முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விலை

"கீர்த்தி, என்னடி அமைதியாக இருக்க? உனக்கு இந்தப் புடவை ஓ.கே. தான? அமுதாவுக்கு இந்தப் பாசிப்பச்சைக் கலர் நல்ல சூட் ஆகும்னு நினைக்கிறேன்" கேட்டுக்கொண்டே வந்த வித்யாவையும் அவள் கையில் இருந்த புடவையையும் பார்த்தாள் கீர்த்தி. "நல்லா இருக்கு" அமைதியாக ஒரு புன்னகை. "ஏய்.. இவ எனக்கெல்லாம் செலக்ட் பண்ணித் தர மாட்டா.. அவ மட்டும் அழகா செலக்ட் பண்ணி ராணி மாதிரி டிரஸ் பண்ணிக்குவா" கோபித்துக் கொண்ட அமுதாவைச் சமாதானப் படுத்த முயன்றனர் மற்ற இருவரும். "கீர்த்தி என்னைக்குமா டிரஸ் செலக்ட் பண்ணினா? எல்லாம் அவளோட அம்மாதான். இவ நம்ம கூட கடைக்கு வந்ததே பெரிய விஷயம். பேசாம வாடி..கவுண்டர் ப்ரீயா இருக்கு, பார்" என அமுதாவின் கையைப் பிடித்து அழைத்துவந்தாள் நித்யா. ஞாயிற்றுக் கிழமை சாயந்திரம் வேளை திருநெல்வேலி டவுன் ரதவீதித் தெருக்களில் கூட்டம் எவ்வளவு இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. வண்ணாரப்பேட்டையில் ஆர்.எம்.கே.வி. தனக்கென ஒரு புதுக் கிளையைத் தொடங்கியவுடன் டவுனில் கூட்டம் சற்றுக் குறைந்து தான் போனது என்றாலும் ஓரளவுக்கு மக்கள் திரள் திரளாகவும் தனியாகவும் வ...