முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Help Please!


பொதுவா Picasa நான் அவ்வளவா use பண்றதில்ல. திடீர்னு ஒரு நாள் என்னோட Picasa Account-க்குப் போய் பார்த்தேனா.. அங்க என்னோட blog posts- உபயோகப்படுத்தின புகைப்படங்கள் எல்லாம் தானாவே upload ஆகி இருந்தது. சரி இங்க எதுக்கு வேஸ்ட்டா இருக்குனு எல்லாத்தையும் delete பண்ணிட்டேன் :) :)

அடுத்த நாள் என் blog திறந்து பார்த்தா ஒரு படத்தையும் காணோம் :( படத்துக்குப் பதிலா எங்க பார்த்தாலும் ஒரு grey minus symbol வெச்ச படம் தான் இருந்தது. எனக்கு அப்படியே அழனும் போல இருந்தது :( நிறைய google பண்ணிப் பார்த்தேன். Recovery Options இல்லைனு தெரிஞ்சது :) சரி இனிமேல் என்ன செய்றது.. Exam முடிஞ்ச உடனே எல்லாப் பதிவிலும் புதுசா upload பண்ண வேண்டியது தான்னு நினைச்சு விட்டுட்டேன்.

Widgets- படம் வராத மாதிரி settings மாத்தியிருக்கேன். Actually எல்லாப் பதிவிலும் முதல் படம் மட்டும் தான் இந்த மாதிரி ஆனது. வேற படங்கள் எல்லாம் அப்படியே தான் இருக்கு. அதோட நான் மொத்தமே 80 பதிவு தான் போட்டிருக்கேன் ;) அதனால தப்பிச்சேன்..

இருந்தாலும் இதுக்கு ஏதாவது Recovery Option இருந்தா மெயில் பண்ணுங்க ப்ளீஸ்.. :(

கருத்துகள்

பால கணேஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
இதுக்கு ரெகவரி ஆப்ஷன் எதுவும் இருககான்னு எனக்குத் தெரியலங்க சுபத்ரா. ஆனா உங்க அனுபவம் என்‌னை உஷார்படுத்திடுச்சு. நாங்க தப்பிச்சுக்குவோம்ல! அதுக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ் உங்களுக்கு!
திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
Picasa-வில் நீங்கள் கணினியில் உள்ள எந்தெந்த போல்டர்களை செலக்ட் செய்கிறோமோ, அதை மட்டும் தானாக upload ஆகும்... உங்கள் கணினியில் தேடுங்கள்... Blogs-படங்கள் கண்டிப்பாக இருக்கும்...

Backup எதுவும் எடுத்து வைக்கலையா...? இனிமேல் செய்யுங்கள்...
ஜீவன் சுப்பு இவ்வாறு கூறியுள்ளார்…
// எங்க பார்த்தாலும் ஒரு grey minus symbol வெச்ச படம் தான் இருந்தது. //

அடடடா ...! நாங்கூட இது என்ன புதூ டிசைனா இருக்கேன்னு நெனச்சேன் .

//அதோட நான் மொத்தமே 80 பதிவு தான் போட்டிருக்கேன் ;) அதனால தப்பிச்சேன்.. //

நாங்....

வேண்டாம்பா நா எதுனா சொல்லப்போயி , அப்புறம் ஏற்கனவே இருக்குற கடுப்புல அன் பாலோவ் பண்ணிடுவீங்க .

//இருந்தாலும் இதுக்கு ஏதாவது Recovery Option இருந்தா மெயில் பண்ணுங்க ப்ளீஸ்.. :(//

சத்தியமா தெரியாதுங்கோ...!
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@பால கணேஷ்

இந்தப் பதிவின் நோக்கமே அது தாங்க :)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@திண்டுக்கல் தனபாலன்

Backup எடுத்துப் பல நாள் ஆச்சு :( அதான் பிரச்சனையே.

பொதுவா, blog-ல போடுற படங்கள் எல்லாத்தையும் laptop-ல save பண்ணி தான் upload பண்ணுவேன். அதோட விட்டேனா? அந்தப் படங்களை எல்லாம் laptop-ல இருந்து ஒன்னு விடாம delete வேற பண்ணிட்டேன் :D

இப்போ இருக்குற ஒரே technique, படத்தோட name வெச்சு google பண்ணி மறுபடியும் upload பண்றதுதான்... :)

தங்களது பதிலுக்கு நன்றி!
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ஜீவன்சுப்பு

Grey Minus symbol புது டிசைனா? FYI, நான் பெரும்பாலும் வண்ணப் படங்களைத் தான் என் blog-ல போடுவேன். உங்களை மாதிரி white, grey, black எல்லாம் எப்பவாது தான் :)

சரி உங்ககிட்ட ரொம்ப நாளா கேட்க நினைக்கிற கேள்வி.. ஏன் வண்ணத்துப்பூச்சினு பேர் வெச்சுகிட்டு உங்க ப்ளாக் முழுசும் ஒரே Black & White ஆ வெச்சிருக்கீங்க :(

BTW, ஒரு பிரபல பதிவரை, ஒரு எழுத்தாளரை, ஒரு எம்.பி.ஏ. கிராஜுவேட்டை எப்படி நாங்க unfollow பண்ணுவோம்? NEVER ;)
dsfs இவ்வாறு கூறியுள்ளார்…
பொதுவா ப்ளாக்கர்ல நாம அப்லோடு பண்ற படங்கள் ஒரிஜினலா சேமிக்கப்படற இடம் தான் பிகாசா. பிகாசால்ல அழிக்கும் போதே கேட்டிருக்கும். அந்த படங்களை உங்க கூகிள் கணக்கிலிருந்தே நிரந்தரமா அழிச்சிரலாமான்னு கேட்டிருக்கும். நாம அங்க மட்டும் அழிஞ்சிடும்ன்னு நினைப்போம். இங்க அழிச்சா ப்ளாக்கர் படங்கள் போயிடும்னு பல பேருக்குத் தெரியல. இது எனக்கும் நடந்திருக்கு. இதை Recover பண்ண வழியே இல்லையே...
ஜீவன் சுப்பு இவ்வாறு கூறியுள்ளார்…
// ஏன் வண்ணத்துப்பூச்சினு பேர் வெச்சுகிட்டு உங்க ப்ளாக் முழுசும் ஒரே Black & White ஆ வெச்சிருக்கீங்க :( //

வண்ணத்துல வச்சுருந்தா இந்த கேள்வி கேட்ட்ருப்பீங்களா...? அதான் ...ஹா ஹா ஹா ... உண்மையான காரணம் வேற இருக்கு ...!

// BTW, ஒரு பிரபல பதிவரை, ஒரு எழுத்தாளரை, ஒரு எம்.பி.ஏ. கிராஜுவேட்டை எப்படி நாங்க unfollow பண்ணுவோம்? NEVER ;)//

கலாய்யி...! அய்யோ அய்யோ ...!

ஆங் அப்புறம் உங்க அட்ரஸ் கேட்ட அனுபவத்த சொல்லிருந்தேனே படிச்சீங்ககளா ...?
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@Ponmalar S

உனக்கு நடந்தப்பவே சொல்லியிருக்கலாம்லடி.. :( பரவால்ல விடு. இப்போ நிறைய பேருக்குத் தெரிஞ்சிருச்சு.
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@Ponmalar S

நீ இதைப் பத்தி ஒரு அலர்ட் போஸ்ட் போடுடீ.
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ஜீவன்சுப்பு

படிச்சேன். என்னைக் கலாய்ச்சிட்டாங்களாமா :D

see my reply :)
'பரிவை' சே.குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
நானும் பார்த்துவிட்டு அதிகமா இருக்கிறதே என்ன பண்ணலாமுன்னு யோசிச்சி அப்படியே விட்டுட்டேன்...

உங்க அனுபவம் எல்லாருக்கும் பாடமாகிவிட்டது....

ரெக்கவரி ஆப்சன் எதுவும் இருக்கான்னு கூகிள்ல தேடிப் பாருங்க....

இனிய தமிழ் வருடப் பிறப்பு வாழ்த்துக்கள்...
பிரகாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
:( அடப் பாவமே! தேங்ஸ் ஃபார் த அலர்ட்.
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@சே. குமார்

நன்றி. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் :)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@பிரகாஷ்

U r welcome :) thank u
Madasamy இவ்வாறு கூறியுள்ளார்…
சுபத்ரா,
கூகுள் ல தேடி ஒரு tool கண்டுபிடிசிருக்கேன். try பண்ணி பாத்துட்டு சொல்லுங்க. இத நான் use பண்ணினது இல. ஒரு முயற்சி செஞ்சு பாருங்க..!

http://www.yodot.com/photo-recovery/of-deleted-photos.html

இந்த லிங்க் ல உள்ள சாப்ட்வேர் அ டவுன்லோட் பண்ணி, இன்ஸ்டால் பண்ணனும். நீங்க பிக்காச ல இருந்து டெலீட் பண்ணும் போது recycle bin க்கு கண்டிப்பா போகும். நீங்க அதுல இருந்தும் delete பண்ணிருந்தா.. இந்த software உதவியா இருக்கும்.

use பண்ணிட்டு சொன்னா மத்தவங்களுக்கும் useful ஆ இருக்கும். நன்றி !
Madasamy இவ்வாறு கூறியுள்ளார்…
சுபத்ரா,
கூகுள் ல தேடி ஒரு tool கண்டுபிடிசிருக்கேன். try பண்ணி பாத்துட்டு சொல்லுங்க. இத நான் use பண்ணினது இல. ஒரு முயற்சி செஞ்சு பாருங்க..!

http://www.yodot.com/photo-recovery/of-deleted-photos.html

இந்த லிங்க் ல உள்ள சாப்ட்வேர் அ டவுன்லோட் பண்ணி, இன்ஸ்டால் பண்ணனும். நீங்க பிக்காச ல இருந்து டெலீட் பண்ணும் போது recycle bin க்கு கண்டிப்பா போகும். நீங்க அதுல இருந்தும் delete பண்ணிருந்தா.. இந்த software உதவியா இருக்கும்.

use பண்ணிட்டு சொன்னா மத்தவங்களுக்கும் useful ஆ இருக்கும். நன்றி !

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்

முதன்முறையாக நான் ஒரு தொடர்பதிவு எழுதுகிறேன் :) என்னை எழுதச்சொல்லி அழைத்திருந்த அருண்பிரசாத் துக்கு நன்றி !!! பெண்குரலில் பெண்ணின் மனதைச் சொல்லும் பத்துப் பாடல்கள் . எனக்குப் பிடித்த நிறைய பாடல்களை அவரே எழுதிவிட்டார் :) அதனால் அவற்றை விடுத்து வேறு பத்துப் பாடல்களை நான் இங்கு கொடுத்துள்ளேன் :) *** 1. உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் படம் : குணா இசை : இளையராஜா பாடியவர் : ஜானகி , எஸ் வரலஷ்மி எழுதியவர் : வாலி   சில வரிகள் : ” உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார் யாரிவர்கள் மாயும் மானிடர்கள் ஆட்டி வைத்தால் ஆடும் பாத்திரங்கள் ” இந்தப் பாடலைக் கேட்கும்போதும் கேட்ட பின்னரும் மனதில் ஒரு இனமறியா உணர்வு ஏற்படுவதை நின்று நான் ரசித்ததுண்டு ! இருவர் குரலும் உணர்த்தும் வெவ்வேறு உணர்வுகள் ... அற்புதம் . *** 2. மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் படம் : பாக்யலக்ஷ்மி பாடியவர் : பி . சுசீலா இயற்றியவர் : கவிஞர் கண்ணதா...