நானு ஏன் வேலையு
Oct 14, 2011
வணக்கம்! ப்ளாக் பார்க்கும் போதுலாம் “ஏதாவது போஸ்ட் எழுதனுமே”ன்னு தெனமும் தோணும்.. அதுக்காகச் சும்மா கிடக்குதேனு எதையாவது கிறுக்கிகிட்டு இருக்க முடியுமா? எதாச்சும் சரக்கு இருந்தா தான எழுத முடியும்.. அப்படீனுதான் இந்தப் பதிவு எழுதி போஸ்ட் பண்ணுதவெரைக்கும் நெனச்சிட்டு இருந்தேன்.. :-) (சோ, போறவங்க இப்பவே போயிக்கோங்க, உள்ள ஒன்னுமில்ல)
ஆஃபீஸ்ல ஒரே வேல.. ஆமா ஒரே வேல தான். வாடிக்கையாளர்கள் மட்டும் வெதவெதமா.. அதெப்படி ஏன்கிட்ட வாற எல்லாக் கஸ்டமர்ஸுமே ஒன்னு... ரொம்ப தொலவுலருந்து வாறோம்பாங்க, அல்லது சாயங்காலம் ஃப்ளைட்.. அப்ராட் போனூம்பாங்க.. இன்னைக்கு லீவ் எடுத்துட்டு வந்திருக்கேன்.. முடிச்சிக் குடுத்துருங்கம்பாங்க. அம்மா அப்பா வயசானவங்க.. மூட்டுவலி இருக்கு. ரொம்ப நேரமா காத்துகிட்டு உக்கார்ந்திருக்க முடியாதும்பாங்க.. ஒன்னு.. கைக்கொழந்தைய கையிலயே வச்சிருப்பாங்க.. இல்லன்னா கொழந்தைய ஸ்கூல்லருந்து கூட்டிட்டு வரனும்.. சீக்கிரமா முடிச்சிக் கொடுங்கம்பாங்க.....
Labels:
சும்மா
Posted by
சுபத்ரா
at
9:05 PM
16
comments
Subscribe to:
Posts (Atom)