முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

சிரிப்புக்கு நான் பொறுப்பு :)

எப்படில்லாம் யோசிக்கிறாங்கப்பா...!! இந்த அறிவை ஆக்கப் பூர்வமாகப் பயன்படுத்தினா இந்தியா எங்கேயோ.......போயிடும்!! :-) என் தம்பி(அபினேஷ்) ஸ்கூலுக்குப் போயிருந்தப்போ அவனோட மொபைலில் இருந்து சுட்ட குறுந்தகவல்கள் கீழே :-) மிகவும் ரசிக்கும்படி இருந்ததால் உங்களிடம் பகிர்ந்துகொள்ளத் தோன்றியது. # கணக்கு டீச்சர்: நான் இவ்வளவு நேரம் பாடம் எடுத்ததுல உனக்கு என்ன தெரிஞ்சது? மாணவன்: சாயங்காலம் ட்யூசன் போறது நல்லதுனு தெரிஞ்சது. # படிக்கும் போது தூக்கம் வந்தா என்ன செய்யனும்? நமக்குப் படிப்பு தான் வரல.. தூக்கமாவது வருதேனு தூங்கிடனும். # வேதனையோடு போன எனக்கு பச்சத்தண்ணி.. பட், வேடிக்கை பார்க்க வந்தவருக்கு பப்ஸ் & டீ! இந்தக் கொடுமை எங்க நடக்குது தெரியுமா? ”EXAM HALL” # சினம் கொண்ட சிங்கத்தை ஒரு ப்ளாஸ்டிக் கவரில் அடைக்க முடியுமா? முடியும்.. எப்படினு தெரியுமா? வந்து என் IDENTITY CARD-அ வாங்கிப் பாருங்க :) # உன் நண்பனை அளவோடு நேசி; ஒரு நாள் அவன் உன் பகைவன் ஆகலாம் உன் பகைவனை அளவோடு வெறு; ஒரு நாள் அவன் உன் நண்பன் ஆகலாம். # மெழுகுவர்த்திக்கு உயிர் கொடுக்க உயிர்விட்டது தீக்குச்சி.. உயிர்...

மௌனக் கவி!!

என் ப்ரிய தோழி ’ சித்ரா ’வின் அம்மா திருமதி.சுஜாதா (அவர்கள் கூட எனக்குத் தோழி தான்) தான் பத்தாம் வகுப்பு படிக்கையில் எழுதிய கவிதை :-) இங்கு தான் முதலில் மேடையேறுகிறது ;-) படித்துவிட்டுக் கண்டிப்பாகக் கருத்துகளைக் கூறுங்கள் :-) ம யிலதன் நடனம் மாரியிற் கண்டேன்! மா ங்குயில் கீதம் மாலையிற் கேட்டேன்! மி தந்திடும் நாவாய் கடலினிற் கண்டேன்! மீ ட்டிநல் இசையினை வீணையிற் கேட்டேன்! மு க்கனிச் சாற்றினில் நற்சுவை கண்டேன்! மூ தாட்டிச் சொல்லினில் அனுபவம் கேட்டேன்! மெ ன்மை என்பதை மலர்களிற் கண்டேன்! மே கநிற அழகினிற் கண்ணனைக் கண்டேன்! மை நிற விழிகளில் மானினம் கண்டேன்! மொ ட்டு மலர்களில் யௌவனம் கண்டேன்! மோ கனம் என்பதை நற்காதலிற் கண்டேன்! மௌ னமாய் என்மனம் கவியாகக் கண்டேன்! நன்றி சுஜா ஆன்டி! * * 

டேபிள் ரோஸ்

டிஸ்கி: பிசியா இருக்குறவங்க, மொக்கைப் பதிவு படிக்காதவங்க....சாரி பிடிக்காதவங்க யாரும் இதப் படிக்கவும் வேண்டாம். படிச்சதுக்கு அப்புறம் என்னைத் திட்டவும் வேண்டாம். அப்படியே போயிருங்க :-) Others may go ahead :-) இதுவும் டார்ட்டாய்ஸ் தான். பொதுவாவே ‘பூ’ன்னாலே பெண்களுக்குப் ரொம்பப் பிடிக்கும். அதுவும் சின்ன பெண்களுக்கு? கேட்கவே வேண்டாம். பாய்கட் பண்ணியிருந்தாலோ பாப்கட் பண்ணியிருந்தாலோ கூட வச்சுவிட சொல்லி அடம்பிடிக்கும். நானும் அப்படித்தான் இருந்தேன் :-) இப்பவும் அப்படித்தான் இருக்கேன் :-)  மல்லிகை, பிச்சி, முல்லை, ரோஜா, கனகாம்பரம், டிசம்பர் பூ, செவ்வந்தி(மஞ்சள், வெள்ளை) தலையில் வைத்துக்கொள்ளப்படும் பொதுவான பூக்கள் இவை. மல்லிகை, பிச்சி, கனகாம்பரம் மூன்றும் சாதாரணமாகக் கிடைக்கக் கூடியவை(அந்த வயதில்). சனிக்கிழமை கலர்டிரஸ்-னாலே அம்மா வச்சு விடுவாங்க. என் தோழிகள் எல்லாருமே அப்படித்தான். சில பேர் கலர் கலரா டிரஸ்-கு மேட்சிங்கா டிசம்பர் பூ வச்சிட்டு வருவாங்க. அப்போ எங்க வீட்டுல ரோஜாச்செடி கிடையாது. ஆனா என் தோழிகள் வச்சிட்டு வர்ற ரோஜாப் பூக்களைப் பார்த்து ரொம்ப ஆசையா இரு...

இட்லிவடை

என் அபிமான வலைதளமான “இட்லிவடை” யில் எனது இரண்டு கவிதைகள் வெளியாகியுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்... :-) படித்துவிட்டு உங்கள் கருத்துகளைக் கூறுங்கள். http://idlyvadai.blogspot.com/2010/11/blog-post_06.html அன்புடன் சுபத்ரா :-) * *

வாழ்த்துகள்

தித்திக்கும் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள் . HAPPY DIWALI அன்புடன் சுபத்ரா :-) * *

பதிவுலகத் தோழர்களே..

என்னவோ நான்  “ இது கதையல்ல நிஜம் ”னு ஒரு பதிவு போட்டதைப் பத்தி.. ”இதெல்லாம் பொய், நம்பாதே.. ரொம்ப அப்பாவியா இருக்க.. அவங்கள பிச்சையெடுக்குறதுக்கு ஊக்குவிக்காத..” அப்படின்னும் ”சே.. என்ன ஒரு தாராள குணம்.. பத்து ரூபா கொடுத்திருக்கியே..” அப்படினு எல்லாம் நிறைய டையலாக் பேசினீங்களே.. மகா ஜனங்களே.. இங்க வாங்க. இதக் கொஞ்சம் படிச்சுப் பாருங்க. http://gconnect.in/gc/lifestyle/get-ahead/narayanan-krishnan-hero-of-india.html 2002-ம் ஆண்டில் உயர்தர நட்சத்திர உணவகங்களில் பணிபுரியும் சமையல்காரர்களுக்கான (Chef) சிறந்த விருதைப் பெற்று சுவிட்சர்லாந்து சென்று வேலை பார்க்கும் ஒரு அருமையான வாய்ப்பை பெற்றார் நம் கதையின் ஹீரோ.  சரி.. சுவிட்சர்லாந்து போறதுக்கு முன்னாடி நம்ம ஊருக்குப் போவேமேனு போயிருக்கார். மதுரையில் இருக்கிற ஏதோ ஒரு கோயிலுக்குப் போற வழியில ஒரு பாலத்துக்கு அடியில ஒரு காட்சியப் பார்த்திருக்கார். அங்க ஒரு வயதான மனிதர் பசியில.. சாப்பிடுறதுக்கு ஒன்னுமில்லாம தன்னோட கழிவைத் தானே சாப்பிட்டுட்டு இருந்திருக்கார். ஃபிரண்ட்ஸ்.. நான் கேக்குறேன்.. நம்மில் யாரோ ஒருத்தர் இதே காட்சியப் பார்...