எழுதி முடித்துவிட்டுக்
காணாமல்
தேடிய
பேனா மூடியொன்று
பின்
ஒரு மழைநாளின்
கேளிக்கைப்
பொழுதின்போது
சேற்றில்
புதைந்தவாறு
காட்சியளித்துக்
கொண்டிருந்தது.
யாரும் பார்க்காவண்ணம்
எடுத்து
வெயிலில்
போட்டுவிட்டு
நினைவின்றி வீடு திரும்பியதும்
தொலைந்து
போனது
அதன் ஆயுள்.
தேடிக்கிடைக்காத
பொருட்கள்
எப்படியும்
வேறுசிலப்
பொருட்களின்
தேடல்களின்போது
கிடைத்தேவிடுகின்றன.
...அப்படியே
எப்பொருளின்
எந்நாளையத்
தேடலில்
கிடைத்தே
போய்விடப்போகிறது
நான் எப்பொழுதும்
தேடிக்கொண்டிருக்கும்
வாழ்க்கை
எனும் பொருள்?
*
*