முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வேற கலர் இருக்கா?

வணக்கம்!       இன்னைக்கு ஆகஸ்ட் 15, சுதந்தரதினம். சுதந்தரதினமும் அதுவுமா ப்ளாக்ல போஸ்ட் போடலன்னா நம்மள யாரும் ‘பிரபல பதிவர்’னு ஏத்துக்க மாட்டாங்க. அதோட சகபதிவர்களுக்கு வாழ்த்துகள் வேற சொல்லனும் இல்லையா. அதுக்காகத் தான் இந்தப் பதிவு. யாரோட தொல்லையும் இல்லாம நிம்மதியா சுதந்தரமா தூங்கி எழுந்தது தான் இன்னைக்கு ஸ்பெஷல்! நண்பர்களுக்கு எல்லாம் வாழ்த்துகள் சொல்லி குறுந்தகவல்கள் அனுப்பிவிட்டு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே இணையத்திற்கு இணைப்பு கொடுத்தேன். நம்ம ப்ளாகர்ஸ் எல்லாம் சுதந்தரதின ஸ்பெஷலா வித்யாசமா கலக்கியிருப்பாங்களேனு தேடிப் பார்த்தேன். சிலர் ரொம்ப அழகா எழுதியிருந்தாங்க. நாட்டுக்காக நாம என்னல்லாம் செய்யனும்னு லிஸ்ட் போட்டிருந்தாங்க. 'படிக்க' ரொம்ப நல்லா இருந்தது :-)       அப்புறம் பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்கள் செங்கோட்டையில் வைத்து ஆற்றியிருந்த உரையை ப் படித்தேன். ஏனோ மிகவும் சோகமாக இருந்தது. நிறைய விஷயங்கள் பற்றிப் பேசியிருந்தாலும் ‘ஊழல்’ பற்றிய பகுதிகள் தான் கவனத்தைத் தூண்டின. கடந்த சில காலமாக நம் நாட்டில் ...

என்றும்

என்றைக்கும் அல்லாத ஞாயிறு ஒன்றில் வந்து விழுந்ததொரு ‘மிஸ்ட் கால்’. மிஸ்ட்கால் செய்தவர் முகம் அறியாதவராயினும் ‘மிஸ்’ பண்ண விரும்பாத மாடர்ன் மங்கை.. மெசேஜிற்குத் தாவி அழைத்து உரையாடி இணையம் வழியே இதயங்களை இணைத்து கவிதைகள் இயக்கி கருத்துகள் பேசிக் கவலைகள் பகிர்ந்து கனவுகளில் பறந்து மற்றும் ஒரு ஞாயிறு ஒன்றில் சந்திப்பும் நடந்தேறி அண்ணலும் நோக்கி அவளும் நோக்க செம்புலப் பெயல்நீர் கலந்தது போல அன்புடை நெஞ்சம் இரண்டும் கலந்தன.. காதல் பிறந்தது! நாட்கள் ஓடின.. சுபயோக சுபதினம் ஒன்றில்.. இருவருக்கும் திருமணம் தனித்தனியாக! எக்காலம் ஆயினும் காதலுக்குக் கண் தானில்லை சாதி இருக்கிறது.. சாதியைக் கட்டிக்கொண்டு புரளும் பெற்றோர்களும் இருக்கிறார்கள்! மறக்கத் துடிக்கும் இரு மனங்களையும் சிதைந்து கிடக்கும் இரு ‘சிம்’களையும் தவிர சாட்சிகள் ஏது.. சாகடிக்கப்பட்ட நவயுகக் காதலுக்கு?!

என்னமோ ஏதோ..

      அலுவலகத்தில் ஆணி.. சாரி.. (எல்லாரும் இப்படிச் சொல்லிச் சொல்லி எனக்கும் அப்படியே வருது) வேலை அதிகமாக இருப்பதால் ப்ளாக்ஸ்பாட் பக்கம் எட்டி கூட பார்க்க முடியவில்லை! அதிக வேலை செய்ய வேண்டியிருக்கையில் “சரி பரவால்ல. இதெல்லாம் முடிச்சிட்டு இன்னைக்குப் போய் ஜாலியா ஒரு ப்ளாக் போஸ்ட் போட்றலாம்”னு சமாதானம் சொல்லிக்கிட்டே எந்த வேலையா இருந்தாலும் முடிச்சிடுறேன் :-) ப்ளாக் வச்சிருந்தா இது ஒரு அட்வான்டேஜ் போல!        சாயந்தரம் 5.00 மணிக்கு மேலே வாடிக்கையாளர்களின் வருகை ஓரளவிற்குக் குறைந்த பின்னர் அலைபேசியில் இயர்போனைச் சொருகி நான் பாட்டுக்கு பாட்டு கேட்டுட்டே கணினியில் வேலையைச் செய்துகொண்டு இருப்பேன்.               “...நான் மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பார்த்திருந்து மாமனுக்குக் காத்திருந்தேன் காணல.. அட சாயங்காலம் ஆன பின்னும் சந்த மூடிப் போன பின்னும் வீடு போயி சேர்ந்திடத்தான் தோனல....”       “மேடம் எப்பவும் தனியாவே பாட்டு கேட்குறாங்...