Wishes :)

Dec 24, 2010



நூறாவது பதிவைக் காணும் என் அன்புத் தோழி “பொன்மலர்”க்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்....!! கணினி மென்பொருள்கள், தொழில்நுட்பம் பற்றிப் பல தரமான பதிவுகளை வாசகர்களுக்குத் தரும் அவளுடைய முயற்சிக்கு என் வணக்கங்கள்!! வாழ்த்துகள்!!!



Read More...

பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்

Dec 16, 2010

முதன்முறையாக நான் ஒரு தொடர்பதிவு எழுதுகிறேன் :) என்னை எழுதச்சொல்லி அழைத்திருந்த அருண்பிரசாத்துக்கு நன்றி!!! பெண்குரலில் பெண்ணின் மனதைச் சொல்லும் பத்துப் பாடல்கள்.

எனக்குப் பிடித்த நிறைய பாடல்களை அவரே எழுதிவிட்டார் :) அதனால் அவற்றை விடுத்து வேறு பத்துப் பாடல்களை நான் இங்கு கொடுத்துள்ளேன் :)

***

1. உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார்

படம்: குணா
இசை: இளையராஜா
பாடியவர்: ஜானகி, எஸ் வரலஷ்மி
எழுதியவர்: வாலி
 

சில வரிகள்:

உன்னை நானறிவேன்
என்னையன்றி யாரறிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னையன்றி யார் துடைப்பார்
யாரிவர்கள் மாயும் மானிடர்கள்
ஆட்டி வைத்தால் ஆடும் பாத்திரங்கள்

இந்தப் பாடலைக் கேட்கும்போதும் கேட்ட பின்னரும் மனதில் ஒரு இனமறியா உணர்வு ஏற்படுவதை நின்று நான் ரசித்ததுண்டு! இருவர் குரலும் உணர்த்தும் வெவ்வேறு உணர்வுகள்...அற்புதம்.

***

2. மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான்

படம்: பாக்யலக்ஷ்மி
பாடியவர்: பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி

பிடித்த வரிகள்:

எல்லாமே பிடிக்கும்.. அதிலும்

இளமையெல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம்
தெளிவுமறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்
மயங்குது எதிர்காலம் ....”

கவிஞர் கண்ணதாசன் படைத்த அருமையான பாடல் இது. படமாக்கமும்
அழகாகவும் உருக்கமாகவும் இருக்கும்..

***
3. உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்

படம்: ஆயிரத்தில் ஒருவன் (பழைய படம்)
இசை: விஸ்வநாதன், ராம்மூர்த்தி
வரிகள்: வாலி
பாடியவர்: பி. சுசீலா

வரிகள்:

உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன் என் ஆலயத்தின் இறைவன்
ஆலயத்தின் இறைவன்

இந்த இரண்டு வரிகள் போதும் காதலின் இனிமையைச் சொல்வதற்கு.

***

4. சொந்தம் வந்தது வந்தது

படம்: புதுப்பாட்டு
இசை: இளையராஜா
பாடியவர்: சித்ரா
வரிகள்: ? (எனக்குத் தெரியல.. ப்ளீஸ் தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்)

சில வரிகள்:

‘’நீ வாழும் வீட்டுக்குள்ளே நீ போடும் கோட்டுக்குள்ளே
நீங்காம இந்த பொண்ணு வாழும்
உன்னையே நானே உசுரா தானே
நினைச்சேன் மாமா நெசந்தான் ஆமா
நான் வாங்கும் மூச்சிக்காத்து உன்னாலதான் உன்னாலதான்
ஓயாம உள்ளஞ்சொல்லும் உன் பேரை தான் உன் பேரை தான்
சொந்தம் பந்தம் நீ…..’’

இந்தப் பாடலின் வரிகள் எதார்த்தமாக அழகாக எழுதப்பட்டிருக்கும்.

***

5. உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே

படம்: ஜெ.ஜெ.
இசை: பரத்வாஜ்
வரிகள்: வைரமுத்து
பாடியவர்: ரேஷ்மிரவி

பிடித்த வரிகள்:

உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே
உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே

இந்த இரண்டு வரிகளின் அர்த்தத்தையும் அக்குரல் பாடும் இனிமை.... அருமை :)

இந்த வரிகள் கூட,

உன் தேடலோ காதல் தேடல் தான்
என் தேடலோ கடவுள் தேடும் பக்தன் போல

***

6. ஒயிலா பாடும் பாட்டுல

படம்: சீவலப்பேரி பாண்டி
இசை: ஆதித்யன்
பாடகி: சித்ரா
வரிகள்: (தெரியவில்லை, வைரமுத்து??)

சில வரிகள்:


நான் தப்பாது முழிச்சிருக்கேன் நான் எப்போதும் தனிச்சிருக்கேன்
அட ஆஸ்தியும் இல்ல அவஸ்தையும் இல்ல
அன்னாடம் சிரிச்சுருக்கேன்
ஒரு குருவிக்கும் கூடிருக்கு, இந்தக் குமரிக்கு வீடிருக்கா
அந்த ஆட்டுக்குக் கிடை இருக்கு.. ஒரு அடைக்கலம் எனக்கிருக்கா?
வெயில் வந்தாலென்ன? குளிர் வந்தாலென்ன?
என் சந்தோசம் கொறஞ்சிருக்கா..?. என் சந்தோசம் கொறஞ்சிருக்கா..?”

ஒன்னுமே இல்லாம இருக்குறது எவ்வளவு சுகம்னு இந்தப் பாடலைக் கேட்டுத் தெரிஞ்சிக்கலாம்..

***

7. ஒரு தெய்வம் தந்த பூவே

படம்: கன்னத்தில் முத்தமிட்டால்
இசை: . ஆர். ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து
பாடியவர்: சின்மயி

பிடித்த வரிகள்:

"எனது செல்வம் நீ, எனது வறுமை நீ
இழைத்த கவிதை நீ, எழுத்துப் பிழையும் நீ
இரவல் வெளிச்சம் நீ, இரவின் கண்ணீர் நீ
எனது வானம் நீ, இழந்த சிறகும் நீ
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ"

என்ன லிரிக்ஸ் பா.....!!!! சின்மயி வேறு அவர் பங்கிற்கு சாகடித்திருப்பார் அவர் குரலில்...!!!

***

8. கண்ணாமூச்சி ஏனடா...என் கண்ணா

படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
இசை: . ஆர். ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து
பாடியவர்: சித்ரா

பிடித்த வரிகள்

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா,
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா?
நெஞ்சின் அலை உறங்காது!
நான் என்ன பெண்ணில்லையா என் கண்ணா?
அதை நீ காணக் கண்ணில்லையா
உன் கணவுகளில் நானில்லையா
தினம் ஊசலாடுதென் மனசு அட ஊமையல்ல என் கொலுசு
என் உள் மூச்சிலே உயிர் வீங்குதே
என்னுயிர் துடிக்காமலே காப்பது உன் தீண்டலே

சித்ராவின் குரலில் மெல்லிய உணர்வுகளையும் கண்ணன் படுத்தும் பாட்டையும் எடுத்தியம்பும் அருமையான பாடலிது.

***

9. மார்கழிப் பூவே

படம்: மே மாதம்
இசை: .ஆர்.ரஹ்மான்
பாடியவர்: சுபா
வரிகள்: வைரமுத்து

சில வரிகள்:

பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைபாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்
வாழ்க்கையின் ஒரு பாதி நான் இங்கு வசிப்பேன்
வாழ்க்கையின் மறு பாதி நான் இங்கு ரசிப்பேன்
காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்

BGM-மும் சுபாவும் குரலும் சேர்ந்து மனதை அப்படியே வேறு ஒரு உலகிற்கு நம்மைக் கடத்திச் செல்லும்!!!

***

10. காதோடுதான் நான் நான் பேசுவேன்

படம்: வெள்ளி விழா
இசை: வி. குமார்
வரிகள்: வாலி
பாடியவர்: எல். ஆர். ஈஸ்வரி

மிகவும் பிடித்த வரிகள்:
 ”வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளைதான்
நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா?
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா?
குல விளக்காக நான் வாழ வழி காட்டவா?”
எனக்காக இருநெஞ்சம் துடிக்கின்றது
யார்கேட்டு என் பாட்டை முடிக்கின்றது?"


***

சரி.. இதோட நான் என் பாட்டை (லிஸ்ட்டை) முடிச்சிக்கலாம்னு நினைக்கிறேன்உங்களது கருத்துக்களைக் கண்டிப்பாகப் பகிர்ந்துவிட்டுச் செல்லவும்.....:))

அப்புறம்
இந்தப் பதிவைத் தொடர என் பாசமிகு அண்ணன் TERROR-PANDIYAN(VAS) அவர்களைக் கேட்டேன். தங்கையின் விருப்பம் தான் தனது விருப்பமும் என்று அவர் கூறிவிட்டதால், நான் அழைக்க விரும்பும் மற்றவர்களின் பெயர்களை இங்கு குறிப்பிடுகிறேன்.


கருத்துக்களைத் தவறாமல் பதித்துச் செல்லுங்கள் :-)
*
Read More...