There should be no fear of death, for the death of the body is but a gentle passing to a much freer life – Helen Greaves

At his best, man is the noblest of all animals; separated from law and justice he is the worst – Aristotle

What's in a name? That which we call a rose by any other name would smell as sweet - Shakespeare

இது கதையல்ல நிஜம்

Oct 22, 2010


பேருந்தில் ஏறி உட்கார்ந்தேன்.

"நான் கிளம்பவா?" என்ற தம்பியைத் திரும்பிப் பார்த்தேன்.

"ம்ம் சரி. பார்த்துப் போ"

"சரிக்கா. போய்ச் சேர்ந்த உடனே போன் பண்ணு" என்னைப் பேருந்தில் ஏற்றிவிட்டுக் கிளம்பினான்.

திங்கள் கிழமை காலையில் பேருந்துகள் அனைத்தும் தலையணையில் அடைபட்ட பஞ்சைப் போல நிரம்பி இருந்தன. இதுதான் நான் வழக்கமாகத் திங்கள் கிழமைகளில் அலுவலகத்திற்குச் செல்லும் பேருந்து. எப்போதும் உட்கார இடம் கிடைக்காது. இன்று கொஞ்சம் சீக்கிரம் வந்ததால் கிடைத்துவிட்டது. வாசலுக்கு அருகில் உள்ள இருக்கை தான். வெளியே பார்த்துக் கொண்டே பயணம் செய்யலாம்.

சே.. இன்னும் ஒரு வாரத்திற்கு வீட்டுக்கு வர முடியாது. வெள்ளிக்கிழமை சாய்ந்திரம் தான் அங்கிருந்துக் கிளம்பமுடியும். இந்த ஒரு வாரத்தை எப்படி ஓட்டுவது.. யோசித்துக் கொண்டே அருகில் இருந்த பிக் ஷாப்பர் பையைக் காலுக்கருகே நகர்த்திவைத்தேன். அதற்குள் பேருந்தில் கூட்டம் சேர்ந்து விட்டது. நிறைய பேர் நின்று கொண்டிருந்தார்கள். பேருந்து இன்னும் கிளம்பவில்லை. ஓட்டுனரும் நடத்துனரும் அருகில் இருந்த தேநீர் கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர்.

திடீரென்று பேருந்தினுள் கையில் குழந்தையுடன் ஒரு பெண்மணி ஏறினார். கூடவே ஒரு சின்னப் பையனும். அந்தப் பெண்மணி இன்னொரு கையில் நோட்டீசுகள் போல சிலக் காகிதங்களை வைத்திருந்தார். அவற்றை ஒவ்வொன்றாக வரிசையாகப்  பேருந்தில் இருந்த அத்தனைபேருக்கும் கொடுக்கத் தொடங்கினார். எனக்கும் ஒன்று கிடைத்தது.

"வணக்கம். என் கணவருக்கு இரண்டு கால்களும் செயலிழந்து விட்டன. எங்களுக்கு நான்கு குழந்தைகள். சாப்பாடுக்கே வழியில்லாமல் என் குழந்தைகள் கஷ்டப்படுகின்றன. இந்நிலையில் என் கணவருக்குச் செயற்கைக்கால் பொருத்துவதற்குப் போதிய பணவசதி இல்லை. என் குழந்தைகளின் படிப்பும் கேள்விக்குறியாகி விட்டது. தயவு செய்து தங்களால் இயன்ற உதவியைச் செய்யுமாறு உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.. இப்படிக்கு, கோமதியம்மாள்"

குடும்பத்துடன் எடுத்தப் புகைப்படத்தோடு மேற்கண்ட வரிகள் அந்த சீட்டில் இருந்தன. இதைப் போல் நிறைய பேரைப் பார்த்திருக்கிறேன். சரி.. பாவம். இவர்களை ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் எவ்வளவோ மேல். நான் அந்த அம்மாவிடம் கொடுப்பதற்காகப் பையில் சில்லறைக் காசைத் தேடிக் கொண்டிருந்தேன்.

அந்த அம்மாவின் வரவை எண்ணிப் எதிர்பார்த்துக் கொண்டிருந்த என் முன்னால் வந்து நின்றது அவர்களுடன் வந்த சிறுவன். அந்த அம்மாவின் மகன். பார்க்க அவ்வளவு பாவமாக இருந்தான். அவன் வந்து நிற்பதற்கும் நான் எனது கைப்பையைத் தேடி முடிப்பதற்கும் நேரம் சரியாக இருந்தது. சில்லறை எதுவும் பையில் இல்லை. பத்து ரூபாய்த் தாள் தான் இருந்தது. அவன் முகத்தைப் பார்த்தவுடன் அதை அவனுக்குக் கொடுக்கலாம் என முடிவு செய்து அவனுடைய நீட்டிய கையினுள் அதனை வைத்தேன்.

விலுக்கென்று நிமிர்ந்த அவன் என் முகத்தை ஒரு கணம் பார்த்தான். அரை நொடி நேரம் தான் இருக்கும். பின் குனிந்து அவன் கையில் இருந்த பணத்தைப் பார்த்தான். குனிந்த தலை நிமிராமல் என்னைக் கடந்து பின்னே சென்றான்.

நான் கொடுத்தது பத்து ரூபாய் தான். அது அவனை எவ்வளவு பாதித்தது என்று எனக்குத் தெரியவில்லை. அனால் அவன் என்னைப் பார்த்த ஒரு பார்வை......என் உயிர் இருக்கும் வரை என்னால் அதை மறக்கமுடியாது!

இந்தக் கதைக்கு ஏதாவது கருத்தைக் கூறி என்னால் அதை நிறைவு செய்ய இயலும். ஆனால்.. இந்தக் கதையில் நடந்ததைப் போன்ற நிகழ்வுகளுக்கு நிரந்தரமானத் தீர்வு ஒன்று வருமா? :'(
*

25 comments:

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

indha avasara ulagil udhavi seiyum manapaanmai anaivarukkum varuvadhillai . "அனால் அவன் என்னைப் பார்த்த ஒரு பார்வை......என் உயிர் இருக்கும் வரை என்னால் அதை மறக்கமுடியாது!" nanri solla, avanadhu paarvai muyarchithu irukkalaam antha pinju manadhukkul evvalavu valiyo paavam. //Panamirukkum manidharidam gunamiruppadhillai gunamirukkum manidharidam panamiruppadhillai// idharkku theervu kidaithaal ungal kelvikkum theervu kidaithuvidum adhu varai aayiramaayiram subathraakkal inda boomiyil valam varuvaargal ( vimal from fr...)

VJR said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Ya some time me too met the same

தனி காட்டு ராஜா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//ஆனால்.. இந்தக் கதையில் நடந்ததைப் போன்ற நிகழ்வுகளுக்கு நிரந்தரமானத் தீர்வு ஒன்று வருமா? :'(//

தீர்வு வராது .....இந்த மாதிரி பதிவுகளுக்கு "உச்" கொட்டி பின்னுட்டம் வேண்டுமானால் வரும் ....

உதாரணத்துக்கு அநாதை இல்லங்களில் நெறைய குழந்தைகள்,முதியவர்கள் இருப்பார்கள்.......சில நல்ல உள்ளம் கொண்டவர்கள் நடத்தி கொண்டு இருப்பார்கள்........அங்கு செல்லும் சிலர் பிறந்த நாளுக்கோ ,குறிப்பிட்ட விசேச தினதுக்கோ நன்கொடை கொடுப்பார்கள் ......எதோ இல்லங்கள் ஓடி கொண்டு இருக்கும்......
உண்மையில் குழந்தைகளுக்கு பணத்தை விட தேவை அன்பு .....

நமது நாட்டில் நெறைய பேர் இரண்டு குழந்தை ,முன்று குழந்தை என்று பெற்று கொள்கிரார்கள்......
ஒரு குழந்தை பெற்று கொண்டு ...ஒரு குழந்தையை தத்து எடுத்து கொண்டால் பெருமளவு பிரச்சினை தீரும் .....

என்ன இருந்தாலும் எதோ ஒரு குழந்தை மீது எப்படி பாசமாக இருக்க முடியும் என்று உங்களுக்கு தோன்றலாம்?

உண்மையில் நாம் தேர்ந்தெடுக்கும் கணவன் or மனைவி கூட யாரோ ஒரு அன்னியர் தான் ஆரம்பத்தில் ........ஆனால் நாம் அவர்களை நம் உயிராக ஏற்று கொள்கிரோம்......சற்று நாட்களுக்கு முன் அன்னியராக இருந்தவர் ...ஒரு நாள் நம் உயிராகிகலந்து விடுகிறார் ....வேறுபாடு என்பது நம் ஏற்று கொள்ளும் மனதில் தான் ........மனமிருந்தால் மார்க்கமுண்டு......

அமெரிக்கா போன்ற நாடுகளில் முதியவர்,ஊனமுற்றோர் நலனை அரசாங்கம் கவனித்து கொள்கிறது ......ஆனால் இங்கு ...?

அமெரிகாவில் மக்கள் தொகை குறைவு .....இங்கு ........பன்னியே நம்மை பார்த்து சிரிக்கும் அளவுக்கு இருக்கிறது......

இப்போதே இப்படி என்றால் இன்னும் 30 வருடம் கழித்து பார்த்தால் ....முதியவர் அதிகம் கொண்ட நாடு நமது நாடாக தான் இருக்கும்..........பொருளாதார தேடல் போட்டி காரணமாக முதியவர்களை கவனித்து கொள்ள ஆள் இல்லாமல்முதியவர் இல்லங்கள் அதிகமாகலாம் ......

சரி ..சரி ....விடுங்க ......நாட்டுப் பிரச்சினை வீட்டில் இருந்துதான் ஆரம்பமாகிறது என்பதால் ........நீங்களோ நிரந்தர தீர்வை வேறு விரும்புவர் என்பதால் ....திருமணம் செய்து கொண்டபின் ஒரு குழந்தையை தத்து எடுத்து தீர்வை ஆரம்பித்து வையுங்கள் .......

மாட்டிகிட்டிங்களா ...........எல்லோரும் மாதிரி பத்தோட பதினொன்னா ஒரு பதிவ போட்டுட்டு எஸ்கேப் ஆகலானு பார்த்தீங்களா ?

ம்ம்மேமேஏஏஏ....ம்ம்மேமேஏஏஏ.....[இது தான் எங்க தலைவர் வில்லன் ரோபோ சிரிப்பு ...]

யுக கோபிகா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மனிதநேயம் மிகுந்த கவித்தாரகை சுபத்ரா அவர்களுக்கு கீழ் கண்ட கவிதை அர்ப்பணம் ....

http://yugagopika.blogspot.com/2010/07/blog-post.html

இப்படிக்கு
தோழி யுக கோபிகா



ஹ...ஹா....ஹா...இது எப்படி இருக்கு....[இது கூட எங்க தலைவரோட பதினாறு வயதினிலே வில்ல சிரிப்பு ....]

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

What u have said is True Vimal.. Thank you for ur comment.

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ VJR

Hmm.. :(

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ தனி காட்டு ராஜா

தனி காட்டில் கடும் தவம் புரியும் ராஜ யோகி தனி காட்டு ராஜா அவர்களே.. தங்களது ஆலோசனைக்கு மிக்க நன்றி.

நான் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கும் அளவுக்கு “lucky" யாக இருந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ யுககோபிகா

வாடி.. வா. ஏன் இவ்வளவு நாளா ஆளையே காணோம்?

தனி காட்டு ராஜா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//தனி காட்டில் கடும் தவம் புரியும் ராஜ யோகி தனி காட்டு ராஜா அவர்களே....//

எல்லாம் சுனைனா -வுக்காகத்தான்... என் தவத்தை மெச்சி சிவன் வரம் தருவான் ...ஆனால் அதற்குள் சுனைனாவுக்கு தான் வயது ஆகி விடும் என நினைக்கிறன் :))

//நான் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கும் அளவுக்கு “lucky" யாக இருந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.//

மனமிருந்தால் மார்க்கமுண்டு :)

//வாடி.. வா. ஏன் இவ்வளவு நாளா ஆளையே காணோம்?//

அவளுக்கென்ன...ஓடி விட்டாள்......அகப்பட்டவன் நான் அல்லவா ?

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

:) :) :) :)

pichaikaaran said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

naan solla vendiyathai , maanpimuku thanikkaattu raaja solli vittathaal, aduththa padhivil , avarukku mun comment pottu vidukiren

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ பார்வையாளன்

ரொம்ப நன்றி.. ஒரு குரூப்பாத் தான் கெளம்பியிருக்கீங்க.

மர்மயோகி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நிறைய பேர் இதுமாதிரி ஏமாற்றுவதால் யார் ஒரிஜினல் யார் போலி என்று குழம்ப்பம் வருவதால் இதுபோன்றவர்களை நம்ப முடிவதில்லை..எனினும் நம் மனதில் அவர்களைப் பார்த்தவுடன் ஓர் அனுதாபம் இறக்கம் தோன்றுமே அதுவே நமக்கு நன்மைதான்..
மற்றபடி அவன் நம்மை ஏமாற்றுகிறான இல்லையா என்று ஆராய்ந்து கொண்டிருக்கத் தேவை இல்லை..அவரவர் செய்தது அவரவர்க்கே..யாரும் யாருடைய நன்மையிலும் தீமையிலும் பங்கு போட முடியாது..

R.Gopi said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நிரந்தர தீர்வு வருவதற்கு ஒன்றும் வாய்ப்பில்லை...

ஆனால், இது போன்ற நிகழ்வுகளுக்கு அவர்களும் பொறுப்பாகிறார்கள்...

ஒரு அரசாங்க அலுவலகத்தில் இது போல் ஒரு மாற்று திறனாளி ஏதோ உதவிக்காக வந்திருந்தார்... கூடவே அவரின் குடும்பமும்... அவருக்கு 7 குழந்தைகள்...

அவரின் அன்றாட சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் அந்த நிலையில் அவரின் குடும்ப எண்ணிக்கை மொத்தம் 9 என்றால், அடிப்படையில் யார் மீது தவறு?

மதுரை சரவணன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அருமை.

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates
This comment has been removed by a blog administrator.
சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ மர்மயோகி

ஒரு யோகி மாதிரியே பேசுறீங்களே! உண்மை தான். அது போன்ற தருணங்களில் நம்முடைய உள்மனது சொல்வதை நம்ப வேண்டியுள்ளது.

ஒரு காலக்கட்டத்தில், நானும் இது போன்று சாலையில் செல்பவர்களுக்கு உதவி செய்து அவர்களை ஊக்குவிக்கக் கூடாது என்று எண்ணி ஒன்றும் செய்யாமல் சென்றிருக்கின்றேன். மனதிற்குப் புறம்பாக அப்படி செய்வதை விட, மனது சொல்கிறவாறு நம்மால் ஆன உதவியைச் செய்துவிட்டுப் போய்க் கொண்டே இருக்கலாம் என்றே தோன்றுகிறது. என்ன சொல்றீங்க?

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ R.Gopi

ஆமா கோபி அண்ணா. இப்பக் கூட நிறைய இடங்களில், குறிப்பாகக் கிராமங்களில் இது மாதிரி நடந்துகிட்டுத் தான் இருக்கு.

They need to be made aware of "Over Population" and educated to follow birth control methods.

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ மதுரை சரவணன்

எதைச் சொல்றீங்க?

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

hm great.

continue your good works

”தளிர் சுரேஷ்” said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சிறப்பான கதை! நீங்கள் சொல்வது போல இது போன்ற நிகழ்வுகள் தொடர்கதையாக இருக்கின்றன. தீர்வு எப்போது வருமோ? வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்!

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ siva
Thank U!

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

வணக்கம்

வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் அருமையான கதை நல்ல மொழிநடையில் வாசக உள்ளங்களை கவரக்கூடிய வகையில் அமைந்துள்ளது பார்வைக்கு http://blogintamil.blogspot.com/2013/03/blog-post_13.html
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@s suresh

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! இது கதை அல்ல. நிஜமாக நடந்தது..

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@2008rupan

மிக்க நன்றி ரூபன். வலைச்சரத்தில் பார்த்துவிட்டேன். மிக்க மகிழ்ச்சி.

இது கதையாக எழுதப்பட்டது அல்ல. நிஜமாக நடந்ததைத் தான் இங்கே எழுதியுள்ளேன். எனது ப்ளாகில் சிறுகதைகளைத் தனியாக ஒரு லேபிள் போட்டுக் கொடுத்துள்ளேன். நன்றி :)