நலம்
நலமறிய ஆவல். வருடா வருடம் உன் பிறந்தநாளின் போது சிறிது நேரம் ஒதுக்கி, நாம் கடந்து
வந்த காலங்களை எண்ணிப் பார்ப்பது வழக்கம். இன்றும் அப்படியே. நாம் சந்தித்து ஏறத்தாழ
13 ஆண்டுகள் ஆகின்றன. பெண்களின் நட்பு நீடித்திருக்காது என்பதற்கு மாறாக இன்று வரை
நாம் அதே நட்போடும் பரிவோடும் பழகி வருகிறோம். இதைப் பற்றிப் பேசுவது கூட இதுதான் முதல்
முறையாக இருக்கும். ஏன் என்றால், எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசும் நாம், நம் இருவரின்
நட்பு பற்றியோ, அது எதுவரை நிலைத்திருக்கும் என்பது பற்றியோ, எவ்வாறு தொடர்பிலேயே இருப்பது
என்பது பற்றியோ, ‘இந்த உலகத்துலேயே நீ தான் எனக்கு பெஸ்ஸ்ஸ்ட் ஃப்ரெண்ட்’ என்பது போலவோ
பேசியதில்லை. அதைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. நம் நட்பிற்கு முக்கியத்துவம்
கொடுக்கவில்லை என்பது இதன் அர்த்தமாகாது. மாறாக, புரிதல் உள்ள உறவுகளுக்குள் பிரிவேதுமில்லை
என்ற நம்பிக்கை தான் அதற்குக் காரணம். நம் நட்பை வழிநடத்திச் செல்வதும் அதுவே தான்.
நாம்
இருவரும் சேர்ந்து அழுத தருணங்கள் உனக்கு நினைவிருக்கிறதா? யாரிடமும் பகிர்ந்து கொள்ள
இயலாத விஷயங்களை நாம் பகிர்ந்து கொண்டோம். நீ தொடர்பிலேயே இல்லாமலிருந்தால் கூட திடீரென
ஒரு நாள் உனக்குத் தொலைபேசி அழைப்பு விடுத்து என் மனதைக் கொட்டித் தீர்க்க என்றுமே
நான் தயங்கியதில்லை. அப்போதெல்லாம் எனக்கு ஆறுதல் சொல்லித் தேற்ற நீ தயங்கியதுமில்லை.
அடுத்ததாக உன்னை எப்போது பார்ப்போம் என்று
இருக்கிறது.
ஒரு
வழியாக, சென்ற வருடம் உனக்காக நான் செய்த பிரார்த்தனை வீண் போகவில்லை. சொன்னது போலவே
கையில் ஒன்றும் இடுப்பில் ஒன்றுமாக என் திருமணத்திற்கு நீ வரப்போகிறாய். அதற்கு முன்னதாக
உன்னைச் சந்திக்க வேண்டும். ஜோஸுடன் விளையாட வேண்டும். ஜியாவைப் பார்க்க வேண்டும்.
உன் வீட்டிற்குச் சென்று அம்மா தரும் தேநீரைப் பருக வேண்டும். (அந்தச் சுவை இன்னும்
என் நாவிலேயே இருக்கிறது) மாடிக்குச் சென்று பிச்சிக் கொடியின் அருகே அமர்ந்து இதுவரை
சேகரித்து வைத்திருக்கும் ரகசிய கதைகளைப் பேச வேண்டும். உன்னோடு சேர்ந்து ஒரே ஒரு wedding shopping
செல்ல வேண்டும்.
மற்றபடி
உன் பிறந்த நாளான இன்று உன்னை வாழ்த்த வயதில்லை. வணங்க.. நினைப்புத் தான். இரு. திருநெல்வேலிக்கு
வாறேன். வந்து பேசிக்கிடுவோம்.. Bye சித்ரா.
9 comments:
அட என்ன சட்னு முடிச்சிட்டீங்க...
சித்ராதேவிக்கு சுபத்ராதேவியின் பிறந்தநாள் வாழ்த்துகள்? இல்லை, வழக்கம்போல "பர்சனல்" பிறந்தநாள் கடிதம்! :) பரவாயில்லை அட் லீஸ்ட் வருடத்திற்கு ஒரு முறை சித்ராதேவிக்கு பிறந்தநாள் வாழ்த்துச்சொல்லவாவது வாயைத் திறக்குறீங்களே!.. :)
sspaaa oru valiyaa post potachii
thanks
:-)
@Seeni
புழிஞ்சு புழிஞ்சு எழுதணும்னு ஆசை தான்.. அதுக்குள்ள ஆஃபிஸ் முடிஞ்சு போச்சு :(
@வருண் உங்ககிட்ட வாய் குடுத்து மாட்டிக்கறதுக்கு அது மேல் இல்லையா... ஜோக்ஸ் அபார்ட்..இனிமேல் எழுதுவேன்
@kamal :-)
@kamal
வந்து கொண்டேயிருக்கிறது...
எத்தனை தடவை படிச்சாலும் படிச்சிகிட்டே இருக்கதோனுது
hats off to your writing
Post a Comment