முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ப்ளீஸ்.. இதைப் படிக்காதீங்க

2014 ம் கடந்து விட்டது . 2013 முடிந்த போது தொடங்கவிருந்த புதிய ஆண்டுக்கான எதிர்பார்ப்புகள் சில இருந்தன . வழக்கம் போல Expectations = Disappointments. அதனால் எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி 2015 ஐ எதிர்கொள்ளலாம் என்றிருக்கிறேன் . இது இப்போதைய தற்காலிக மனநிலையா , மனமுதிர்ச்சியா இல்லை மனப்பிறழ்வா (?) தெரியவில்லை . பொதுவாக நடந்து முடிந்தவையைப் பற்றி நான் அலட்டிக் கொள்வதில்லை . எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்னும் எண்ணமே மேலோங்கியிருக்கும் . இருந்தாலும் வருட முடிவில் ‘ திரும்பிப் பார்க்கிறேன் ’ என்று மகிழ்ந்த தருணங்களும் மிகக் குறைவே . Don’t know what HE has in reserve for me..

What next...

ஒரு நாயகன்

சாரு நிவேதிதா விமர்சகர் வட்டம் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவ்வருடமும் முதல் பரிசு (ரூ.20,000) வாங்கிய என் சிறுகதை இங்கே :-) ஒரு நாயகன் “ ஹலோ ” “ எல ராசு , எங்க இருக்க ?” “ வீட்லதாம்ல சொல்லு ” “ நம்ம ஜாவா எங்கெருக்கு ?” “ எது , ப்ரீடுக்கு வாங்கிக் குடுத்தியே ஒரு கரும்வளவி , அதுவா ?” “ ம் ” “ நேத்து தான் செத்துப்போச்சி . ஒரு வாரமா சீக்கு ” “ என்னது ?!” “ போன மாசமே ரொம்ப வீக்காகி சரியா சாப்பிடல . தலைய தொங்கபோட்டுக்கிட்டே கிடந்துச்சு . கொஞ்சம் சின்ன வெங்காயம் உரிச்சி கொடுத்தவுடனே தேறிடுட்டு . பிறகு இப்போ ஒரு வாரமா ரொம்ப முடியாம இருந்து நேத்து செத்துப்போயிட்டுல ” “ ஓ காட் ! எத்தன வைப்பு எடுத்த ?” “ என்னத்த எடுக்க ? குருட்டுக் கண்ணை வெச்சிக்கிட்டுக் கோழியோட சேர்றது சாதாரண விஷயமா ? அதுலயும் இப்போதைக்கு ஒரு கோழிதான் கெடக்கு எங்கிட்ட . ஆனா செம லீனியேஜ் . ஏ .. திருச்சில பந்தயம் அடிச்சதுலாடே , ஒரு யாகூத்து ? அதோட அம்மாதான் . கோழியைக் குறைசொல்ல முடியாது . இந்தக் கரும்வளவிய மட்டும் ச...