கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய
தமிழ்க் குடியின் மணிமகுடமே..
பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே..
இன்று நீ இருந்தால்...
கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா..
அல்லது..
'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்..
காவியம் படைக்காமலே காணாமல் போன
நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும்
பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை!
ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும்
ஈரைந்து வயதில் இணையதளமும் என்று
சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா..
அல்லது..
கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை
கனவிலேயே கற்றுக் கொள்ளும்
ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை!
ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு
அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா..
அல்லது..
ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க
தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும்
ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை!
தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத
நம் வீர இளைஞர்களைக் கண்டு வீறுகொள்வாயா..
அல்லது..
தாய்நாட்டில் தரித்த அறிவுக் குழந்தையை
அயல் நாட்டில் பிரசவித்து ஆதாயம் தேடும்
நம் 'கற்ற' இளைஞர்களை எண்ணிக் கவலை கொள்வாயோ.. தெரியவில்லை!
என்னவாயினும்.. எதுவாயினும்..
பாரதியே.. இன்று நீ இருந்தால்..
பாரதியே.. இன்று மட்டும் நீ இருந்தால்..
பல கனவுகள் நனவாகி இருக்கும்;
சில தீய நிகழ்வுகள்
நடவாமலே நாடகமாகப் போயிருக்கும்....!!
44 comments:
:)
நன்றி வினோ :-)
பாரதியே.. இன்று நீ இருந்தால்..
பாரதியே.. இன்று மட்டும் நீ இருந்தால்..
பல கனவுகள் நனவாகி இருக்கும்;
உண்மைதான்...
அருமையான பதிவு... தொடருங்கள் .. வாழ்த்துக்கள்/...
பி.கு.: மகாகவி பாரதியின் பிறந்ததினத்தை முன்னிட்டு இந்தக் கவிதை. கல்லூரிக் காலத்தில் எழுதப்பட்டது.///
அப்போ உனக்கு காலேஜ் படிக்கும் போதே அறிவு இருந்து இருக்கு...உனக்கு குள்ளேயும் ஏதோ இருந்து இருக்கு பாரு
கவிதை நன்று.
:)
ஒண்ணுமே தோணாமல் கமென்ட் போடுவோர் சங்கம்
;);) ரைட்டுங்க.
அருமை.
(டெம்ப்ளேட் கமெண்ட் குரூப்)
பலரை ரவுத்திர தாரியாக உருவாக்கி இருப்பான் பாரதி...! இன்று இருந்திருந்தால்..!
பாரதி அல்லதுக்கு முன் ஆனந்திருப்பான் அல்லதிற்கு பின் அல்லவை கண்டு நிச்சயம் வெகுண்டிருப்பான்.
பாரதியின் பிறந்த நாள் நினவாக விளைவாக பிறந்த கவிதை அருமை...
அருமையான பதிவு...
@ சங்கவி
நன்றி :-)
@ அரசன்
மிக்க நன்றி :-)
@ சௌந்தர்
சே.. ஆமால?
@ மாதேவி
நன்றி :-)
@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
:-)
@ நர்சிம்
நன்றிங்க :-)
@ அன்பரசன்
நன்றி :-)
@ தமிழ் அமுதன்
அதில் சந்தேகம் ஏதுமில்லை!! நன்றி தமிழ் அமுதன் :-)
@ பத்மநாபன்
மிக்க நன்றி பத்மநாபன் :-)
@ வெறும்பய
நன்றி அண்ணா :-)
பாரதிக்கு மீசை
முளைத்தால் நீங்கள்
பாரதி தான்
மிக அருமை
என்ன வளம்
உங்கள் வார்த்தைகளில்
நன்றி தொடரட்டும்
உங்கள் தொண்டு...
பாரதியின் சிந்தனைகளைக் கொண்டு... முரண்பாடுகள் பேசிய விதம் அருமை. நாம் இரண்டுப் பக்க சமுதாயத்தைப் பெற்றிருக்கிறோம். இது தவிர்க்க முடியாத.... ஆனால், தவிர்க்க வேண்டிய ஒன்று. ஏற்றத் தாழ்வுகளுக்கு இருவருமே பொறுப்பு. ஒருவரை மட்டும் குறைசொல்லி பலன் இல்லை. பண்பட வேண்டும்... மனிதம். இங்கே 80 சதவிகிதத்துக்கும் மேலாக "மனித மிருகங்கள்" நடமாடுகின்றன. அதுதான் நம்முடைய பிரச்சனைகளின் மூலம்.
மனிதனாக பிறப்பதல்ல சிறப்பு.........
மனிதனாக இருப்பது.....
மனிதனாக இறப்பது.....
ஏனோ.... இங்கு முதல் வரிகள் மட்டுமே பலன் தருகிறது.
பதிவுக்கு வாழ்த்துக்கள்...... பாரதியை நேசிக்கும்.... பா ரதிக்கு.... பார தீ யிடமிருந்து.....
பாரதியின் சிந்தனைகளைக் கொண்டு... முரண்பாடுகள் பேசிய விதம் அருமை. நாம் இரண்டுப் பக்க சமுதாயத்தைப் பெற்றிருக்கிறோம். இது தவிர்க்க முடியாத.... ஆனால், தவிர்க்க வேண்டிய ஒன்று. ஏற்றத் தாழ்வுகளுக்கு இருவருமே பொறுப்பு. ஒருவரை மட்டும் குறைசொல்லி பலன் இல்லை. பண்பட வேண்டும்... மனிதம். இங்கே 80 சதவிகிதத்துக்கும் மேலாக "மனித மிருகங்கள்" நடமாடுகின்றன. அதுதான் நம்முடைய பிரச்சனைகளின் மூலம்.
மனிதனாக பிறப்பதல்ல சிறப்பு.........
மனிதனாக இருப்பது.....
மனிதனாக இறப்பது.....
ஏனோ.... இங்கு முதல் வரிகள் மட்டுமே பலன் தருகிறது.
பதிவுக்கு வாழ்த்துக்கள்...... பாரதியை நேசிக்கும்.... பா ரதிக்கு.... பார தீ யிடமிருந்து.....
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
:)
ஒண்ணுமே தோணாமல் கமென்ட் போடுவோர் சங்கம்//
என்னுடைய ”சும்மாவாச்சும் அருமையான பதிவு என்றிடாதோர் சங்கத்தை” கலைத்து விட்டு இந்த சங்கத்திலே என்னையும் இனைத்துக் கொள்கிறேன்.
அதென்னங்க, ஒரு பெண் கவிதை எழுதினால் கண்டிப்பா ஏய்! ஆணாதிக்க
வர்க்கமே என்ற வார்த்தை இருக்கனுமா ?
//அன்பரசன் said...
அருமை.
(டெம்ப்ளேட் கமெண்ட் குரூப்)
//
வழிமொழிகிறேன்
(பின்னூட்டம் காபி பேஸ்ட் பண்ணுவோர் சங்கம்)
கவிதை மிக அருமைங்க!
இந்துத்தாவினரிடம் சேர்ந்து கொள்வார். சுப்பிரமணியம் சுவாமி, சோ இராமசாமி, கும்பலுடன் சேர்ந்து கும்மியடிப்பார். நல்லவேளை இப்போது வாழவில்லை
ஒண்ணுமே தோணாமல் கமென்ட் போடுவோர் சங்கம்//
அதை ஆதரிப்போர் சங்கம்...
@Anonymous
இந்துத்தாவினரிடம் சேர்ந்து கொள்வார். சுப்பிரமணியம் சுவாமி, சோ இராமசாமி, கும்பலுடன் சேர்ந்து கும்மியடிப்பார். நல்லவேளை இப்போது வாழவில்லை//
அப்டி என்னங்க பிரச்சன அவர் மேல.... சரி அது ஏன் அனானி கமெண்ட், தைரியமா பேர் போடணும்ல? ஒரு கருத்து சொன்னா தைரியமா சொல்ல வேணாமா?
@ Siva
நன்றி :-) பாரதியைப் பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு சாதாரண பெண் நான். நீங்கள் கூறியது மிகையே!
@ தமிழ்க்காதலன்
மிக்க நன்றி :-) பாரதியை ரசிப்பதால் ரதி ஆனேனோ?
@ ரிஷபன்Meena
ஐயா, நான் ‘ஆதிக்க’ ஆண்வர்க்கம் என்று எழுதியிருப்பது ஆதிக்கம் செய்யும் ஆண்களை மட்டுமே குறித்து!!
@ பெயர் சொல்ல விருப்பமில்லை
நன்றி :-) சங்கத்துக்கு வாழ்த்துகள்.
@ சுந்தரா
நன்றி :-)
@ Anonymous
உங்களைப் பார்த்தால் பாரதியின் எழுத்துகளை முழுமையாகப் படித்திருப்பவர் போல் தெரியவில்லை. சொல்லொன்று செயலொன்றாக இருக்கும் கவிஞர் இல்லை அவர். அவரது எழுத்துக்கள் தான் அவரது வாழ்க்கை.
@ Arun Prasath
நன்றி அருண். அனானியை விட்டுத் தள்ளு.
இந்த ப்ளாக் ஓனர் என் காலில் விழுந்து கமெண்ட் போடுங்க அண்ணா என்று கெஞ்சி கேட்டு கொண்டதால். கவிதை ரொம்ப நல்லா இருக்குமா அப்படினு கமெண்ட் போடறேன்... :)))
@சுபத்ரா
//தாய்நாட்டில் தரித்த அறிவுக் குழந்தையை
அயல் நாட்டில் பிரசவித்து ஆதாயம் தேடும்
நம் 'கற்ற' இளைஞர்களை எண்ணிக் கவலை கொள்வாயோ.. தெரியவில்லை//
தாய் நாட்டுல நிறைய புள்ளைங்க இருக்காம் அதானால சரியா சோறு போடமாட்டறாங்க. அதனால அயல் நாட்டுக்கு வந்துட்டோம். வந்து சும்மா இல்லை. வெளிநாட்டு கரண்சி எல்லாம் நம்மா நாட்டுக்கு கொண்டு வந்து கரன்சி மதிப்பை உயர்த்தரோம். பார்த்து எதோ செய்யுங்க... :((
கவிதை நல்லா இருக்குமா.. :)
@ TERROR-PANDIYAN(VAS)
யார் கிட்ட கமென்ட் வாங்கினாலும் அது அண்ணன் கிட்ட ஆசீர்வாதம் வாங்குற மாதிரி வருமாண்ணா?? அதனால தான் கேட்டேன் :-)
பாரதி மட்டும் இன்று இருந்திருந்தால்,
”நெஞ்சு பொறுக்குதில்லையே
இப்படி வரிக்கு வரி வாக்கியத்தை
உடைத்து அதைக் கவிதை எனக்
காட்டும் அசடுகளை நினைத்து” என்றும்
கண்டதையும் எழுதி அதைக் கவிதை
என்பாரைக் கண்டால் கண்டபடி திட்டிவிடு பாப்பா என்றும்
பாடியிருப்பார்.
கவிதை என்று கண்டதையும் வைத்து கடைதிறக்கும் முன் யோசிக்கவும். அட்லீஸ்ட் பாரதியாரை உதேசித்தாவது.
@ பாரதி விரும்பி(?)
மிக அழகிய கவிதை நடையில்(என்று நினைத்து) நீங்கள் கொடுத்து இருக்கும் அறிவார்ந்த கருத்துக்கு நன்றி..
பாரதியின் பிறந்த நாள் கவிதை அருமை...
நல்ல கவிதைங்க
@ டெர்ரர் அண்ணன்
//தாய் நாட்டுல நிறைய புள்ளைங்க இருக்காம் அதானால சரியா சோறு போடமாட்டறாங்க. அதனால அயல் நாட்டுக்கு வந்துட்டோம். வந்து சும்மா இல்லை. வெளிநாட்டு கரண்சி எல்லாம் நம்மா நாட்டுக்கு கொண்டு வந்து கரன்சி மதிப்பை உயர்த்தரோம். பார்த்து எதோ செய்யுங்க... :((//
நம்ம நாட்டுல Braindrain ஏற்படுதுனு நான் சொன்னேன் அண்ணா. உங்கள மாதிரி திறமை வாய்ந்தவர்கள் எல்லாரும் வெளியே போயிட்டா நம்ம நாட்டுக்கு நஷ்டமேனு சொன்னேன்.
@ சே.குமார்
நன்றி!
@ VELU.G
நன்றி!
@ Siva
நன்றி :-) பாரதியைப் பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு சாதாரண பெண் நான். நீங்கள் கூறியது மிகையே!
@subathra
ஒரு விளையாட்டுக்கு சொன்ன அப்ப்டீய் நம்பிட்றது சின்னபுள்ள தனமா இருக்கு...
nandri..
கல்லூரிப் பருவத்தில் இளம் வயதில் இப்படித்தான் தீயன கண்டு மனம் பொங்கி எழும்! கவிதை ஊற்றுக்கள் அடி மனதிலிருந்து பீறிட்டுக் கிளம்பும்! உங்கள் கவிதை என் இளமைப்பருவத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தது! மேலும் மேலும் அருமையான கவிதைகள் எழுத என் இனிய வாழ்த்துக்கள்!!
நீங்கள் புதுமைப் பெண்ணோ ? பாரதியை கல்லுரி காலத்திலேயே பாட தொடக்கி விட்டீர் .பாராட்டுகள்
@ சிவா
இதுக்குனே வருவீங்களோ?? :)
@ மனோ அம்மா
மிக்க நன்றி :))
@ polurdhayanithi
பள்ளி காலத்திலிருந்தே பாரதியைப் பிடிக்கும் :) இது ஒரு கவிதை போட்டிக்காக எழுதப்பட்டது :)
முதலில் மகாகவியின் பதிவுக்கு தாமதாக வந்ததற்கு ம்ன்னிக்கவும்...
//என்னவாயினும்.. எதுவாயினும்..
பாரதியே.. இன்று நீ இருந்தால்..
பாரதியே.. இன்று மட்டும் நீ இருந்தால்..
பல கனவுகள் நனவாகி இருக்கும்;
சில தீய நிகழ்வுகள்
நடவாமலே நாடகமாகப் போயிருக்கும்....!!//
மகாகவி கண்ட சில கனவுகள் நனவாகியிருக்கின்றன...
"பாரதி இன்று இருந்தால்” சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள் மகாகவிக்கு நல்ல ஒரு சமர்ப்பனம்...
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
நேரமிருந்தால் மகாகவியின் வரலாற்றுத் தகவலையும் படிச்சு பாருங்கள்: மகாகவி பாரதி
@ மாணவன்
கருத்திற்கு மிக்க நன்றி!! தாங்கள் அளித்த லின்க் வேலை செய்யவில்லையே!! அந்தப் பதிவு தங்களது வலைப்பூவில் உள்ளதா??
//@ பாரதி விரும்பி(?)
மிக அழகிய கவிதை நடையில்(என்று நினைத்து) நீங்கள் கொடுத்து இருக்கும் அறிவார்ந்த கருத்துக்கு நன்றி.//
ஏன் மேடம் எதையும் நெட்டுவாக்கில் தான் பார்பீர்களா. அதை கவிதை என்று எங்காவது சொன்னேனா ?இல்லை சொன்னேனா ? அந்த மாதிரி கருமத்தை பண்றதுக்கு தான் உங்க மாதிரி ஆட்கள் வலையில் உண்டே ?
கூகிளில் தட்டச்சிட்டு இங்க ஒட்டினா இப்படி பிச்சி பிச்சிப் போடுது , அது என் தப்பா ? அதுக்கு போய் அதை கவிதைன்னு சொல்லி என் மாரியாதைய ஏன் கெடுக்குறீங்க.
வலை இருக்குங்குறதுக்காக எதையாவது பிட்டுபிட்டா அடிச்சு கவிதைன்னு சொல்லி போரடிக்காதீங்க.
கவிதை எழுதாதீக உங்களுக்கு வராதுன்னா கேட்கவா போறீங்க (அதெல்லாம் வியாதி, சரி பண்றது கஷ்டம்)அடுத்த முறை ஒன்றுக்கு மூன்று முறை படித்து விட்டு தமிழர்களை தண்டிக்கலாமா கூடாதா என யோசித்துவிட்டு
நிஜமாவே கவிதையாய் தோன்றினால் மட்டும்
வெளியிடவேனுமாய் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.
நல்ல கவிதை எப்படி இருக்கனும் என்பதற்கு.
பாரதி,பா.தாசன்,கண்ணதாசன்,கவிக்கோ,வைத்தீஸ்வரன்,கல்யாண்ஜி, மீரா, சிற்பி, வைரமுத்து, வாலி,பிரமிள்,சேஷாத்திரி, சற்குணம் போன்றவர்கள் கவிதைகளை படிக்கனும் சரியா.(பா.விஜய்-படிக்கக்கூடாது)
இந்தப் பின்னூட்டத்தை கோபம் இல்லாமல் ஆக்கபூர்வமாக எடுத்துக் கொள்கிறேன்.
உங்களிடம் எனக்கு என்ன வருத்தம் இருக்க முடியும், ஆதலால் மறுபடியும் இதை கவிதை எனச் சொல்லி என்னை அவமானப் படுத்த வேண்டாம்.
@ பாரதி விரும்பி
சரி சரி விடுங்க. கீழ விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டல... :))
Post a Comment