சொல்வனம் 188 ஆம் இதழில் வெளிவந்திருக்கும் என் கவிதை கள் :-) பார்வைகள் தவிர்த்து அனைவரும் என்னையே பார்ப்பதாய்த் தோன்றிய எண்ணம் தவிர்த்து பேருந்து இருக்கையில் அமர்கிறேன் அலைபேசியின் செவிப்பொறியை அவிழ்க்கத் தொடங்கி உள்ளே வெளியே உள்ளே வெளியே என சிறிய சிக்கலைப் பிரிக்கப் பிரிக்க பெரிதாய்ப் பின்னிக்கொண்ட சரடு ஒரு சிறு பந்தைப் போல் ஆகிறது அப்படியே கேட்கலாம் எனக் காதில் செருகும்போது கவனிக்கிறேன் பேருந்தில் இருக்கும் வேறெவரின் செவிப்பொறியும் சிக்கலாயில்லை அது தரும் இசையில் லயித்திருக்கும் அவனும் அவளும் அதோ அவரும் ஒரே அலைவரிசையைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்களா அவரவருக்குப் பிடித்த இசை என்னவாக இருக்கும் மீண்டும் பின்னியிருக்கும் சரடைப் பிரிக்க முயன்றிருக்கும் போதே நிறுத்தம் வர இறங்குகிறேன். நாளை பார்த்துக்கொள்ளலாம் பேருந்தில் இடம்பிடிப்பதையும் சரடை நேராக்குவதையும் பேருந்துப் பயணத்தில் பாட்டு கேட்பதையும். *** பி.எம்.எஸ். நாட்கள் __ உலகம் சரியில்லை. நாடு சரியில்லை. வீடு குப்பையாக இருக்கிறது. பொருட்கள் இரைந்து கிடக்கின்றன. துணி துவைக்கத் தெம்பு ...
Hi from a Hikikomori 🐌