
என் எழுத்தை எனக்கே அறிமுகம் செய்து வைத்த எனது
அபிமான வலைப்பூ “இட்லிவடை”யில்
எனது மற்றுமொரு பதிவு ஒன்று வெளியாகியுள்ளது..
“நீங்க எந்த
ஊரு?”
யாரோ.
“திருநெல்வேலி”
இது
நான்.
“ஓ...
தின்னவேலியா?
(நக்கலாக)
சரி
சரி”
“இல்ல,
திருநெல்வேலி”
எரிச்சலுடன்
நான்.
“நானும்
அதைத்
தான்
சொன்னேன்..
தின்னேலினு
தானே
சொல்வீங்க?”
இன்னும்
சிரிப்புடன்.
“தின்ன
எலியுங்
கிடையாது..
திங்காத
எலியுங்
கிடையாது...எங்க
ஊரு
பேரு
திருநெல்வேலி!”
(ஹ்ம்க்கும்)
ஒரு தடவ
ரெண்டு
தடவயில்ல..
நெறைய
தடவ
இது
நடந்துருக்கு.
அது
ஏன்னே
தெரியல.
திருநெல்வேலின்னாவே
எல்லாருக்கும்
எங்கயிருந்து
தான்
வருதோ
ஒரு
நக்கல்
தெரியல.
ஊருக்குள்ளயே
இருந்தவரைக்கும்
ஒன்னுமே
தெரியாது.
டிவியில
விவேக்கு
பேசுனாலும்
வடிவேலு
பேசுனாலும்
விஜய்
பேசுனாலும்
விக்ரம்
பேசுனாலும்
வேற
யாரு
பேசுனாலும்
ஜோக்கோடு
ஜோக்கா
பார்த்துச்
சிரிச்சிக்குவோம்.
ஆனா
பன்னெண்டாப்பு
முடிச்சிக்
காலேஜில
சேரனும்னு
வெளியூருக்குப்
போவும்போது
தான்
தெரியும்..
நம்மளும்
நம்ம
ஊரும்
எப்படியெல்லாம்
அல்லோல
கல்லோலப்
படுதோம்னு.
ஏன்
அப்படிப்
பண்ணுதாங்கன்னு
நமக்கே
வெளங்காது.
என்ன
பேச்சிப்
பேசுனாலும்
சிரிப்பு
தான்.
பெறவு
வேற
வழியில்லாம
நாம
‘அல்வா’,
‘அருவா’ன்னு
செல்லமாப்
பேசுனாத்
தான்
அமைதியாப்
போவாங்க.
சென்னை,
கோவை,
மதுரைன்னா
கூட
பரவால்ல
அவங்கவங்களுக்குத்
தனித்தனியா
பாசையிருக்கும்.
ஆனா
இந்தத்
திருச்சி,
தஞ்சாவூர்க்காரங்க
இருக்காங்களே..
அடடடடா..
உலகத்துலயே
நாங்க
ஒருத்தங்க
தான்
கலப்படமில்லாத
தூயதமிழ்
பேசுதோம்னு
ஒரே
பெரும
பீத்திக்குவாங்க.
சரி
போனாப்
போவுதுனு
உட்டுக்குடுக்குறதுக்கு
நமக்கு
மனசு
வராது.
“என்னயிருந்தாலும்
எங்க
ஊரு
தமிழ்தான்
அழகாயிருக்கும்
அம்சமாயிருக்கும்”னு
என்னத்தையாவது
சொல்லிட்டு
ஆஸ்டல்
ரூமுக்குள்ள
போயி
அன்னைக்கே
ஒரு
முடிவு
எடுப்போம்.
இனிமே
நாமளும்
இவங்க
பேசுதத
மாரியே
பேசனும்னு.
அங்கயே
முடிஞ்சிபோவுது
திருநெல்வேலி
பாசையெல்லாம்!
பெறவு
லீவுக்கு
ஊருக்கு
வந்தாக்
கூட
அம்மாவோ
ஆச்சியோ
எப்பவும்
போலப்
பேசயில
“ஏன்
இப்படிப்
பேசுதாங்க”னு
வித்தியாசமா
நெனைக்கும்
இந்தக்
கூறுகெட்ட
மனசு.
ஆனா
நாலு
வார்த்த
பேசுறதுக்குள்ள
நாமளும்
ஒன்னுக்குள்ள
ஒன்னா
அயிக்கியமாயிருவோங்கது
வேற
கத.
கொஞ்ச...
Read More...