மூடர் கூடம் - ‘நவீன’த்துவ(க்க)ம்

Oct 4, 2013


பரீட்சை முடிந்த பிறகு தான் blog பக்கம் வரவேண்டும் என நினைத்தேன். ஆனால்இதை நான் சொல்லியே ஆகனும்வரிசையில் முதலாவதாக இருக்கிறது மூடர் கூடம் படவிமர்சனம். ‘எந்தப் படந்தான் நம்மள முதமுதல்ல விமர்சனம் எழுதவைக்கப் போதோஎன்று வெகு நாட்கள் காத்திருந்தது இன்று தான் நேரம் காலம் எல்லாம் கூடி முடிவுக்கு வந்திருக்கிறது. படத்தின் தொழில்நுட்பங்களை விமர்சிக்கும் அளவுக்கு எனக்கு அறிவில்லை என்பதால் ஒரு common man பார்வையில் படம் எப்படியிருந்தது என்பதை இதோ எழுதுகிறேன்.

 சந்தர்ப்பவசத்தால் காவல் நிலையத்தில் சந்திக்க நேர்ந்த நான்கு நபர்கள் ஒரு வீட்டுக்குத் திருடச்சென்று அதன் பிறகு நடக்கும் சில சம்பவங்களின் கோர்வைதான் படம். ‘இதுதான் கதைஎன்று சொன்னால்இதிலென்ன பிரமாதம் இருக்கிறதுஎன்று தான் கேட்கத் தோன்றும். ஆனால்இலக்கை அடைவதை விட பயணம் சிறப்பாக அமைவதே மேல்என்னும் புத்தரின் வசனத்தை பேனரில் நமக்கு மேற்கோள் காட்டியிருப்பதைச் சிறப்பாக நடைமுறைபடுத்தியிருக்கிறார் நவீன்.

படம் overacting எதுவும் இல்லாமல் casual லாக இருந்தது. முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் வசனங்கள் பேசும் நவீனிலிருந்து வாயை ஊஊ என்று வைத்துக்கொள்ளும் செண்ட்ராயன் வரை எல்லோருடைய கதாப்பாத்திரங்களும் இயல்பாக இருந்தன. டாம் அன்ட் ஜெரி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் இரு காட்சிகளில் உதட்டைச் சுழித்துச் சுழித்துப் பேசும் அந்தச் சின்னப்பெண்.. அய்யோ! எந்தப் பாத்திரமும் நடிப்பில் குறைவைக்கவேயில்லை. Trailer பார்த்தபோதுபச்சைத் தமிழன் கிட்ட ஆங்கிலம்பேசுவது, ஒரு ஊரிலே ஒரு சின்ன பையன் பாடல், படத்தின் title, மாறுபட்ட கதாப்பாத்திரங்கள் என ஆவலைத் தூண்டியிருந்த பல விஷயங்கள் படத்தில் ஏமாற்றம் அளிக்கவில்லை. ஒவ்வொரு கதாப்பாத்திரமும் செய்யும் ஒவ்வொரு so called மூடத்தனமான செயலையும் செய்வதன் பின்னர் ஒரு justification அவ்வப்போது flash backs-ஆகக் காட்டப்பட்டது கூட சலிப்பூட்டாமல் ரசிக்கும்படியாகவே இருந்தது. உதாரணத்துக்கு நாய்க்குக் கூட ஒரு முன்கதை, ஒரு பாடல்.  மேலும் ஒரு முழு கார்ட்டூன் பாடல்.

படம் முழுவதும் நிறைய இடங்களில் கம்யூனிசக் கருத்துகள். 100 மனிதர்களையும் 100 மாம்பழங்களையும் வைத்து survival of the fittest எவ்வாறு உயர்வுதாழ்வுகளைக் கொண்ட ஒரு சமுதாயத்தைப் படைத்திருக்கிறது என்ற எடுத்துக்காட்டு superb. பாரதிதாசன், பாரதியார் படம் வரையப்பட்டிருந்த சுவரின் அருகில் புரண்டு சண்டை போடுவது, கருப்பு-சிவப்பு-வெள்ளை நிற ஆடைகள், professional திருடனின் உருவ அமைப்பு, பக்தவத்சலம், மண்டோதரி போன்ற பெயர்க்காரணங்கள், நீயும் பொம்மை நானும் பொம்மை பாடலோடு சேர்ந்த காட்சிகள் எல்லாம் பார்க்கும்போதே பலவற்றின் குறியீடுகளாகத் தெரிந்தன :)

இந்த உலகம் ஒரு மூடர் கூடம் தான் என்பதை நான்கு கதாப்பாத்திரங்களின் வாயிலாக நம் அனைவரையும் உருவகம் செய்திருக்கிறார் நவீன். HAPPY LIFE நாம் தலைகீழாக வைத்துப் பார்த்துக்கொண்டு நிஜமான HAPPY LIFE எங்கே எனத் தேடிக்கொண்டிருப்பது, ஒருகட்டத்தில் விலைமதிப்பற்ற அதனைக் கையில் வைத்துக்கொண்டே உணராமல் அதற்காக ஏங்குவது.. பின்னர் உணர்ந்தபோது அது நம் கையைவிட்டுச் சென்றிருக்க மறுபடியும் அதனைத் துரத்திச் செல்வது என முடிகிறது படம்.

படத்தில் படித்தவராகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் நவீனுக்கு நண்பர்களின் ஒவ்வொரு மூடத்தனமான செயலுக்கும் பொறுமையாக step-by-step ஆகப் பதில் கூறிப் புரியவைக்கும் clarity நிறைந்த கதாப்பாத்திரம். Navin, R u a Maths student? :P

பார்த்தால் இந்த மாதிரி ஹாலிவுட் பாணியிலான படங்களைப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. பொதுவாக, வாசித்த புத்தகங்களைத் திரும்ப வாசிப்பதோ, பார்த்த படங்களை மறுபடியும் பார்ப்பதோ என்னைப் பொறுத்தமட்டும் boring விஷயங்கள். ஆனால் இந்தப் படத்தை மீண்டும் பார்க்க நினைக்கிறேன். Hats off Navin !!!
Read More...