என் எழுத்தை எனக்கே அறிமுகம் செய்து வைத்த எனது அபிமான வலைப்பூ “ இட்லிவடை ” யில் எனது மற்றுமொரு பதிவு ஒன்று வெளியாகியுள்ளது .. “ நீங்க எந்த ஊரு ?” யாரோ . “ திருநெல்வேலி ” இது நான் . “ ஓ ... தின்னவேலியா ? ( நக்கலாக ) சரி சரி ” “ இல்ல , திருநெல்வேலி ” எரிச்சலுடன் நான் . “ நானும் அதைத் தான் சொன்னேன் .. தின்னேலினு தானே சொல்வீங்க ?” இன்னும் சிரிப்புடன் . “ தின்ன எலியுங் கிடையாது .. திங்காத எலியுங் கிடையாது ... எங்க ஊரு பேரு திருநெல்வேலி !” ( ஹ்ம்க்கும் ) ஒரு தடவ ரெண்டு தடவயில்ல .. நெறைய தடவ இது நடந்துருக்கு . அது ஏன்னே தெரியல . திருநெல்வேலின்னாவே எல்லாருக்கும் எங்கயிருந்து தான் வருதோ ஒரு நக்கல் தெரியல . ஊருக்குள்ளயே இருந்தவரைக்கும் ஒன்னுமே தெரியாது . டிவியில விவேக்கு பேசுனாலும் வடிவேலு பேசுனாலும் விஜய் பேசுனாலும் விக்ரம் பேசுனாலும் வேற யாரு பேசுனாலும் ஜோக்கோடு ஜோக்கா பார்த்துச் சிரிச்சிக்குவோம் . ஆனா பன்னெண்டாப்பு முடிச்சிக் காலேஜில சேரனும்னு வெளியூருக்குப் போவும்போது தான் தெரியும் .. நம்மளும்...