என்னடா இவளும் அழகுக் குறிப்புகள் எழுத ஆரம்பிச்சிட்டான்னு நினைக்கிறீங்களா? ஆமாங்க :-)
நிறைய பேர் ‘இயற்கை அழகே அழகு; செயற்கையாக எதுக்கு நாம ஏதாவது செய்யனும்?’ என்றும் ‘நானெல்லாம் பிறந்ததிலிருந்து லைஃப்பாய் சோப்பும் பான்ட்ஸ் பவுடரும் தவிர வேறு எதுவுமே என் முகத்திற்குப் போட்டது இல்லை; ஆனாலும் எனது தோல் இவ்வளவு தூய்மையாக இருக்கிறது’ (என் அம்மா தான்!) என்பது போன்ற வசனங்களும் பேசி நான் கேட்டிருக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரையில் இயற்கையாகவே எல்லாம் அமையப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். ஆனால் எல்லாமே பெர்ஃபெக்ட்டாக அமைந்திருப்பது சில பேருக்குத் தான். அப்படி அமையப் பெறாதவர்கள் சில சின்னச் சின்ன முயற்சிகள் பயிற்சிகள் செய்து நம்மை நாமே செம்மைபடுத்திக் கொள்வதில் தவறேயில்லை.
இந்தப் பகுதியில் கூந்தலைப் பராமரிப்பதற்கான சில டிப்ஸ் கொடுக்கிறேன். முயற்சி செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைத் தவறாமல் பதியுங்கள் ஃப்ரென்ட்ஸ்!
பொதுவாக அது இது என்று பலவற்றை முயற்சி செய்து பார்த்துவிட்டு நமக்கு எதுவும் சரிபட்டு வரவில்லையே என்று வருத்தப்படும் தோழிகளை நான் பார்த்திருக்கிறேன். என்னுடைய கருத்து என்னவென்றால் பல வழிமுறைகளைப் பின்பற்றுவதைவிட ஒரே ஒரு வழிமுறையைக் கான்ஸ்டண்டாகத் தொடர்ந்து செய்துவர உங்களுக்கு அதற்கான பலன் கேரண்டீட்!
சிலருக்குக் காய்ச்சிய மூலிகை எண்ணெய் ஒத்துக் கொள்வதில்லை. அலெர்ஜியாகிப் பொடுகுத் தொல்லை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் கீழ்க்கண்ட எண்ணெய்க் குளியலை எடுத்துக் கொண்டு, தினசரி உபயோகத்திற்குத் தூய்மையான தேங்காய் எண்ணேய் பயன்படுத்தினாலே போதுமானது!
1.
தேங்காய் எண்ணெய் (Coconut Oil)
2.
நல்லெண்ணெய் (Gingelly Oil)
3.
விளக்கெண்ணெய் (Castor Oil)
4.
ஆலிவ் எண்ணெய் (Olive Oil)
5.
பாதாம் எண்ணெய் (Almond Oil)
இவையனைத்தும் தலா ஒரு டேபிள் ஸ்பூன் (கூந்தல் அளவைப் பொறுத்து விகிதம் மாறாமல் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்) எடுத்துக் கொண்டு, மிதமான வானலியில் லேசாகச் சூடுபடுத்திக் கைபொறுக்கும் சூட்டோடு தலையில் தடவ வேண்டும். மயிர்க்கால்களில் நன்றாகப் படுமாறு தேய்க்க வேண்டும். மேலும் அடியிலிருந்து நுனிமுடி வரை நன்றாக எண்ணெயில் ஊறும்படி அப்ளை செய்துவிட்டு ஒரு 15 நிமிடங்கள் நம் கைகளால் ஸ்கால்ப்பில் வட்டவடிவில் (circular motions) மசாஜ் செய்துவிட்டு மேலும் ஒரு 30 நிமிடங்கள் ஊறவைத்துக் குளிக்க வேண்டும்.
சிலருக்குச் சீயக்காய் பிடிக்காது. சீயக்காய் தேய்த்துக் குளித்தால் கூந்தல் வறண்டுவிடும். அப்படிப்பட்டவர்கள் ஏதாவது மைல்டான ஷாம்பூ (preferably Dove) எடுத்துக் கொண்டு அதில் நிறைய அளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்துக் கொண்டு கூந்தலை அலசலாம். இப்படிச் செய்தால் கூந்தலுக்கும் நல்லது. Cost Effective – ஆகவும் இருக்கும். ஒரு சாஷேவே அதிகம் போலத் தோன்றும்!
மேலும் கவனிக்க வேண்டியது கூந்தலை அலசியவுடன் அப்ளை செய்யவேண்டிய கண்டிஷனர்! தலையில் ஷாம்பூ போட்டதால் ஏற்பட்ட பி.ஹெச். மாற்றத்தை இது சரிசெய்கிறது. கண்டிஷனர் போடும் போது கவனிக்க வேண்டிய விஷயம், அது முடியில் மட்டுமே படவேண்டும். மண்டையில் படக் கூடாது. பட்டால் பொடுகுத் தொல்லை ஏற்பட்டு முடி உதிர்தல் ஏற்படும். எனவே இதில் கவனமாக இருக்கவும்.
மேற்கண்ட இந்த எண்ணெய்க் குளியலுக்குப் பலன் நிச்சயம்!! வாரமொருமுறை தொடர்ந்து செய்து பயன்பெறுங்கள்.
இவை தவிரவும் கூந்தல் பராமரிப்பிற்கு நிறைய டிப்ஸ் உள்ளன.
2.
முட்டையின் வெள்ளைக்கரு அல்லது கற்றாழை அப்ளை செய்து ஊறவைத்துக் குளிக்கலாம். இது நல்ல போஷாக்கு அளிக்கும்.
3.
இரவில் வெந்தயத்தை நீரில் ஊறவைத்துக் காலையில் அதை அரைத்துத் தலையில் அப்ளை செய்து ஊறவைத்துக் குளிக்கலாம். குளிர்ச்சியளிப்பதோடு பொடுகு தொல்லையும் குறையும்.
4.
சீயக்காய் விரும்புபவர்கள் மருதாணி, கருவேப்பிலை, கரிசலாங்கன்னி, செம்பருத்தி, வேப்பயிலை, பூலாங்கிழங்கு, எலுமிச்சை/ஆரஞ்சுபழத் தோல்கள், ரோஜா இதழ்கள் மற்றும் சிகைக்காய் ஆகியவற்றை உலர்த்தி நிழலில் காயவைத்துப் பொடி செய்து தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.
மேலும் கவனிக்க வேண்டியவை:
- ஈரத்தோடு கூந்தலில் சீப்பை உபயோகிக்க வேண்டாம்.
- இரவில் படுக்கும் முன்பு சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து சீப்பால் நன்றாக வாரிவிட்டுக் கூந்தலைப் பின்னி ரிப்பன் வைத்து மடித்துக் கட்டிக் கொண்டு படுக்கலாம்.
- மாதமொருமுறை ஒரு வளர்பிறை நாளில் கூந்தலை லேசாக ட்ரிம் செய்யலாம்.
- தினமும் உணவில் புரதம் மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். கீரை, கருவேப்பிலை, பாதாம், பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
- மருத்துவரின் ஆலோசனையுடன் சிறிது காலம் அயர்ன் மாத்திரைகள்/டானிக் எடுத்துக் கொண்டால் பெண்களுக்கு மிக நல்லது.
மேற்கண்ட டிப்ஸ் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் பின்பற்றி வளமான தலைமுடியைப் பெறலாம். விடுபட்ட கருத்துகளைக் கமெண்ட்ஸ் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்களேன் ஃப்ரென்ட்ஸ்!!!
*
9 comments:
ரொம்ப நல்ல விஷயம்...
அனைவரும் அறிய வேண்டிய விசயம்...
ஷாம்பூ எவ்வளவு தான் மைல்ட் என்றாலும் சேதாரம் பண்ணாமல் விடாது. உடலில் அரித்தால் உப்புத் தாள் கொண்டு சொறிந்து கொள்கிறோமா ? இல்லையே !! முடிக்கு மட்டும் ஏன் இந்த அநீதி.
சீயக்காய் வறட்சியைத் தரும் என்றால், முட்டை வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து தேய்த்து குளிக்கலாம். இயற்கை தந்த ஷாம்பூ அது.எந்த செயற்கை ஷாம்பூவும் இது போல் நுரைக்காது, கேசத்தை அல்ட்ரா ஸ்பாட் ஆக மாற்றாது.
மஞ்சள் கரு மிக்ஸ் ஆகாத வரை , நாறாது.அதுக்கு நான் காரண்டி.
சந்திரமெளலீஸ்வரன்.
@சங்கவி
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
@Anonymous
நானும் முட்டையின் வெள்ளையைத் தேய்த்துக் குளித்திருக்கிறேன். இங்கு கூறியுள்ளவாறு எண்ணெய் தேய்த்து ஊறவைத்திருக்கும் போது முட்டையின் வெள்ளையை மட்டும் தேய்த்துக் குளித்தால் பயனளிக்குமா, குளித்த திருப்தி இருக்குமா என்பது தெரியவில்லை.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
நல்ல உபயோகமான குறிப்புகள். நன்றி.
@கீதா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா!
வீட்ல மேடம் பிரியாக இருக்கனால அடுத்து சமையல் குறிப்பும் போடுவாங்க.
அருமையான தகவல்கள் சுபத்ரா. கலக்குறே. நானும் தான் ஹமாம் சோப்பும் பாண்ட்ஸ் பவுடரும் தான். வேறெதும் போடறதில்ல.
@பொன்மலர்
நீங்கெல்லாம் இயற்கையிலேயே பியூட்டீஸ் ம்மா :) இருந்தாலும் இந்த எண்ணெய்க்குளியலை ட்ரை பண்ணிப்பார்த்துட்டுச் சொல்லேன்.
தமிழனின் பாரம்பரியம் இந்த ஆயில் குளியல்
Post a Comment