முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முகமூடி

  சில பல காரணங்களால் ப்ளாக் பக்கமே எட்டிக்கூடப் பார்க்கமுடியவில்லை . Now I am back :) வெட்டி ப்ளாக்கர்ஸ் போட்டிக்காக நான் அனுப்பிய சிறுகதை . ( இரண்டாவது சுற்றுக்குக் கூடப் போகவில்லை ) :) படித்துவிட்டுப் பின்னூட்டமிடுங்களேன் ? நான் உங்களுக்குப் புரியாத பாஷை ஒன்றில் பேசப்போகிறேன் . அல்லது புரிந்த பாஷையில் புரியாத வார்த்தைகளை இழைத்துப் பேசி என் மனப்பாரத்தைச் சற்று இறக்கிவைக்கப் போகிறேன் . உங்களுக்குப் புரியப்போவதில்லை என்று இப்போது நான் சொன்னதை அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டாம் . புரிந்துகொண்டால் மட்டும் எனக்காக நீங்கள் என்ன கிழித்துவிட முடியும் என்ற மனச்சலிப்பே நான் அப்படிச் சொன்னதற்குக் காரணம் . நீங்கள் சற்றே எரிச்சலுற்றாலும் தொடர்ந்து படிக்கிறீர்களென்பதே எனக்கு ஆறுதலாக இருக்கிறது . இதற்குமேல் உங்களது கவனம் நீங்கள் வாசிக்கப்போகும் வார்த்தைகளிலேயே மையம் கொண்டிராமல் அவற்றின் சாரத்தில் இருக்கட்டும் . ஏனென்றால் , முள்கிரீடம் அணிந்து பாவிகளுக்காகச் சிலுவையைச் சுமந்து சென்ற இயேசுவைப் போல இவ்வார்த்தைக...