என்றைக்கும் அல்லாத
ஞாயிறு ஒன்றில்
வந்து விழுந்ததொரு
‘மிஸ்ட் கால்’.
மிஸ்ட்கால் செய்தவர்
முகம் அறியாதவராயினும்
‘மிஸ்’ பண்ண விரும்பாத
மாடர்ன் மங்கை..
மெசேஜிற்குத் தாவி
அழைத்து உரையாடி
இணையம் வழியே
இதயங்களை இணைத்து
கவிதைகள் இயக்கி
கருத்துகள் பேசிக்
கவலைகள் பகிர்ந்து
கனவுகளில் பறந்து
மற்றும் ஒரு
ஞாயிறு ஒன்றில்
சந்திப்பும் நடந்தேறி
அண்ணலும் நோக்கி
அவளும் நோக்க
செம்புலப் பெயல்நீர்
கலந்தது போல
அன்புடை நெஞ்சம்
இரண்டும் கலந்தன..
காதல் பிறந்தது!
நாட்கள் ஓடின..
சுபயோக சுபதினம்
ஒன்றில்..
இருவருக்கும் திருமணம்
தனித்தனியாக!
எக்காலம் ஆயினும்
காதலுக்குக்
கண் தானில்லை
சாதி இருக்கிறது..
சாதியைக் கட்டிக்கொண்டு
புரளும் பெற்றோர்களும்
இருக்கிறார்கள்!
மறக்கத் துடிக்கும்
இரு மனங்களையும்
சிதைந்து கிடக்கும்
இரு ‘சிம்’களையும் தவிர
சாட்சிகள் ஏது..
சாகடிக்கப்பட்ட
நவயுகக் காதலுக்கு?!
கருத்துகள்
அற்புதமான கவிதை
ஆயினும் இப்படி சிம் மூலம் தொடர்ந்து
ஏமாற்றுகிற கதைகளும் நிறைய
இருக்கத்தான் செய்கிறது
வார்த்தைகளும் சொல்லிச் செல்லும் விதமும்
கவிதையை உச்சத்தில் நிறுத்திப் போகிறது
சூப்பர் கவிதை
தொடர வாழ்த்துக்கள்
இரு ‘சிம்’களையும் தவிர
சாட்சிகள் ஏது..
சாகடிக்கப்பட்ட
நவயுகக் காதலுக்கு?!//
அடடா, எதுக்கு சிம்-மை சிதைச்சாங்க? :-)
இரு மனங்களையும்
சிதைந்து கிடக்கும்
இரு ‘சிம்’களையும் தவிர
சாட்சிகள் ஏது..
சாகடிக்கப்பட்ட
நவயுகக் காதலுக்கு?!//
சாட்டையடிக் கவிதை. வாழ்த்துக்கள்.
இன்றைய சூழலை சரியாகச் சொன்ன
அற்புதமான கவிதை
ஆயினும் இப்படி சிம் மூலம் தொடர்ந்து
ஏமாற்றுகிற கதைகளும் நிறைய
இருக்கத்தான் செய்கிறது
வார்த்தைகளும் சொல்லிச் செல்லும் விதமும்
கவிதையை உச்சத்தில் நிறுத்திப் போகிறது
சூப்பர் கவிதை
தொடர வாழ்த்துக்கள்
//
repeatu
மின்னஞ்சல்களின்
கடவுச் சொற்களே அறியும் அந்த
சிறு ஜன்னல்களில்
பகிரப்பட்ட
பகிரங்கப்படாத
கொடுக்கல்களையும்
வாங்கல்களையும்
ஆடைகளையும்
நிர்வாண மனங்களையும்.
(எத்தனை களையும்!)
/*இன்றைய சூழலை சரியாகச் சொன்ன
அற்புதமான கவிதை
ஆயினும் இப்படி சிம் மூலம் தொடர்ந்து
ஏமாற்றுகிற கதைகளும் நிறைய
இருக்கத்தான் செய்கிறது
வார்த்தைகளும் சொல்லிச் செல்லும் விதமும்
கவிதையை உச்சத்தில் நிறுத்திப் போகிறது
சூப்பர் கவிதை
தொடர வாழ்த்துக்கள்*/
மிக்க நன்றி !!!!!!!!!!
//சிதைந்து கிடக்கும்
இரு ‘சிம்’களையும் தவிர
சாட்சிகள் ஏது..
சாகடிக்கப்பட்ட
நவயுகக் காதலுக்கு?!//
அடடா, எதுக்கு சிம்-மை சிதைச்சாங்க? :-)*/
அடியோடு மறக்கனும்ங்கிற லாஜிக் போல :-)
good.
How are you? Its been a long time.*/
நான் நலம் சித்ராக்கா. தாங்கள், குட்டீஸ் நலமா? வருகைக்கு நன்றி..
//மறக்கத் துடிக்கும்
இரு மனங்களையும்
சிதைந்து கிடக்கும்
இரு ‘சிம்’களையும் தவிர
சாட்சிகள் ஏது..
சாகடிக்கப்பட்ட
நவயுகக் காதலுக்கு?!//
சாட்டையடிக் கவிதை. வாழ்த்துக்கள்.*/
மிக்க நன்றி ‘பரிவை’ சே.குமார் :-)
என்ன சிரிப்பு இது?
அனுபவம் எனதாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லையே........