முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிரிப்புக்கு நான் பொறுப்பு :)


எப்படில்லாம் யோசிக்கிறாங்கப்பா...!! இந்த அறிவை ஆக்கப் பூர்வமாகப் பயன்படுத்தினா இந்தியா எங்கேயோ.......போயிடும்!! :-)

என் தம்பி(அபினேஷ்) ஸ்கூலுக்குப் போயிருந்தப்போ அவனோட மொபைலில் இருந்து சுட்ட குறுந்தகவல்கள் கீழே :-) மிகவும் ரசிக்கும்படி இருந்ததால் உங்களிடம் பகிர்ந்துகொள்ளத் தோன்றியது.

# கணக்கு டீச்சர்: நான் இவ்வளவு நேரம் பாடம் எடுத்ததுல உனக்கு என்ன தெரிஞ்சது?
மாணவன்: சாயங்காலம் ட்யூசன் போறது நல்லதுனு தெரிஞ்சது.

# படிக்கும் போது தூக்கம் வந்தா என்ன செய்யனும்?
நமக்குப் படிப்பு தான் வரல.. தூக்கமாவது வருதேனு தூங்கிடனும்.

# வேதனையோடு போன எனக்கு பச்சத்தண்ணி.. பட், வேடிக்கை பார்க்க வந்தவருக்கு பப்ஸ் & டீ!
இந்தக் கொடுமை எங்க நடக்குது தெரியுமா? ”EXAM HALL”

# சினம் கொண்ட சிங்கத்தை ஒரு ப்ளாஸ்டிக் கவரில் அடைக்க முடியுமா? முடியும்.. எப்படினு தெரியுமா? வந்து என் IDENTITY CARD-அ வாங்கிப் பாருங்க :)

# உன் நண்பனை அளவோடு நேசி; ஒரு நாள் அவன் உன் பகைவன் ஆகலாம்
உன் பகைவனை அளவோடு வெறு; ஒரு நாள் அவன் உன் நண்பன் ஆகலாம்.

# மெழுகுவர்த்திக்கு
உயிர் கொடுக்க
உயிர்விட்டது
தீக்குச்சி..
உயிர்கொடுத்த
நண்பனை
நினைத்து நினைத்து
உருகியது
மெழுகுவர்த்தி!!
That’s True Friendship

# பொண்ணுங்க ரக்ஷா பந்தனுக்கு ராக்கி கட்டி நம்மள அண்ணனாக்கும்போது, நாம ஏன் LOVERS DAY-ல பிடிச்ச பொண்ணுங்களுக்கு தாலி கட்டி அவங்கள “WIFE” ஆக்க கூடாது? யோசிங்க :) [ரொம்ம்ம்ப ஓவர்ல]

# பாஸ் மூவி டயலாக்:
படிக்கனும்….படிக்கனும்….5 யூனிட்டும் படிக்கனும்…ஒரு டாபிக் விடாம படிக்கனும்….ஒரே நாளில் படிக்கனும்
சந்தானம்: அதுக்கு நீ “INDEX” தான் படிக்கனும்

# PROFESSOR: YOU HAVE PASSED ALL THE PAPERS IN THIS SEM.. HA HA HA
STUDENT: என்னைக் கலாய்ச்சிட்டாராமா…

# EXAM CENTRE:
BOY told GIRL “All the Best”
GIRL replied “All the Best”
RESULT:
GIRL – 80 Marks
BOY – 08 Marks
MORAL: நல்லவங்க வாக்கு மட்டும் தான் பலிக்கும்

# FULL FORMS:
WIFE = Worries Invited For Ever
LOVER = Loss Of Valuable Energy and Rupees
FRIEND = First Relationship In Earth that Never Dies
BOYS = Beauty Of Youth Society
GIRL = Gorillas In Real Life

# பெத்த பொண்ணுக்கும் எக்ஸாம் பேப்பருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு என்ன தெரியுமா? ரெண்டையுமே கட்டிக் கொடுக்குற வரைக்கும் ஒரே தலைவலி தான்!

# பெத்த பையனுக்கும் எக்ஸாம் பேப்பருக்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா? ரெண்டையும் திருத்தவே முடியாது! :-)

# நீ என்ன அவ்வளவு அழகா?
உன்னைப்
பார்த்தவுடனே
அனைத்தும்
மறந்து விடுகிறதே!!
By EXAM HALL-ல் கொஸ்டீன் பேப்பர் பார்த்துக் கவிதை எழுதுவோர் சங்கம்.

# GIRLS: எக்ஸாம் டைம்ல நாங்க டிவி, கம்பியூட்டர், செல் எதையும் தொடமாட்டோம். உங்களால முடியுமா?
BOYS: ஹா..ஹா..ஹா.. நாங்களாம் ”புக்”கயே தொடமாட்டோம். அது உங்களால முடியுமா?

# கடைக்காரன்: வாங்க.. இந்த துணி கிழியவே கிழியாது.. வாங்கிப் பாருங்க.
*&&$^##: அப்போ எனக்கு 2 மீட்டர் எப்படி கிழிச்சுத் தருவ??
கடைக்காரன்: ????

# டாக்டர்: டய்லி ஒரு பீர் சாப்பிட்டா தூக்கம் நல்லா வரும்
நோயாளி: 10 பீர் சாப்பிட்டா?
டாக்டர்: தூக்க 108 வரும் :)

DISCLAIMER: இதெல்லாம் FORWARDED SMS தான். யாரையும் (Both Girls & Boys) புண்படுத்துறது என் நோக்கம் இல்ல.. இதெல்லாம் சீரியஸா எடுத்துக்காம அதுல இருக்குற HUMOUR மட்டும் எடுத்துக்கனும்னு வேண்டிக்கிறேன் :-)
*

கருத்துகள்

ரிஷபன்Meena இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லா தான் இருக்கு, ஆனா ஏங்க பல கலரில் போட்டு படுத்துறீங்க ?

வெறும் கருப்பு மை ஆவாதா ?
வார்த்தை இவ்வாறு கூறியுள்ளார்…
//பொண்ணுங்க ரக்‌ஷா பந்தனுக்கு ராக்கி கட்டி நம்மள அண்ணனாக்கும்போது, நாம ஏன் LOVERS DAY-ல பிடிச்ச பொண்ணுங்களுக்கு தாலி கட்டி அவங்கள “WIFE” ஆக்க கூடாது? யோசிங்க :)//

வெளயாட்டு பசங்க....
வாழ்கைன்னா என்ன,
உலகம்னா என்ன,
உண்மைனா என்ன,
"பொண்டாட்டி"னா என்னனு
தெரியாத அப்பாவிங்க.....
எல் கே இவ்வாறு கூறியுள்ளார்…
ஹஹஅஹஹா
சௌந்தர் இவ்வாறு கூறியுள்ளார்…
# பொண்ணுங்க ரக்‌ஷா பந்தனுக்கு ராக்கி கட்டி நம்மள அண்ணனாக்கும்போது, நாம ஏன் LOVERS DAY-ல பிடிச்ச பொண்ணுங்களுக்கு தாலி கட்டி அவங்கள “WIFE” ஆக்க கூடாது? யோசிங்க :) [ரொம்ம்ம்ப ஓவர்ல]/////

அதானே டேய் அந்த தாலி எடுத்துட்டு வா மவனே இனி யாராவது ராக்கி கட்ட வந்தா பாரு
வினோ இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லா சிரிச்சோம்...
நிலாமதி இவ்வாறு கூறியுள்ளார்…
காமடி எல்லாம் நல்லா இருக்குங்க . பகிர்வுக்கு நன்றி . நன்றி.
Ravi kumar Karunanithi இவ்வாறு கூறியுள்ளார்…
naan sirikkala.. bcz enaku sirikka theriyadhu. oorukkulla poi kettu parunga. naangalum periya aaludhaan.
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) இவ்வாறு கூறியுள்ளார்…
//# பொண்ணுங்க ரக்‌ஷா பந்தனுக்கு ராக்கி கட்டி நம்மள அண்ணனாக்கும்போது, நாம ஏன் LOVERS DAY-ல பிடிச்ச பொண்ணுங்களுக்கு தாலி கட்டி அவங்கள “WIFE” ஆக்க கூடாது? யோசிங்க :) [ரொம்ம்ம்ப ஓவர்ல]///

இதுக்கு ஏற்படும் பின்விளைவுகளுக்கு இந்த பிளாக் ஓனர் பொறுப்பாவாரா?
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
எல்லாமே அட்டகாசம்..
//GIRL = Gorillas In Real Life//
அடி தூள்! :))
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
# வேதனையோடு போன எனக்கு பச்சத்தண்ணி.. பட், வேடிக்கை பார்க்க வந்தவருக்கு பப்ஸ் & டீ!
இந்தக் கொடுமை எங்க நடக்குது தெரியுமா? ”EXAM HALL”"

GIRL – 80 Marks
BOY – 08 Marks
MORAL: நல்லவங்க வாக்கு மட்டும் தான் பலிக்கும்"

Super.....
தமிழ்க்காதலன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஹ..ஹ...ஹ...ஹ... சான்சே இல்லைங்க... அம்மாடி .... வயிறு குலுங்க சிரிச்சேன்.... இரண்டு நாளா ஏற்பட்டிருந்த மன அழுத்தத்துக்கும்.., இறுக்கத்துக்கும்... இதயத் தழும்புகளுக்கும்.... ஒரு நல்ல மருந்து சாப்பிட்ட திருப்தி... மனம் லேசாகுவதை உணர முடிகிறது...
சரியான நேரத்தில்... சரியான பதிவை போட்டு மனசுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்துட்டீங்க.... மிக்க நன்றி...
அனைத்துமே அருமை... அதில் மீண்டும் ரசிக்க வைத்தது....
# FULL FORMS:
WIFE = Worries Invited For Ever
LOVER = Loss Of Valuable Energy and Rupees
FRIEND = First Relationship In Earth that Never Dies
BOYS = Beauty Of Youth Society
GIRL = Gorillas In Real Life

# பொண்ணுங்க ரக்‌ஷா பந்தனுக்கு ராக்கி கட்டி நம்மள அண்ணனாக்கும்போது, நாம ஏன் LOVERS DAY-ல பிடிச்ச பொண்ணுங்களுக்கு தாலி கட்டி அவங்கள “WIFE” ஆக்க கூடாது? யோசிங்க :) [ரொம்ம்ம்ப ஓவர்ல]

இது நல்ல ஐடியாவா இருக்குற மாதிரி தெரியுது..... ( முறைக்காதீங்க... உங்களுக்கு பிடிக்கலைன்ன வேணாம்...)

இப்படியெல்லாம் சிந்திக்கிற தம்பிய எனக்கு பிடிச்சுப் போச்சுங்க...அவரோட திறமைக்கு வாழ்த்துக்கள்...
என்னை சிரிக்க வைத்ததற்கும் சேர்த்து.....
Madurai pandi இவ்வாறு கூறியுள்ளார்…
good comedy!!
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
Samudra
Thank You :-)

ரிஷபன் Meena
நன்றி. கண்ணை உறுத்தாத வண்ணங்களுக்கு மாற்றிவிட்டேன்.

வார்த்தை
//வெளயாட்டு பசங்க....
வாழ்கைன்னா என்ன,
உலகம்னா என்ன,
உண்மைனா என்ன,
"பொண்டாட்டி"னா என்னனு
தெரியாத அப்பாவிங்க//
Ha Ha Ha :-)

LK
நன்றி

சௌந்தர்
//அதானே டேய் அந்த தாலி எடுத்துட்டு வா மவனே இனி யாராவது ராக்கி கட்ட வந்தா பாரு//
சும்மா ஒரு பேசுக்குச் சொல்லிட்டா போதுமே. உடனே கிளம்பிருவாய்ங்க :)

வினோ
நன்றி

நிலாமதி
நன்றி.

Ravi kumar Karunanithi
ஓ.. அவங்களா நீங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
'பின்' வளைஞ்சா நான் ஏன் பொறுப்பேற்கனும் ;)

Balaji saravana
//
//GIRL = Gorillas In Real Life//
அடி தூள்! :))//
பார்ராஆஆஆ

Anonymous said...
Thank You :-)

தமிழ்க் காதலன்
நன்றி!
நன்றி!
நன்றி!

மதுரை பாண்டி
Thank You :-)
மாதேவி இவ்வாறு கூறியுள்ளார்…
:)))
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ மாதேவி

நன்றி மாதேவி :-)
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
hahaha

EXAM CENTRE:
BOY told GIRL “All the Best”
GIRL replied “All the Best”
RESULT:
GIRL – 80 Marks
BOY – 08 Marks
MORAL: நல்லவங்க வாக்கு மட்டும் தான் பலிக்கும்..ethu unmai...

ungalala ethanai peru fail agi ponagolo..
பெசொவி இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லா இருக்கு. உண்மையிலேயே பல இடங்களில் வாய் விட்டு சிரித்தேன்.
"தாரிஸன் " இவ்வாறு கூறியுள்ளார்…
//பொண்ணுங்க ரக்‌ஷா பந்தனுக்கு ராக்கி கட்டி நம்மள அண்ணனாக்கும்போது, நாம ஏன் LOVERS DAY-ல பிடிச்ச பொண்ணுங்களுக்கு தாலி கட்டி அவங்கள “WIFE” ஆக்க கூடாது?//

இந்த ஐடியா ரொம்ப நல்லா இருக்கே.....!!!
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ siva
ஆகா.. கிளம்பிட்டாய்ங்கய்யா :-)

@ பெயர் சொல்ல விருப்பமில்லை
நன்றி.. :-)

@ "தாரிஸன்"
ம்ம்... :-)
புலிகுட்டி இவ்வாறு கூறியுள்ளார்…
# FULL FORMS:
WIFE = Worries Invited For Ever
LOVER = Loss Of Valuable Energy and Rupees
FRIEND = First Relationship In Earth that Never Dies
BOYS = Beauty Of Youth Society
GIRL = Gorillas In Real Life// இது ரொம்ப நல்லா இருக்கு.
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ புலிக்குட்டி
இருக்கும் இருக்கும் :)
Radha இவ்வாறு கூறியுள்ளார்…
:-))))))))))))

//மெழுகுவர்த்திக்கு
உயிர் கொடுக்க
உயிர்விட்டது
தீக்குச்சி..
உயிர்கொடுத்த
நண்பனை
நினைத்து நினைத்து
உருகியது
மெழுகுவர்த்தி!!
//
very poetic and touching !
அப்புறம், ரக்ஷபந்தனுக்கு பெரும்பாலும் தங்களைத் தொல்லை செய்யும் ஆண்களைத் தான் பெண்கள் சகோதரனாக்குகிறார்கள். :-)
மிகவும் பிடித்த ஆண்களை அல்ல. இப்படிக்கு - லாஜிக் பார்த்தே அழிந்து போவோர் சங்கம். :-)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@Radha

:-) நல்ல சங்கம் தான்..
உதய குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
//சினம் கொண்ட சிங்கத்தை ஒரு ப்ளாஸ்டிக் கவரில் அடைக்க முடியுமா? முடியும்..எப்படினு தெரியுமா? வந்து என் IDENTITY CARD-அ வாங்கிப் பாருங்க//
ரொம்பவே சூப்பர்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்

முதன்முறையாக நான் ஒரு தொடர்பதிவு எழுதுகிறேன் :) என்னை எழுதச்சொல்லி அழைத்திருந்த அருண்பிரசாத் துக்கு நன்றி !!! பெண்குரலில் பெண்ணின் மனதைச் சொல்லும் பத்துப் பாடல்கள் . எனக்குப் பிடித்த நிறைய பாடல்களை அவரே எழுதிவிட்டார் :) அதனால் அவற்றை விடுத்து வேறு பத்துப் பாடல்களை நான் இங்கு கொடுத்துள்ளேன் :) *** 1. உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் படம் : குணா இசை : இளையராஜா பாடியவர் : ஜானகி , எஸ் வரலஷ்மி எழுதியவர் : வாலி   சில வரிகள் : ” உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார் யாரிவர்கள் மாயும் மானிடர்கள் ஆட்டி வைத்தால் ஆடும் பாத்திரங்கள் ” இந்தப் பாடலைக் கேட்கும்போதும் கேட்ட பின்னரும் மனதில் ஒரு இனமறியா உணர்வு ஏற்படுவதை நின்று நான் ரசித்ததுண்டு ! இருவர் குரலும் உணர்த்தும் வெவ்வேறு உணர்வுகள் ... அற்புதம் . *** 2. மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் படம் : பாக்யலக்ஷ்மி பாடியவர் : பி . சுசீலா இயற்றியவர் : கவிஞர் கண்ணதா...