முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நானு ஏன் வேலையு


வணக்கம்! ப்ளாக் பார்க்கும் போதுலாம்ஏதாவது போஸ்ட் எழுதனுமேன்னு தெனமும் தோணும்.. அதுக்காகச் சும்மா கிடக்குதேனு எதையாவது கிறுக்கிகிட்டு இருக்க முடியுமா? எதாச்சும் சரக்கு இருந்தா தான எழுத முடியும்.. அப்படீனுதான் இந்தப் பதிவு எழுதி போஸ்ட் பண்ணுதவெரைக்கும் நெனச்சிட்டு இருந்தேன்.. :-) (சோ, போறவங்க இப்பவே போயிக்கோங்க, உள்ள ஒன்னுமில்ல)

ஆஃபீஸ்ல ஒரே வேல.. ஆமா ஒரே வேல தான். வாடிக்கையாளர்கள் மட்டும் வெதவெதமா.. அதெப்படி ஏன்கிட்ட வாற எல்லாக் கஸ்டமர்ஸுமே ஒன்னு... ரொம்ப தொலவுலருந்து வாறோம்பாங்க, அல்லது சாயங்காலம் ஃப்ளைட்.. அப்ராட் போனூம்பாங்க.. இன்னைக்கு லீவ் எடுத்துட்டு வந்திருக்கேன்.. முடிச்சிக் குடுத்துருங்கம்பாங்க. அம்மா அப்பா வயசானவங்க.. மூட்டுவலி இருக்கு. ரொம்ப நேரமா காத்துகிட்டு உக்கார்ந்திருக்க முடியாதும்பாங்க.. ஒன்னு.. கைக்கொழந்தைய கையிலயே வச்சிருப்பாங்க.. இல்லன்னா கொழந்தைய ஸ்கூல்லருந்து கூட்டிட்டு வரனும்.. சீக்கிரமா முடிச்சிக் கொடுங்கம்பாங்க.. எங்க லோன் சான்க்ஷன் ஆகி எவ்ளோ நாளாச்சு இன்னும் ஏன் பெண்டிங்லயே வெச்சிருக்கீங்கம்பாங்க. இன்னைக்கு 12 மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிருக்கேன்.. மணி 11.55 ஆயிட்டு இன்னும் முடிக்கலையானு முந்திரிகொட்ட மாரி வந்து நிப்பாங்க.. இது இல்லன்னா, கூட வேல பாக்குற ஸ்டாஃப் யாராது வந்து இது ன் வொய்ஃபோட ஒன்னு விட்ட தங்கச்சியோட வீட்டுக்காரரோட அக்கா பையனோட எஜுகேஷன் லோன்... ஒரு பத்து நிமிசம் வெயிட் பண்ணுதேன்.. அதுக்குள்ள முடிச்சிருவீங்கள்லம்பார். இல்ல சார்.. ஒரு ஃபைல் முடிக்க கொறஞ்சது அரைமணி நேரமாவது ஆகும்பேன். சரி அப்போ பத்து நிமிசம் வெயிட் பண்ணுதேன்..அப்படிம்பார். அய்யோ... கடவுளேன்னு நொந்துபோய் டேபில்ல குனிஞ்சு தலையை முட்டிக்கிட்டு ஒன்னுமே ஆவாததுமாரி நிமிர்ந்து பார்த்துச் சிரிச்சுசரி சார்னு தலைய ஆட்டிவப்பேன்.

இந்தமாரி வெதவெதமா கஸ்டமர்ஸ் வாறது ஒன்னும் கஷ்டம் இல்ல. ஆனா இவங்கெல்லாரும் ஒரே நேரத்துல வருவாங்க பாருங்க.. அவ்ளாதான்! நான் காலி.. சொல்லப்போனா அத நிர்வகிக்கிறதுல தான் திறமை.

இப்படித்தான் ஒரு தடவை எங்க அம்மா வயசுல ஒருத்தங்க ஏன்கிட்ட வந்து ரொம்ப ரிக்வெஸ்ட் பண்ணி அவங்களோட லோன் ஃபைல் ஒன்ன ஓபன் பண்ணித்தரச் சொல்லிக் கேட்டாங்க. நான் சாப்டக்கூட போவாம மத்யானம் சாப்பாட்ட மிஸ் பண்ணிட்டுப் பசியில உட்கார்ந்து எல்லாம் செஞ்சு முடிச்சு ஃபைலைச் சேர வேண்டிய எடத்துக்குப் பத்தரமா அனுப்பி வெச்சதுக்கப்புறம் பதிலுக்கு ஒரு நன்றி கூடாம சொல்லாம அவங்க போனம்போது தான் நெனைச்சேன்.. “அரசியல்ல இதெல்லாம் சக...ஜமப்பா

என்ன.. ஒரு கஷ்டம். எனக்கு ஹிந்தியில யாரையும் ஏச தெரியமாட்டேங்கு. அதனாலயே எனக்கு வாற கோவத்த எல்லாம் உள்ளயே அடக்கி அடக்கி வெச்சு பொறுமையின் சிகரமாயிட்டே வாறேன். பாப்போம்.. இதெல்லாம் எங்க போயி முடிய போவுதுன்னு.

பிறவு,ராதையின் நெஞ்சமே ப்ளாக் லின்க்க மாத்திட்டேன்.. செலபேர் தேடிப்பாத்துட்டு இல்லன்னு போயிருப்பீங்க.. அறிவுப்பு இல்லாம மாத்திட்டேன். சாரி.. இந்த ப்ளாக பத்திச் சொல்லும் போது தான் ஒன்னு நியாபகம் வருது. நான் எழுதுறது எல்லாம் ஏன் ஆசைக்காகவும் ஆறுதலுக்காகவுந்தான். நான் ஒன்னும் தபூசங்கரோட தங்கச்சினு சொல்லிக்கிடல. புடிக்கலனா படிக்காதீங்க.. அதவுட்டுட்டு மேகம் எப்படி நனைக்கும் கழுத எப்படி கனைக்கும்னு வெட்டியா வந்து கேள்வி கேட்டுகிட்டு இருக்குற செல அனானி அண்ணன்களோட தொல்ல தாங்க முடியல.. வேண்டா வேண்டாம்னு சொன்னாலும் பி.ஹெச்.டி. படிப்புக்கு ஆராய்ச்சி பண்ணுதத மாரி நான் எழுதியிருக்குறத எடுத்து ஆராய்ச்சி பண்ணிகிட்டு கூடகொஞ்சம் என்னிய பிரபலமாக்கிடுதாங்க.. போதும்ணே! உருப்படியா எதாச்சும் வேல இருந்தாப் போயிப் பாருங்க.. இதுக்குமேல ஏதாச்சும் சொன்னேங்கன்னா...................................

கடைசியா ஒன்னு.. சவால் சிறுகதை – 2011 ன்னு சிறுகதைப் போட்டி ஒன்னு அறிவிச்சிருக்காங்க. கலந்துகிடனும்னு நினச்சீங்கன்னா அந்த லின்க்க படிச்சித் தெரிஞ்சிக்கோங்க. கலந்துகிடுறவங்களுக்கு ஆல் பெஸ்ட்.

தபூசங்கர பத்திப் பேசிட்டு அவரோட கவிதைய ஷேர் பண்ணாம போவ முடியுமா.. இதோ..

உன்னிடமிருந்து நான்
விடைபெறாமல்
வந்ததற்குக் காரணம்
கடைசிவரை
நீ என்னுடனே
இருக்க வேண்டும்
என்பதற்காகத்தான்!

சரி.. அப்பம் நானும் உங்ககிட்ட இருந்து விடைபெறாமல் போறேன்.. தொடர்ந்து வாங்க.. என் ப்ளாக் பக்கம் :-) HAPPY WEEKEND...

********

கருத்துகள்

ப்ரியமுடன் வசந்த் இவ்வாறு கூறியுள்ளார்…
ஏனுங் அம்மிணி இது எந்தூரு பாஷைங்கம்மிணி?
Erode Nagaraj... இவ்வாறு கூறியுள்ளார்…
யாரேனும் இப்படி பதில் சொன்னால்?

கண்டதுண்டா,
கேள்விக்குறிகளோடு செல்பவர்களை?
விடை பெறும் சாக்கிலேனும்
வைத்திருந்திருப்பேன்
என்னுள் உன்னை.

தந்து விட்டுப் போயிருந்தால்
அறிந்திருப்பாய்
பகிர்தல் என்னும் நெகிழ்வை
தருதல் என்னும் மகிழ்வை.

வராது என்னைத் தவிக்கவிட்டு
வரிகள் என்ன வேண்டியிருக்கு...
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
அட முதல் பாராவில் சொன்னத அழகா செஞ்சுட்டீங்களே...
மாய உலகம் இவ்வாறு கூறியுள்ளார்…
அப்பம் நானும் உங்ககிட்ட இருந்து விடைபெறாமல் போறேன்.. தொடர்ந்து வாங்க.. என் ப்ளாக் பக்கம் //

தொடர்ந்து வருகிறோம்.. வாழ்த்துக்கள்.
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
செலபேர்????yaaru avangalam..
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
அப்பாட ஒரு கவிதையினி
இன்னும் இருக்காங்களா
ஓகே ஓகே
பொறுமையின் சிகரமே
வாழ்க வாழ்க உங்கள் தொண்டு
அந்த அம்மா சார்பா
உங்களுக்கு
நன்றி கூறிக்கொள்கிறோம்
இப்போ சந்தோசமா ..
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
மேடம் உங்க ப்ளாக் கவிதை படித்து விட்டு
நான்கூட ஏதோ எழுத ஆரம்பித்து விட்டேனா பாத்துக்கோங்க
உங்க கிட்ட என்னமோ இருக்கு ..

My best wishes to YOur work..
suba.
அமுதா கிருஷ்ணா இவ்வாறு கூறியுள்ளார்…
லோனு வேண்டும் எங்கின வந்து பார்க்கணும்.
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
//லோனு வேண்டும் எங்கின வந்து பார்க்கணும்.
//
repeatu
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ Rathnavel
நன்றிங்க :)

@ வசந்த்
இது ஊர் பாஷை இல்ல..ஏன் பாஷை :)

@ ஈரோடு நாகராஜ்
யாரும் சொல்லமாட்டாங்க. நீங்க தான் சொல்றீங்க..பதில் கவிதை பன்ச்!

@ கலாநேசன்
இல்லையே..அழகாச் செஞ்சத தான் முதல் பாராவில சொல்லியிருக்கேன் :)

@ மாய உலகம்
டேன்க்ஸ் :)

@ சிவா
ரொம்ப சந்தோசம்..எழுதுங்க பாக்கேன்.

@ அமுதா கிருஷ்ணா
நெசமாவே லோன் வேணும்னா என் ஈமெயில் ஐ.டி.க்கு உங்க தொலைபேசி எண்ணை அனுப்புங்க :)

@ ஜெய்சங்கர் ஜெகன்னாதன்
அய்யோ..கமெண்ட்டயாவது சொந்தமா எழுதாக்கூடாதா? திருவரங்கா...
Utopian இவ்வாறு கூறியுள்ளார்…
Neenga innum Gujarat La ethanal than kuppa kotta poringa, neenga sonna athae poruma enakum vanthuduchu, solla ponna ippa lam kovamae varathu illa. Unga kavithai blog la oru puthu update illa :) vazthukal.
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
@ அமுதா கிருஷ்ணா
நெசமாவே லோன் வேணும்னா என் ஈமெயில் ஐ.டி.க்கு உங்க தொலைபேசி எண்ணை அனுப்புங்க :)///NIJAMAVATHAN CHOLRENGAL...

ooruku varen oru kadai tirakanum..athuku loan venum..tharuveengala madam.
COOL இவ்வாறு கூறியுள்ளார்…
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
தக்குடு இவ்வாறு கூறியுள்ளார்…
நான் கூட திருனவேலில வீடு கட்ட குஜராத்ல இருக்கும் உங்களோட பாங்குல உங்க கவுண்டர்ல லோனுக்கு விண்ணப்பிக்கலாம்னு இருக்கேன்! :))
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ Utopian
Think tank has changed its name and roaming here I think :-) Thanks for ur wishes sir.

@Siva
Yeah sure. அதுக்குத் தானே எங்க பேங்கு இயங்கிகிட்டு இருக்கு :-)

@ cool msg
மிக்க நன்றி! உங்களுக்கும் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துகள் (அடுத்த தீபாவளிக்கு) :-)

@ தக்குடு
‘தக்குடு’னு பேரு வெச்சிருக்கிறவங்களுக்கு எல்லாம் நாங்க பெட்ரோமாக்ஸ் லைட் தர்றதில்ல :-)
சாதாரணமானவள் இவ்வாறு கூறியுள்ளார்…
இதுதான் இயற்கையா இருக்கு சுபா... எங்களுக்கும் திர்நவேலி பாஷை பழக்கமாக ஒரு வாய்ப்பா இருக்கும்.. Keep it up

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

பொன்மொழிகள் - சுவாமி விவேகானந்தர்

நேற்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தையொட்டி அவரின் கருத்துக்களை நினைவுகூரலாம் என எண்ணியிருந்தேன். இன்று தான் முடிந்தது. Ø   Stand up, be bold, be strong. Take the whole responsibility on your own shoulders, and know that you are the creator of your own destiny. Ø   They alone live who live for others, rest are more dead than alive. Ø   Arise! Awake! And stop not till the goal is reached. Ø   To be good and to do good – that is the whole of religion. Ø   Strength is life, Weakness is death. Ø   All the power is within you; you can do anything and everything. Believe in that; don’t believe that you are weak. Stand up and express the divinity within you. Ø   Whatever you think, that you will be; if you think yourself strong; strong you will be. Ø   Stand and die in your own strength; if there is any sin in the world, it is weakness; avoid all weakness; for weakness is sin, weakness is death. Ø   Neither money pays, nor name pays, ...