத்து கந்தசாமி
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
//அடிபடையில் நம் நிலை என்ன என்றே நமக்கு தெரியாது ......நாம் எப்படி மற்றவர்களை காப்பாற்ற முடியும் .....//

இப்படி இருக்கும்போது வேருக்கு நீர் ஊற்றுவது எவ்வகையில் சாத்தியம் என்பது எனக்குத் தெரியவில்லை.

//அவனுக்குள் இருந்த ஓவியனை தூண்டி விடுவது தான் அடிப்படை .....//

”ஹிட்லரி”ன் மனதை மாற்றுவதற்கு நாராயணன் கிருஷ்ணன் போன்றவர்களின் வாழ்க்கை வேண்டுமானால் ஒரு தூண்டுகோலாய் இருக்கக் கூடும்.

//ஒரு 1000 பேருக்கு சேவை செய்வதை விட ...ஒரு ஹிட்லரை மாற்றி இருந்தால் லச்சகணக்கான மக்களை காப்பற்றி இருக்கலாம்....//

ஒரு ஹிட்லரை மாற்றும் வலிமை நம்மிடம் இல்லாதபோது 1000 பேருக்குச் சேவை செய்யும் திறன் நம்மிடம் இருப்பதை எண்ணிச் செயல்பட வேண்டியது தான்.

ஆதலால் அட்லீஸ்ட் நமக்குச் சாத்தியமானதையாவது செய்யலாமே என்பது என் கருத்து.

இங்கு நாம் விவாதம் செய்து கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் கூட எத்தனையோ நாரயணன் கிருஷ்ணன்கள் சத்தமின்றித் தங்கள் கடமையைச் செய்து கொண்டிருப்பர்.

நன்றி தோழா!
தனி காட்டு ராஜா இவ்வாறு கூறியுள்ளார்…
//ஆதலால் அட்லீஸ்ட் நமக்குச் சாத்தியமானதையாவது செய்யலாமே என்பது என் கருத்து.//


உங்க கருத்து நல்ல கருத்து தான் ......எனக்குப் புரியுது ..:)
ஆனா கருத்து கந்தசாமி இப்படிதான் ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பான்.....நல்லதை விட உண்மைதான் முக்கியம் என்பான் ....அவன விடுங்க ...சல்லிப் பய .....:-))


என்னுடைய தோழி மற்றும் நாராயண கிருஷ்ணனின் மனித நேய பணி சிறப்படைய .....காக்கும் கடவுள் நாராயண கிருஷ்ணனை வேண்டுகிறேன் :)
Radha இவ்வாறு கூறியுள்ளார்…
Unbelievable service !! நாராயண கிருஷ்ணருக்கு கோடி நமஸ்காரங்கள்.
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ Radha,

So do I.
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
பதில் பேசாம போறீங்களே? பிளீஸ்..??---entha pulla evlo kenjuthu oru comment potta enna..sari podu pavam

enthama un blog nalla eurkku..
"தாரிஸன் " இவ்வாறு கூறியுள்ளார்…
ரொம்ப நல்லா விஷயம்.... படிச்சகையோட ஒரு நல்லா காரியம் பன்ன்னலாம்னு வோட்டு போடா சொடுகின லிங்க் ப்ரோகேன்னு வருது... என்ன பண்ணட்டும்??
வலிப்போக்கன் இவ்வாறு கூறியுள்ளார்…
சட்டசபை தேர்தலுக்கே ஓட்டளிக்க விரும்பல,மனநிலை பாதித்த பிச்சைகாரங்கள உருவாக்கின சமூகத்தைப்
பற்றி பதிவு போட்டிங்கனா.தெரிஞ்சுக்க வாய்ப்பாயிருக்கும்.
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@"தாரிஸன் "

நீங்க ஓட்டு போட முயன்ற போது அதற்கான தேதி முடிந்துவிட்டது தாரிஸன். தங்களது முயற்சிக்கு மிக்க நன்றி !!

பி.கு: அதன் இறுதிமுடிவில் “அனுராதா கொய்ராலா” என்பவர் தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். நேபால் பெண்களைப் பாலியல் வன்முறை கொடுமைகளில் இருந்து பாதுகாக்கப் பாடுபட்டதால் அவர் நியமிக்கப்பட்டிருந்தார். இரண்டு மில்லயன் வாக்குகளைப் பெற்ற அவர் இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

http://www.indiandth.in/Thread-CNN-Names-CNN-Hero-of-the-Year-at-Star-Studded-Gala

மேலும் தகவலுக்கு மேற்கண்ட முகவரிக்குச் செல்லுங்கள். நன்றி.
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@வலிபோக்கன்

தெரிஞ்சுகிட்டு ??
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@siva

ரொம்ம்ப நன்றிங்க :)
Yaathoramani.blogspot.com இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல விஷயத்தை அறிமுகம் செய்த நல்ல பதிவு
எண்ணத்தால் இமயம் அசைப்பது எளிது
செயலால் துரும்பசைப்பதற்கு கொஞ்சம் மெனெக்கெடனும்
ஆகையால் எதையும் விமர்சிப்பதற்கு இருவர்
இருக்கத்தான் செய்வர்
அவர்கள் நல்ல எண்ணம் கொண்டவர்களாக
மட்டுமே இருப்பர்
ஓட்டைப் பதிவு செய்துவிட்டேன்
தங்கள் பதிவைத் தொடர்வதில் பெருமிதம் கொள்கிறேன்
வாழ்த்துக்கள்
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@Ramani

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா!
போளூர் தயாநிதி இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல விஷ்யங்களை பற்றி பேசுவதும் ஒரு நல்ல செயல்தான்... பகிர்வுக்கு நன்றி
டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று இவ்வாறு கூறியுள்ளார்…
அவர் வாழும் தெய்வம்தான்.
Thozhirkalam Channel இவ்வாறு கூறியுள்ளார்…
மகிழ்சி சகோ,,

வாழ்த்துகள்,,

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்

முதன்முறையாக நான் ஒரு தொடர்பதிவு எழுதுகிறேன் :) என்னை எழுதச்சொல்லி அழைத்திருந்த அருண்பிரசாத் துக்கு நன்றி !!! பெண்குரலில் பெண்ணின் மனதைச் சொல்லும் பத்துப் பாடல்கள் . எனக்குப் பிடித்த நிறைய பாடல்களை அவரே எழுதிவிட்டார் :) அதனால் அவற்றை விடுத்து வேறு பத்துப் பாடல்களை நான் இங்கு கொடுத்துள்ளேன் :) *** 1. உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் படம் : குணா இசை : இளையராஜா பாடியவர் : ஜானகி , எஸ் வரலஷ்மி எழுதியவர் : வாலி   சில வரிகள் : ” உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார் யாரிவர்கள் மாயும் மானிடர்கள் ஆட்டி வைத்தால் ஆடும் பாத்திரங்கள் ” இந்தப் பாடலைக் கேட்கும்போதும் கேட்ட பின்னரும் மனதில் ஒரு இனமறியா உணர்வு ஏற்படுவதை நின்று நான் ரசித்ததுண்டு ! இருவர் குரலும் உணர்த்தும் வெவ்வேறு உணர்வுகள் ... அற்புதம் . *** 2. மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் படம் : பாக்யலக்ஷ்மி பாடியவர் : பி . சுசீலா இயற்றியவர் : கவிஞர் கண்ணதா...