பரீட்சை முடிந்த பிறகு தான் blog பக்கம் வரவேண்டும் என நினைத்தேன் . ஆனால் ‘ இதை நான் சொல்லியே ஆகனும் ’ வரிசையில் முதலாவதாக இருக்கிறது மூடர் கூடம் படவிமர்சனம் . ‘ எந்தப் படந்தான் நம்மள முதமுதல்ல விமர்சனம் எழுதவைக்கப் போதோ ’ என்று வெகு நாட்கள் காத்திருந்தது இன்று தான் நேரம் காலம் எல்லாம் கூடி முடிவுக்கு வந்திருக்கிறது . படத்தின் தொழில்நுட்பங்களை விமர்சிக்கும் அளவுக்கு எனக்கு அறிவில்லை என்பதால் ஒரு common man பார்வையில் படம் எப்படியிருந்தது என்பதை இதோ எழுதுகிறேன் . சந்தர்ப்பவசத்தால் காவல் நிலையத்தில் சந்திக்க நேர்ந்த நான்கு நபர்கள் ஒரு வீட்டுக்குத் திருடச்சென்று அதன் பிறகு நடக்கும் சில சம்பவங்களின் கோர்வைதான் படம் . ‘ இதுதான் கதை ’ என்று சொன்னால் ‘ இதிலென்ன பிரமாதம் இருக்கிறது ’ என்று தான் கேட்கத் தோன்றும் . ஆனால் “ இலக்கை அடைவதை விட பயணம் சிறப்பாக அமைவதே மேல் ” என்னும் புத்தரின் வசனத்தை பேனரில் நமக்கு மேற்கோள் காட்டியிருப்பதைச் சிறப்பாக நடைமுறைபடுத்தியிருக்கிறார் நவீன் . படம் overactin...
Hi from a Hikikomori 🐌