முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஐ.ஏ.எஸ். தேர்வுகள் - தமிழில்



Click to view large & clear

இந்தியக் குடிமைப் பணிகளுக்கான தேர்வு.. அதாங்க, ..எஸ். பரீட்சை. அந்தப் பரீட்சையின் முக்கியத் தேர்வில் நிறைய மாற்றங்களைக் UPSC கமிஷன் கொண்டு வந்ததிலிருந்து நாடு முழுவதும் ஒரே சலசலப்பு.  பிராந்திய மொழிகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நிறைய கட்டுப்பாடுகளை விதித்ததால் நிறைய எதிர்ப்புகள் வந்த வண்ணம் இருக்க, ஏற்கனவே தாமதமாக வந்த அறிக்கை hold செய்யப்பட்டது.


பொதுவாகவே, Hindi தெரியாததாலோ என்னவோ பெரும்பான்மையான தமிழர்களுக்கு Hindi பிடிப்பதில்லை. நிறைய பேருக்கு Hindi பிடித்திருக்கிறது. படிக்கத் தான் வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் உள்ளனர். படித்திருந்தால் வடமாநிலங்களுக்குச் சென்று செட்டில் ஆகியிருக்கலாம் என்றும் நினைக்கிறார்களோ என்னவோ. ஆனால் பொதுவாகவே Hindi என்றாலே இருக்கும் ஒரு aversion தமிழர்களுக்கு மட்டுமில்லை. வடமாநிலங்கள் பலவற்றுக்கும் கூட இருக்கிறது.. ஆச்சர்யமாக இருக்கிறதா?

உதாரணத்திற்கு, குஜராத்தின் மாநில மொழி Gujarati. அங்கிருக்கும் பெரும்பான்மையினருக்கு Hindi தெரியும் என்றாலும் Gujarati-க்குத் தான் first preference. சொல்லப்போனால் Hindi பேச அவர்கள் விரும்புவதேயில்லை. குஜராத்தில் business personalities தான் அதிகம். அரசு உத்யோகங்களையோ அடிக்கடி transfers இருக்கும் வங்கி உத்யோகங்களையோ அவர்கள் விரும்புவதேயில்லை. அதனால் அங்கிருக்கும் வங்கிகளில் வேலை பார்க்கும் 90% க்கும் அதிகமானோர் UP, MP, பிகார் போன்ற பிற மாநிலத்தவர் தான். Hindi பேசத் தெரிந்த அவர்கள் கூட குஜராத்துக்கு வரும் புதிதில் மொழிப் பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர்.

Hindi இந்தியாவின் official language தான்; national language இல்லை என்று குஜராத் உயர்நீதி மன்றம் மூன்று வருடங்களுக்கு முன்னர் கொடுத்த தீர்ப்பு ஒன்று முக்கியத்துவம் வாய்ந்தது. இதே போன்று மகராஷ்ட்ராவின் Marathi மொழிப் பற்றாளர்களைச் சொல்லலாம். 30 மாநிலங்களில் 10 மாநிலங்களில் தான் Hindi பெரும்பான்மை மக்களால் பேசப்படுகிறது. மீதமுள்ள 20 மாநிலங்களிலும் வெவ்வேறு பிராந்திய மொழிகள் தான் வழக்கிலிருக்கின்றன.

இதனால் நான் சொல்ல வருவது, Hindi மற்றும் English மொழிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து முன்னர் அறிவிக்கப்பட்ட UPSC Notification பலராலும் எதிர்க்கப்பட்டு இப்பொழுது புதிய அறிக்கை வெளியாகியுள்ளது :)

இதன்படி, பிராந்திய மொழிப் பாடங்களை யார் வேண்டுமானாலும் எடுத்துப் படிக்கலாம். பிராந்திய மொழிகளில் பரீட்சை எழுதலாம் :) :)

தமிழ் மீடியத்தில் படிக்காததால் நான் ஆங்கில வழியில் தான் பரீட்சை எழுதப்போகிறேன் என்றாலும் தமிழ் மீது இருக்கும் தீராத காதலால் ;) இன்ஷா அல்லா முதனிலைப் பரீட்சையில் தேர்வாகி முக்கியத் தேர்வுக்குப் போகும் போது தமிழ் இலக்கியத்தையே optional subject ஆக எடுத்துப் படித்துத் தேர்வெழுத உள்ளேன் :)

ஒரு வழியாக Mar 6, 2013, புதன்கிழமை அன்று UPSC Notification-க்கு நான் மறுப்பு தெரிவித்து ஒரு blog post எழுதியதைப் படித்து மனம் வருந்தித் திருந்தி  நமக்குச் சாதகமான corrigendum வெளியிட்டுள்ள கமிஷனுக்கு மிக்க நன்றி :P :D

கருத்துகள்

கோவை நேரம் இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள்....
பால கணேஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
முதலில் உங்களுக்கு எதிலும் வெற்றியே காண மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்! ஆங்கில வழிக் கல்வியை ஜப்பானிய மொழியில் படித்து அவர்கள் முன்னேறிய நாடாகி விட்டனர். ஆகவே பிராந்திய மொழியில் படிப்பதும் எழுதுவதும் எனக்கு தப்பாத் தெரியலை. நல்ல விஷயும்தான்! கருத்தை உள்வாங்கிட்டா சரிதேன்...!
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@கோவை நேரம்

நன்றி!
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@பால கணேஷ்

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி :)
நானும் பிராந்திய மொழி வழிக் கல்வியை வரவேற்கிறேன். அதனாலேயே புதிய அறிக்கையின் பேரில் மகிழ்ச்சி அடைகிறேன் :)
திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
சிறப்பாக எழுத வாழ்த்துக்கள் பல...
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Aameen Subadhra:)
(இன்ஷா அல்லா முதனிலைப் பரீட்சையில் தேர்வாகி முக்கியத் தேர்வுக்குப் போகும் போது தமிழ் இலக்கியத்தையே optional subject ஆக எடுத்துப் படித்துத் தேர்வெழுத உள்ளேன் :) )
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@Anonymous

:) :)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்

முதன்முறையாக நான் ஒரு தொடர்பதிவு எழுதுகிறேன் :) என்னை எழுதச்சொல்லி அழைத்திருந்த அருண்பிரசாத் துக்கு நன்றி !!! பெண்குரலில் பெண்ணின் மனதைச் சொல்லும் பத்துப் பாடல்கள் . எனக்குப் பிடித்த நிறைய பாடல்களை அவரே எழுதிவிட்டார் :) அதனால் அவற்றை விடுத்து வேறு பத்துப் பாடல்களை நான் இங்கு கொடுத்துள்ளேன் :) *** 1. உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் படம் : குணா இசை : இளையராஜா பாடியவர் : ஜானகி , எஸ் வரலஷ்மி எழுதியவர் : வாலி   சில வரிகள் : ” உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார் யாரிவர்கள் மாயும் மானிடர்கள் ஆட்டி வைத்தால் ஆடும் பாத்திரங்கள் ” இந்தப் பாடலைக் கேட்கும்போதும் கேட்ட பின்னரும் மனதில் ஒரு இனமறியா உணர்வு ஏற்படுவதை நின்று நான் ரசித்ததுண்டு ! இருவர் குரலும் உணர்த்தும் வெவ்வேறு உணர்வுகள் ... அற்புதம் . *** 2. மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் படம் : பாக்யலக்ஷ்மி பாடியவர் : பி . சுசீலா இயற்றியவர் : கவிஞர் கண்ணதா...