ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி :-)
நானும் ப்ளாக்-அ ஆரம்பிச்சு இவ்வளோ நாளாச்சு. எதாவது ஒரு நல்ல போஸ்ட் போடலாம்னா எதுவுமே தோனமாட்டேன்னது. சரி.. 'பேசுகிறேன்'-னு தலைப்ப வச்சுக்கிட்டு பேசாமலே இருந்தா நம்ம followers-குக் கோபம் வருமேனு (என்ன.. பேசினாத் தான் வருமா?) சட்டு புட்டுன்னு ஒரு பதிவைப் போட்டுட்டேன்.
ஐன்ஸ்டீன் சொல்லிருக்கார்.. "There are two ways to live your life. One is as though nothing is a miracle. The other is as though everything is a miracle".
இதை நிறைய தடவ நான் யோசிச்சுப் பார்க்கிறதுண்டு. சின்ன வயசுல பார்த்தீங்கனா பாரா பட்சம் இல்லாம எல்லா விஷயமுமே நமக்கு அதிசயமாத் தான் தெரியும். அதிலும் அதிகம் பேசாத (என்னை மாதிரி) குழந்தைகள், தான் நினைக்கிறத எல்லாம் யார்கிட்டயும் கேட்கவும் செய்யாது. மனசுக்குள்ளயே போட்டு future reference-காக பூட்டி வச்சிரும்.
இப்படி நடந்த ஒரு விஷயம்.. அப்ப எனக்கு வயசு 4 இருக்கும். (ஐயோ.. ஓடிப் போயிராதீங்க. முழுசாக் கேளுங்க). இராத்திரி எத்தன மணி இருக்கும்னு தெரியாது. நடு தூக்கத்துல எழுந்து நான் ஒன் பாத்ரூம் போகணும்னு எங்க அப்பாவ எழுப்பி விட்டேன். சும்மா வீட்டுக்குப் பக்கத்துல வெட்டவெளி தான். எங்கேயோ தூரத்துல இருந்து சாலையில் வாகனங்கள் போற சத்தம் எனக்குக் கேட்டது. வானத்துல ஏரோப்ளேன் பறக்குற சத்தம் மாதிரி. ஒரு சந்தேகத்துல எங்க அப்பா கிட்ட கேட்டேன்.
"இது என்ன சத்தம் பா"
"அது.. வானத்துல லாரி போகுதுல.. அந்த சத்தம்". இது தான் எங்க அப்பா சொன்ன பதில். (அதுசரி.. நடு தூக்கத்துல தூங்கிட்டு இருந்த அப்பாவ எழுப்பிவிட்டுக் கேட்டா அவர் என்ன சொல்லுவார்?)
நீங்க நம்புவீங்களோ இல்லையோ.. விவரம் தெரிஞ்சு ரொம்ப நாளைக்கு அப்புறம் கூட வானத்துல லாரி பறக்கும்னு நான் நம்பிகிட்டு இருந்தேன். அப்பா சொன்ன அந்த நிமிஷத்துல இருந்து வானத்துல பறக்குற காக்கா...குருவி...குப்பைல இருந்து எதைப் பார்த்தாலும் ஒரு அதிசயம்.. ஆச்சர்யம். இப்படி ஒரு நினைப்போட இருந்தவளுக்கு.. ஒருநாள் இந்த UFO... UFO-னு கேள்விப்பட்ட உடனே ஏற்பட்ட அதிசயத்துக்கு அளவே இல்ல.
என்ன அது.. UFO? Unidentified Flying Objects-ஆம். வானத்துல பறக்குற "பறக்கும் தட்டு". பார்க்க வட்டு(disk) மாதிரி தன் இருக்குமாம். திடீர்னு மின்னல் மாதிரி வந்துட்டு சில நொடிகள் இருந்துட்டு மறைஞ்சு போயிருதாம். சில நேரம் பாலைவனம் மாதிரி இடங்களில தரையிறங்கி அதுக்குள்ள இருந்து யாரோ எந்திர (ரோபோ ரஜினி இல்லப்பா) மனிதர்கள் (aliens) மாதிரி இறங்குறதையும் சிலபேர் பார்த்திருக்காங்களாம். நம்ம பார்க்கிறோம்னு தெரிஞ்ச மறு வினாடியே உள்ள ஏறி ஸ்வைங்ங்...ங்குனு பறந்து போயிருதாம் அந்த ஏலியன்ஸ். இத சின்ன வயசுலேயே படிச்சு ரொம்ப ஆச்சர்யப்பட்டேன்.
இந்த மாதிரி அப்பப்ப நடந்துட்டே இருந்ததுனு கேள்விபட்டேன். இப்ப சில நாட்களுக்கு முன்னால் (Oct 6, 2010) சீனாவில எட்டாவது தடவையா ஒரு விமான நிலையத்துல UFO வந்து அதுனால விமானப் போக்குவரத்துகளை எல்லாம் ஒரு மணி நேரம் நிறுத்தி வச்சாங்களாம்! என்ன கொடுமை சரவணா இது!!
விமானப் போக்குவரத்துக் காவலர்கள் தங்களது ராடார் கருவியின் மூலம் அந்த வாகனம் வந்ததை உறுதி செஞ்சிருக்காங்க. நிறைய தடவை விமானிகள் தான் இந்த UFO-களை அதிகமா கண்டுபிடிக்கிறாங்க. ஏன்னா ஒரு வேளை அவங்களுக்குத் தான் வானத்துல போற ஹெலிகாப்டர் ஏரோப்ளேன் ஜெட் மாதிரி வானூர்திகளுக்கும் இந்த மாதிரி வித்தியாசமான UFO-களுக்கும் உள்ள வித்தியாசம் தெரியும் போல.
இது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப் பட்ட ராணுவச் செயலாகவும் இருக்கக் கூடும்னு சீன அரசு அலர்ட்டா இருக்காம்.
பொதுவா இதப் பத்தி நம்பாதவங்க எல்லாம் விண்வெளியில் பறக்கும் விண்கற்கள், வால் நட்சத்திரங்கள், வேறு சில வானூர்திகள், வானத்தில் நம் கண்களை ஏமாற்றும் சில ஒளிப் பிளம்புகள் இவை தான் UFO-க்கள்னு தவறாக எண்ணப்படுகிறதுனு சொல்றாங்க. இருந்தாலும் பார்க்கிறவங்க அதைப் படமும் பிடிச்சுக் காட்டும் போது நம்மளால நம்பாம இருக்கமுடியல.
இதப் பத்தி இன்டர்நெட்ல பாக்கலாம்னு வந்தா... அம்மாடியோவ்.. UFO பத்தி கிட்டத்தட்ட 2000 பதிவுகள், 400 புகைப்படங்கள், 500 கேஸ்கள்னு ஒரு பெரிய தளமே இருக்கு! www.ufoevidence.org போய்ப் பாருங்க. இதுல என்ன சொல்றாங்கனா நிச்சயமா பூமியைத் தவிர வேற சில கிரகங்களில நம்பள மாதிரியோ வேற மாதிரியோ மனிதர்கள்(aliens) இருக்காங்கங்கறதுல சந்தேகமே இல்லையாம்!! நாம இன்னும் அவங்களக் கண்டுபிடிக்கவே இல்லை. ஆனா, அவங்க நம்ம பூமிக்கே வந்து நம்மோட samples எடுத்துக்கிட்டு நம்மகிட்ட இருந்து ‘எஸ்’ ஆகிப் போறதப் பார்த்தா நம்பளவிட தொழில்நுட்பங்களில சிறந்தவங்களா இருப்பாங்கனு தான் எனக்குத் தோனுது.
வரிசையாப் புதுசு புதுசா கிரகத்தைக் கண்டுபிடிச்சிட்டே இருந்தாலும் இப்ப புதுசா பூமிய மாதிரியே ரொம்ப குளிரும் இல்லாம ரொம்ப வெப்பமும் இல்லாம உயிர்கள் வாழ்வதற்குப் பொருத்தமான மிதமான வெப்பநிலை உடைய ஒரு கிரகத்தைக் கண்டு பிடிச்சிருக்காங்களாம். இதையெல்லாம் கேட்கும்போது எனக்குத் தோனுறது ஒரே விஷயம் தான். மனிதனோட அறிவுக்கு எட்டாத எவ்வளவோ விஷயங்கள் கொட்டிக்கிடக்கு. என்ன தான் நாம பரந்து விரிஞ்ச அறிவோடு யோசிச்சுப் பார்த்தாலும் செயல்பட்டாலும் இயற்கையின் விநோதங்களை யாராலும் define பண்ணவும் முடியாது முழுமையா describe பண்ணவும் முடியாதுங்கறது தான்.
கொஞ்சம் இருங்க.. வெளியில எதுவோ சத்தம் கேட்குது. UFO-வா இருக்கும்னு நினைக்கிறேன். என்னது? நீங்களும் வரீங்களா?? வேண்டாங்க. வேஸ்டு. அது என்ன மாதிரி நல்லவங்க கண்ணுக்கு மட்டும் தான் தெரியுமாம் :-) சரி.. கமெண்ட்ஸ் போட மறந்துறாதீங்க. டாட்டா.
*
*
27 comments:
//அது என்ன மாதிரி நல்லவங்க கண்ணுக்கு மட்டும் தான் தெரியுமாம் :-) சரி.. கமெண்ட்ஸ் போட மறந்துறாதீங்க. டாட்டா. //
அவ் இது கொஞ்சம் இல்லை ரொம்பவே அதிகம்.....
அப்புறம் இந்த பறக்கும் தட்டு கொஞ்சம் விவகாரமான விஷயம்தான்
வானத்தில லாரியா ?? என்னை மாதிரியே அப்பாவியா இருந்து இருக்கீங்க (நான் இன்னும் அப்பாவிதான்)
@ LK
//(நான் இன்னும் அப்பாவிதான்)//
எல்லாரும் நம்புங்கப்பா..
UFO என்பதெல்லாம் உடான்ஸ்... ஆதாரமற்ற கட்டுக்கதை. இதைஎல்லாம் நீங்க நம்புவீங்களா? ஆச்சர்யம்.
@ UFO
நெருப்பில்லாம புகையாது. இதெல்லாம் பொய்யினு நிரூபணம் ஆகட்டும். அப்புறம் பார்க்கலாம் ;-)
அது சரி. யார் நீங்க :-)
இது உண்மையாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.. இந்த பிரபஞ்சத்தில் நாம் அறிந்ததெல்லாம் சொற்பமே ...
@ கே.ஆர்.பி.செந்தில்
அதே அதே :-)
:-)
@ சிவாஜி சங்கர்
இதுக்குப் பேர் தான் சிரிப்பா சிரிக்கிறதா?? 5 Smileys-ல ஒன்னு தான் Publish பண்ணினேன். Net problem or wat?
அன்பிற்கினிய சுபத்ரா .......,
நல்ல பகிர்வு...
/ /...குழந்தைகள், தான் நினைக்கிறத எல்லாம் யார்கிட்டயும் கேட்கவும் செய்யாது. மனசுக்குள்ளயே போட்டு future reference-காக பூட்டி வச்சிரும்.../ /
குழந்தைகள் கேட்கும் அபத்தமான கேள்விகளுக்கு மிக பொறுமையாக பதில் சொல்வதால் அவர்களின் அறிவுத்திறன் வளரும். ஆனால் பல நேரங்களில் அவர்களுக்கு புரியவைக்கமுடியாத கேள்விகளாகவே இருப்பதால் குழந்தைகளுக்கு யாரிடமும் கேட்க முடியாத கற்பனை உலகம் விரிகிறது.
/ /...இப்படி நடந்த ஒரு விஷயம்.. அப்ப எனக்கு வயசு 4 இருக்கும்.../ /
கடந்த(2009) வருடமா?
நன்றி..
மரங்களோடு மனிதம் வளர்ப்போம்...
அன்புடன்.ச.ரமேஷ்
@ s.ரமேஷ்
//அவர்களுக்கு புரியவைக்கமுடியாத கேள்விகளாகவே இருப்பதால் குழந்தைகளுக்கு யாரிடமும் கேட்க முடியாத கற்பனை உலகம் விரிகிறது.//
உண்மை உண்மை..
//கடந்த(2009) வருடமா?//
கடந்து போன வருடம் தான். 1991 ;-)
Interesting subject Subathra..
vaalthukkal.. Continue..
@ பயணமும் எண்ணங்களும்
Thank You a Lot :-)
அன்பிற்கினிய சுப்பாத்தா ...மன்னிக்கவும் சுபத்ரா .......,
எனக்கு பறக்கும் தட்டு பற்றி சில சந்தேகங்கள் ....விளக்கவும்.....
1 .) ஏன் வானத்தில் தட்டு மட்டும் பறந்து வந்து இறங்குகிறது ...? டம்ளர் ,சொம்பு,அண்டா ,குண்டா எல்லாம் ஏன் பறந்து வருவதில்லை ?
2 .) பறக்கும் தட்டுக்கும் நாம் சாப்பாடு சாப்பிடும் தட்டுக்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா ?
3 .) பறக்கும் தட்டுக்கு டிரைவர் மட்டும் தான் உண்டா?இல்லை கண்டக்டரும் இருக்க வாய்ப்பு உள்ளதா ?
4 .) கல்யாண வீட்டில் தட்டு திருடுவது போல ...இதை திருடி வர முடியுமா?
நன்றி..
சாப்பிடுவோம்....தொப்பையை வளர்ப்போம்...
பறக்கும் சொம்புடன் தனி காட்டு ராஜா
nalla pathivu..
thodaravum..
all the best..
sathish.
chennai
@ தனி காட்டு ராஜா
வந்துட்டான்யா.. வந்துட்டான்
1) ஏன் வானத்தில் தட்டு மட்டும் பறந்து வந்து இறங்குகிறது ...? டம்ளர் ,சொம்பு,அண்டா ,குண்டா எல்லாம் ஏன் பறந்து வருவதில்லை?
பதில்: அப்படியே வாய திறந்து வச்சிட்டு உட்கார்ந்திருங்க. எல்லாம் வரும்.
2) பறக்கும் தட்டுக்கும் நாம் சாப்பாடு சாப்பிடும் தட்டுக்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா?
பதில்: இல்ல. நீங்க சாப்பிடுற தட்டை விட சின்னதா தான் இருக்கும்.
3) பறக்கும் தட்டுக்கு டிரைவர் மட்டும் தான் உண்டா?இல்லை கண்டக்டரும் இருக்க வாய்ப்பு உள்ளதா ?
பதில்: பயோடேட்டா இருந்தாக் கொடுங்க. உங்களுக்கு வேணா சிபாரிசு பண்ணி பாக்குறேன்.
4) கல்யாண வீட்டில் தட்டு திருடுவது போல ...இதை திருடி வர முடியுமா?
பதில்: திருடிட்டு நேரா “மேல” போக வேண்டியது தான். ஓகே வா?
இந்த ‘சொம்ப’ என்னைக்கு விட போறீங்க? :-)
@ Satish
நன்றி சதீஷ்.
//பதில்: அப்படியே வாய திறந்து வச்சிட்டு உட்கார்ந்திருங்க. எல்லாம் வரும்.//
அறிவுக் கொழுந்து .....வாய திறந்து வச்சுக்கிட்டு உக்காந்திருந்தா வாய் வலி தான் வரும் ..
//இந்த ‘சொம்ப’ என்னைக்கு விட போறீங்க? :-)//
நான் என்னைக்கு ‘சொம்ப’ தூக்கினேன்.....அதை விடுவதற்கு .....
எவனுக்கும் எவளுக்கும் எக்காலத்திலும் சொம்பு தூக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை .......
வலையுலகத்துல சொம்பு தூக்கிகள் நெறைய பேரு இருக்கராணுக....அவனுக கிட்ட இதை சொல்லுங்க ........
@ தனி காட்டு ராஜா
ஐயையோ.. என்னங்க இது? இவ்வளோ கோபப் படுறீங்க? ராஜ யோகம் என்ன ஆச்சு?
//பறக்கும் சொம்புடன் தனி காட்டு ராஜா// இத நீங்க தானே சொன்னீங்க? ரைட். விடுங்க. கூல்ல்ல்..
//பறக்கும் சொம்புடன் தனி காட்டு ராஜா// இத நீங்க தானே சொன்னீங்க? ரைட். விடுங்க. கூல்ல்ல்..
ஒஹ்....அந்த அர்த்ததுல சொன்னிங்களா ......மன்னிக்கவும் ....தவறாக புரிந்து கொண்டேன் :)
உங்கள மாதிரியே இங்க ஒரு scientist பறக்கும் தட்டு பற்றி சொல்லி உள்ளார் :)
http://pichaikaaran.blogspot.com/2010/10/blog-post_21.html
படிச்சேன். சூப்பர் ஆர்ட்டிகிள். லின்க்குக்கு மிக்க நன்றி.. அதுசரி.. என்னை எதுக்கு scientist-னு சொன்னீங்க? Science book-அ எனக்குப் படிக்கக் கூடத் தெரியாதெ..
பறக்கும் தட்டு, கீழிறங்கும் போது, பிடித்து அதில் பலகாரமோ, சாப்பாடோ சாப்பிட முடியுமா?
முடிந்தால் பிடித்து வைத்து தகவல் கொடுக்கவும்... சாப்பாடு நான் ஸ்பான்சர்....
@ R.Gopi
தீபாவளிக்கு நல்ல சாப்பாடோ??? கேக்குறாங்கய்யா கேள்வி.. :-)
Nice one..
//இதையெல்லாம் கேட்கும்போது எனக்குத் தோனுறது ஒரே விஷயம் தான். மனிதனோட அறிவுக்கு எட்டாத எவ்வளவோ விஷயங்கள் கொட்டிக்கிடக்கு. என்ன தான் நாம பரந்து விரிஞ்ச அறிவோடு யோசிச்சுப் பார்த்தாலும் செயல்பட்டாலும் இயற்கையின் விநோதங்களை யாராலும் define பண்ணவும் முடியாது முழுமையா describe பண்ணவும் முடியாதுங்கறது தான். //
ம்ச்...ம்ச்...ம்ச்...எவ்ளோ பெரிய விசயம்...இப்படி சாதாரணமா சொல்லிட்டிங்க.... இருங்க அழுதுட்டு வரேன்....:)
@ "உழவன்" "Uzhavan"
Thank You!
@ நாஞ்சில் பிரதாப்™
சரிங்க. கர்சீஃப் வேணுமா?
Post a Comment