முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குட்டீஸ் எனப்படும் குட்டிப்பிசாசுகள் (பகுதி-3)

     படிக்கும் வயதில் யாரேனும் பாடம் எடுத்திருக்கிறீர்களா ? எனக்கு இதுவரை ஏற்பட்ட அனுபவங்களில் சொல்லியே தீரவேண்டியவை - லேபிளில் இதுவும் ஒன்று! கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கையில் மிகவும் ஆசைபட்டு மாலை வகுப்புகள் எடுக்கப் போவதாகப் பக்கத்து வீடுகளில் சொல்லி வைத்திருந்தேன் . முதல் நாளே நான்கு மாணவர்கள் .. ஒரு மாதத்தில் ஏறத்தாழ வீட்டுக்கு அருகிலிருந்த எல்லாக் குட்டீஸ்களும் என் வீட்டில் ஆஜர் எனலாம் . கிட்டதட்ட பதினாறு பேர் .. 1.     கல்யாணி – 1ம் வகுப்பு 2.     ப்ரியா – 2ம் வகுப்பு 3.     ராஜேஷ் – 1ம் வகுப்பு 4.     செல்வா – யு.கே.ஜி. 5.     பிரகாஷ் – 6ம் வகுப்பு 6.     முத்துமாரி – 3ம் வகுப்பு எனப்போய்க் கொண்டேயிருக்கும். “என்னடா இது! ஏதோ ட்யூஷன் எடுக்கலாம். சின்ன க்ளாஸ் பாடங்கள் எல்லாம் திரும்பவும் படிச்சமாரி இருக்கும்னு பார்த்து நாம ஒன்னு யோசிச்சா இப்படி நண்டுகளையும் வண்டுகளையும் வெச்சு என்ன பண்ண..” என்று தோன்றியது. “சர...