There should be no fear of death, for the death of the body is but a gentle passing to a much freer life – Helen Greaves

At his best, man is the noblest of all animals; separated from law and justice he is the worst – Aristotle

What's in a name? That which we call a rose by any other name would smell as sweet - Shakespeare

தமிழ் 1,00,000 ஆண்டுகள் பழமையானதா?

Jun 6, 2013


தமிழா? சமஸ்கிருதமா? என்று பல காலம் சண்டை போட்டு வந்த நம்மவர்களுக்கு நான் சொல்லப்போகும் இந்தச் செய்தி முறையே ஆச்சர்யமாகவோ அதிர்ச்சியாகவோ இருக்கலாம்.


இரண்டு மொழிகளிலும் ஒரே பொருளைத் தரக்கூடிய ஒரே வார்த்தைப் பிரயோகங்கள் பல இருக்கின்றன. இலக்கணம் மற்றும் எழுத்து முறைகளிலும் ஒற்றுமைகள் இருக்கின்றன. அவை தமிழுக்குச் சொந்தமா? இல்லை சமஸ்கிருதத்திற்குச் சொந்தமா? எனப் பல விவாதங்கள் நடந்துவந்த நிலையில் பன்மொழி அறிஞர் திரு. சாத்தூர் சேகரன் அவர்களின் ஆய்வு அனைவரது கருத்தையும் கவர்ந்துள்ளது. அப்படி என்ன அவர் ஆய்வு செய்துள்ளார் என்று அறிய ஆவலா? மேற்கொண்டு படியுங்கள்..

பல சுனாமிகள் தோன்றி குமரிக் கண்டத்தைச் சிறிது சிறிதாகச் சிதைத்து வந்தன. ஒவ்வொரு 10,000 ஆண்டுகளிலும் ஒரு பெரிய சுனாமி தோன்றியதாக ஆய்வறிஞர்கள் கூறி வருகின்றனர். இதனால் சில இலட்சம் மக்கள் மடிந்தனர். ஆனால், மிகச் சிறிதளவு நிலப்பகுதியே அழிந்தது.ஆனால் கடற்கோள் என்பது கி.மு.10,000 அளவில் தோன்றி கி.மு. 8,000 அளவு நீண்ட காலம் நடந்தது. இதனை மேலை நாட்டு ஆய்வாளர்கள் பெரும்பனிக்காலம் ( THE GREAT ICE-AGE ) என்கின்றனர். இதன் காரணமாகவே குமரிக் கண்டம் முற்றிலுமாகவே அழிந்தது.

முதல் பெருஞ்சுனாமி கி.மு. 60,000 ஆண்டுகளை ஒட்டி நிகழ்ந்ததாக ஆய்வறிஞர்கள் கூறினார்கள். இதற்கு அஞ்சியே குமரிக் கண்டத் தமிழர்கள் கட்டுமரங்களில் ஏறி ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆசிய கண்டங்களுக்குக் குடியேறினர். இதனால் அந்தக் கண்டத்து இன்றைய மக்களிடம் திரியாத தமிழ்ச் சொற்களும், திரிந்த தமிழ்ச் சொற்களும் பற்பல இலக்கணக் கூறுகளும் இன்றும் அழியாத நிலையில் உள்ளன.

ஆஸ்திரேலியப் பழங்குடிகள்

நீ...நீங்கள் என்பதை, நீ, நிங்க என்கின்றனர். நான், நாம் ( நாங்கள் ) என்பதை நா, நாங்க என்கின்றனர். கண் ஐம்புலன்களில் சிறந்த தலையாய புலன் என்பதால், அதனை புலன் என்கின்றனர்.

என் கண் - நா புலன், உன் கண் - நின் புலன், அவன் கண் - அவன் புலன் என்கின்றனர். பிரதி பெயர்கள் நாடு விட்டு நாடு போகாது. மேலும் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் கடந்த 50,000 - 30,000 ஆண்டுகளை ஒட்டியோ அல்லது அதன் பின்னரோ தமிழகத்துடன் தொடர்பு இல்லை.

ஆப்பிரிக்கப் பழங்குடிகள்

எள் + நெய் என்பதுதான் எண்ணேய் ஆயிற்று. எனவே OIL என்ற சொல்லுக்கு ஈடான தமிழ்ச் சொல் நெய் என்பதே ஆகும். தமிழகத்தில் நெய் என்ற சொல் பசுவின் நெய் என்றாகிறது. ஆனால், ஆப்பிரிக்காவின் வழக்கு மொழிகளில் நெய் என்பதே ஆயில். உண் என்ர வினைச் சொல் எகிப்து மொழியில் 4000 ஆண்டுகளுக்கு முன்பே உள்ளது.

தென் அமெரிக்கத் தமிழர்

அன்னை என்ற அருமையான அற்புதத் தமிழ்ச் சொல், தென் அமெரிக்காவில் ஒரு மொழியான இன்கா மொழியில் உள்ளது. சரி என்று நாம் கூறுவதைம் அவர்கள் கரி ( = ) என்கின்றனர். நம் பயிர் பச்சைகளுக்குக் கடவுளாகப் பச்சை அம்மன் என்று நாம் கூறுவதைப் போல், அவர்களும் தம் பயிர்க் கடவுளாகப் பச்சை அம்மன் என்றே வைத்துள்ளனர். 60,000 - 50,000 ஆண்டுகளாக நமக்கும் தென் அமெரிக்காவின் பல குடி மக்களுக்கும் தொடர்பு எதுவும் இருந்ததில்லை.

எனவே 60,000 ஆண்டுகளுக்கு மு8ன்னரே தமிழ் செம்மையான செம்மொழியாக இருந்தது என்றால் தமிழின் வயது ( 1,00,000 ) ஓர் இலட்சம் ஆண்டுகள் என்று கணிக்கலாம். வெறும் சொல் ஆராய்ச்சிச் சான்றுகள் மட்டுமில்லை; கரி, அணு ஆய்வுகளும் ஆண்டுக் கணக்கை உறுதி செய்கின்றன.

=====

எம்மொழியும் எம் மொழி : உலக மொழியறிஞர் சாத்தூர் சேகரனின் 'அகில மொழி' யின் அற்புதங்கள். உலக அறிஞர்கள் பார்வையில் "பன்மொழி அறிஞர்" சாத்தூர் சேகரன் பற்றி இப்படித்தான் பேசி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்:

"தமிழைப் பற்றி இது காறும் இத்தனை விரிவாக ஐரோப்பாவில் கூறிடவில்லை. எனவே சமஸ்கிருதம் இந்திய மொழிகளின் தாய் என்ற ஐரோப்பியரின் கருத்து இன்றளவும் மாறவில்லை. உங்கள் உரையாற்றல் எங்களுக்கு அதிர்ச்சியைத் தந்த போதிலும் தமிழே உலக மொழிகளின் தாய் என்ற கருத்தை நம்பத்தூண்டுகிறது"
-சமஸ்கிருதத்துறை தலைவர், லண்டன் பல்கலைக்கழகம், லண்டன்.

"நாங்கள் நினைத்தே பார்க்கவில்லை. ஹிப்ரு மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உறவு உண்டு என்று. உங்கள் உரையால் பல புதிய உண்மைகளை உலகிற்கு அறிவித்திருக்கிறீர்கள்"
- நூலகர், ஹிப்ரு பல்கலைக்கழகம், ஜெருசேலம், இஸ்ரேல்.

"பிரமிட் கட்டியவர்களான எங்கள் முன்னோர்கள் தமிழர்களா? தமிழர்கள்தான் உலக முழுவதும் பரவி இருந்தார்களா? வியப்பிறகுரிய செய்திகளைச் சொல்கிறீர்கள்"
- கெய்ரோ அருங்காட்சியகம், கெய்ரோ, எகிப்து.

"தமிழ் மொழியின் நீள அகலம் பற்றி உலகம் மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். உண்மையை வெளிக்கொணர நீங்கள் ஆற்றும் பணி அருமையானது. உங்களோடு இணைந்து பணியாற்ற நான் பெருமிதம் கொள்கிறேன்"
- டாக்டர் ஹக்பாக்ஸ், மெக்சிக்கன் பல்கலைக்கழகம், ஐக்கிய அமெரிக்கா.

"இந்திய மொழிகளை மட்டுமல்ல உலக மொழிகளை எல்லாம் அறிந்திருப்பதுடன் அவற்றின் வேர்ச்சொற்களை எல்லாம் கடகடவென கூறுவதை வியக்கிறேன். நான் சீனமொழி அறிந்தவன். ஆனால் நீங்கள் சீனமொழி தமிழ் மொழி உறவு கூறியதைக் கேட்டு மலைத்து நிற்கிறேன்"
- டாக்டர் அருணபாரதி, பெனாரஸ் பல்கலைக்கழகம், காசி.

இவர்களைப் போல இன்னும் பல்வேறு நாட்டு அறிஞர்கள் நம் தமிழரை அதுவும் ஒரு தமிழ்மொழி அறிஞரை புகழாரம் சூட்டிக் கொண்டிருக்கிறார்கள். "சங்கம் வைத்து தமிழ் வளர்த்த" மதுரையில் அகிலமொழி பயிலரங்கத்திற்கு பிரதிமாதம் வந்திருந்து தமிழ் மொழியின் தொன்மை பற்றியும், அதன் இலக்கணங்களையும், ஆதாரங்களுடன் தமிழ்ச் சொற்கள் அதிக மாற்றமின்றி எப்படி பிறமொழி சொற்களாகின்றன என்றும்... தமிழே உலகமொழிகளின் தாய்மொழி என்பதற்கும் பல்வேறு உதாரணங்களை அந்த 72 வயது இளைஞர் தமிழ்மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன் பொங்கு தமிழாக கீழ்க்கண்டவாறு மேற்கொள்காட்டி எடுத்துரைக்கிறார்.

களி (மண்) - Clay. பிறப்பு - Birth. பொறு - Bear. நாடுதல் - நாடு (ஜெர்மன்). கண் - கண் (சீனா). உப்பர் - ஊப்பர் (இந்தி).

தமிழ் சொற்களில் நடு எழுத்து மறைந்து உருவான சொற்கள்:

நாமம் - நாம் (இந்தி). தாழ்வு - தாவு (தெலுங்கு).
தமிழ் எதிர்மறை முன் ஒட்டுக்களுடன் புதிய சொற்கள்
இம் - Immoral. இல் - Illegal. நிர் - Nil. அன் - Unused. அவ/அப - Abuse.

தமிழ் சொற்களின் முன் எழுத்து விலகி புதிய சொற்கள் உருவாகின்றன.

பதின் - Ten. உருண்டை - Round. உருளை - Roll. அம்மா - மா (இந்தி). நிறங்கள் - றங் (இந்தி). உராய் - Rub. அரிசி - Rice

காரணப் பெயராகிய புதிய சொற்கள்:

தேங்குதல் - Tank. ஈனுதல் - Earn என்றும்

திசை எட்டும் என்ற தலைப்பின் வாயிலாக தமிழ்மொழி பயன்பாடு தமிழரின் நாகரீகம் பற்றியும் குறிப்பிடுகிறார்.

* சித்திரை முதல் நாள் வருடப்பிறப்பாக இஸ்ரேல்-லில் கொண்டாடப்படுகிறது.

* உணவில் வாசனைப் பொருட்களை அரேபியர்கள் பயன்படுத்துகிறார்கள்.

* பச்சை அம்மன் வழிபாடு என்ற பெயரில் தென் அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது.

* பல்லாங்குழி விளையாட்டு இன்றும் ஆப்பிரிக்காவில் நடைமுறையில் உள்ளது.

* தமிழகத்தில் நாம் கொண்டாடும் பொங்கல் தினத்தில் அதே நேரம் "ஹொங்கரோ ஹொங்கர்" என ஜப்பானி-ல் சூரியனை வணங்கி குரலிட்டு கொண்டாடுகிறார்கள்.

* கண்-கண் காண் - காண் காண மகேந்திர + வர்ம + பல்லவர் போல மா+சே+துங் சீனாவில் பேசப்படுகிறது.

* சேவல் சண்டை, திருமண சீர் வரிசை, மஞ்சள் துணி பயன்பாடு தாய்லாந்து-ல் இன்னும் இருக்கிறது.

ஆற்று மீன் என்பதை நறு நீரு மீன் என்று ஆஸ்திரேலியா பழங்குடியின மொழியில் பேசப்படுகிறது.

* மேலும் தமிழ் சொற்களின் முன் S என்ற எழுத்து சேர்ந்து ஆங்கில சொற்கள் எப்படி உருவாகின்றன.
S பேச்சு - Speech. S மெது - Smooth. S உடன் - Sudden. S நாகம் – Snake

* தமிழ் சொற்களின் முன் எழுத்துக்கள் மாறி உருவான சொற்கள்
எட்டு - ஆட் (இந்தி) பத்து - ஹத்து (கன்னடம்) கடை - கெடா (மலாய்) பூங்கொத்து - கொத் (ஜெர்மன்)

* இலக்கிய வழக்காக மலையைக் கல் என்பர். வடபெருங்கல் என்பது இமயமலையைக் குறிக்கிறது.
கல்லூர், குண்டுக்கல், கர்நாடகம்
(கல்அறை) கல்லறா - கேரளம்
கல்லூர் - ஆந்திரம்
கல்முனை - இலங்கை
கல்லினா பாட் - ரஷ்யா

* மலை என்ற தண்டமிழ்ச் சொல்லை மலைய, மலய, மாலயா என்று வட இந்திய மொழிகள் திரித்துப் பயன்படுத்துகின்றன. இமயமலை - ஹிமாலயா என்று மலையா (ஒருநாடு) மலேயா என்றும்

* மலை / மலா ஆகி லாம என மாறுகிறது. பிறழ் விதிப்படி போன்ற (LIQUID) இடையினம் தம்முள் மாறிக் கொள்வதால் லகரம் இங்கு யகரமாகிறது.

* மன் என்பதிலிருந்துதான் மனு, மனிதன், மனுசன் போன்று பல சொற்கள் உண்டாகின. பல மக்கட் பெயர்களும் கிடைத்தன.

ஹிப்ரு மொழி
மனுஏல் - மனுவேல்
தமிழ்ப் பெயர்
கருமன் / கருத்திருமன்
தருமன் / திருமன்
வட இந்தியப் பெயர்
பீமன் இராமன்

இவ்வாறு உலக ஊர்ப் பெயர்களாக ஐந்து லட்சம் பெயர்களை ஆராய்ந்ததில் யாவும் தமிழாகவே உள்ளன.

உலக மக்கட் பெயர்களாக லட்சம் பெயர்களை எடுத்து ஆராய்ந்ந்து பார்த்ததில் யாவும் தமிழாகவே உள்ளன.

இதைப் போலவே இன்னும் தமிழ்மொழியில் அம்மா அப்பா என்ற நாவில் தவழும் சொல் உலகில் 200 மொழிகளுக்கும் மேல் பயன்படுத்தப்படுகிறது என்று தமிழ் தன் சிந்தனையைச் சிறகுகளாக இன்னும் விரித்துக் கொள்வதுபோல எடுத்துக் கூறுகிறார்.

(தொடரும்...)
நன்றி : இலக்கிய முரசு (இலக்கிய இதழ்)

14 comments:

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அறிஞர் திரு. சாத்தூர் சேகரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

எனது வட்டத்திலும் பகிர்ந்து கொள்கிறேன்...

பால கணேஷ் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தமிழுக்கு வயது 90ன்னு ஒரு போஸ்டர் பாத்தேனே.... ஹி... ஹி...! கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த தமிழ்னு ஒரு வாக்கியம் கேள்விப்பட்டிருக்கேன். இப்ப விரிவான தகவல்களோட உங்கள் பகிர்வைப் படிச்சதும் வியப்பு + மகிழ்ச்சி. பொறுமையா இத்தனை தகவல்கள் திரட்டி, அழகா எங்களுக்குப் பகிர்ந்த உங்க உழைப்புக்கு ஒரு சல்யூட்!

Namasivayam said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மிக்க நன்று

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சாத்தூர் சேகரன் பணி சிறக்கட்டும்.இன்பத்தமிழ் எங்கும் ஓங்கட்டும்

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

என்ன சொல்றது.. விம்முகிறது நெஞ்சம் பெருமையில்..அதே நேரம் ஏதோ ஏக்கத்தில்..பல தகவல்கள் அறிந்துகொண்டேன்..நன்றி!
உலகின் பல மொழிகளிலும் தமிழ் வார்த்தைகள் உள்ளன. 'rice ' என்பதே 'அரிசி' என்ற சொல்லில் இருந்து திரிந்து வந்தது என்று படித்தேன்..

ezhil said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தமிழ், தமிழரைப் பற்றி அறியாத கருத்துக்கள் அருமை... நன்றி

arul said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

superb post

வெற்றிவேல் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பெருமையாக உள்ளது... கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது...

பனிமலர் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நல்ல செய்திகளை பகிர்ந்துள்ளீர்கள் நன்றி.

பனிமலர்.

Parthiban (Alias Lord of Universe) said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அருமையான ஆராய்ச்சி அகில உலக தமிழ் மக்களுக்கும் ஆறிவிக்கப்பட்ட குறிப்பு இது.. எம்மொழியும் எம்மொழியே....

Parthiban (Alias Lord of Universe) said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அகில உலக தமிழ்ர்களுக்கும் தேவையான செய்தி இது...

நன்றி...

”தளிர் சுரேஷ்” said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

இத்தனை நாள் உங்கள் பதிவுகளை படிக்காமல் விட்டது வருத்தம் அளித்தது! வலைச்சரம் நல்ல ஒரு பதிவரை அறிமுகம் செய்து வைத்துள்ளது! எத்தனை எத்தனை தகவல்கள்! அருமை! தொடர்கிறேன்! நன்றி!

எம்.ஞானசேகரன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

எல்லாமே வியத்தகு செய்திகள். தமிழின் பெருமை பெருமிதம் கொள்ளச்செய்கிறது. சாத்தூர் சேகரன் அவர்களின் பணிக்கும், பகிர்ந்த தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள். இதை என்னுடைய பதிவில் பகிரலாமா?

well-wisher said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

முயற்சி அருமை. ஆனால் முழுமை இல்லை.இதுபோன்ற ஒற்றுமைகள் எவரும் காட்ட முடியும்.