முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

என்பிலதனை வெயில் காயும்

முதன்முதலாக ஒரு புத்தகத்தைப் பற்றி நான் எழுதியிருக்கும் பதிவு. சாகித்ய அகாடமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் அவர்கள் எழுதிய புதினத்தைப் பற்றியது.. இட்லிவடை யில் வெளிவந்துள்ளது. நன்றி: இட்லிவடை படித்துவிட்டு நிச்சயம் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.. கட்டுரை: சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் எழுதி 1979-ல் வெளிவந்த புத்தகம் “என்பிலதனை வெயில் காயும்”. ஏதோ திருக்குறள் போல இருக்கிறதே என எண்ணிக் கொண்டே வாங்கினேன். படிக்கத் தொடங்கியதும் பாதியில் கீழே வைக்க முடியவில்லை. ஒரே ஸ்ட்ரெட்சில் படித்து முடித்து புத்தகத்தை மூடிக் கீழே வைக்கையில் தான் மீண்டும் அந்தத் ‘தலைப்பு’ கண்ணில் பட்டது. புத்தக அலமாரியில் இருந்த திருக்குறள் புத்தகத்தை வேகமாகப் புரட்டி அப்போதே எதையோ தேட ஆரம்பித்திருந்தேன்... ’விமர்சனம்’ என்று சொன்னால் அது மிகை. புத்தகம் படிக்கையில் எனக்குத் தோன்றிய உணர்வுகளைக் கருத்துகளாகப் பதிய விரும்பியே இந்தச் சிறு முயற்சி. நான் படித்த நாஞ்சில் நாடனின் முதல் புத்தகம் இது. புத்தகம் முழுக்க ‘நாகர்கோவில்-தமிழ்’. நான் மணிமுத்தாறில் தங...

SMS

ஊருக்கு வந்து, மறுபடியும் என் தம்பியின் மொபைலில் இருந்து ‘சுட்ட’ குறுந்தகவல்கள் உங்களுக்காக! பிடிச்சத ரசிங்க! பிடிக்கலைனா விடுங்க! என் கிட்ட சண்டைக்கு வராதீங்க.. இதில் உள்ள Contents-க்கு எல்லாம் கம்பனி பொறுப்பேற்காது! 12th பெயில் ஆனா வேட்டைக்காரன் அனுஷ்கா மாதிரி ஃபிகர் மாட்டும்; 10th பெயில் ஆனா படிக்காதவன் தமன்னா மாதிரி ஒரு ஃபிகர் செட் ஆகும்; அரியர் வெச்சா வாரணம் ஆயிரம் சமீரா ரெட்டி மாதிரி ஒரு ஃபிகர் செட் ஆகும்; நல்லா படிச்சா காதல் கொண்டேன் தனுஷ் நிலைமை தான்! சோ, சுமாரா படிங்க.. சூப்பர் ஃபிகரா புடிங்க :-) கல்யாண விருந்து தான், ஆனாலும் கை நனைக்க முடியவில்லை! கண்கள் நனைந்தன.. காரணம் “சோறு முடிஞ்சு போச்சு மச்சி” காதல் ஒரு வினோதமான எக்ஸாம்...! அதில் எப்போதும் பெண்களுக்கு “பாஸ் மார்க்” ஆண்களுக்கு “டாஸ்மாக்” சோ, பீ கேர்ஃபுல். வீட்டில் இருந்து வைன்ஷாப்பிற்குப் போக வைப்பது ‘காதல்’ வைன்ஷாப்பில் இருந்து வீட்டுக்குக் கூட்டிட்டுப் போவது ‘நட்பு’. அப்பா: ரேன்க் கார்ட் எங்கடா? பையன்: இந்தாங்கப்பா.. அப்பா: அடப்பாவி! 5 பாடத்துலயும் பெயிலா? இனிமேல் என்னை ‘அப்பா’ன்னு கூப்பிடாத! ப...

குட்டீஸ் எனப்படும் குட்டிப்பிசாசுகள் (பகுதி-2)

குட்டீஸ் எனப்படும் குட்டிப்பிசாசுகள் –பகுதி ஒன்று படிக்க கட்டுப்பாடுடன் வளர்ந்தவளுக்கு இந்தக் குழந்தைகளைப் பார்க்கையில் ஏற்படும் எரிச்சலுணர்வு ஒருவித பொறாமையினாலோ என்று எண்ணிப்பார்த்தேன். விடை தெரியவில்லை. காயத்ரியையும் கோபியையும் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். இருவரும் சுட்டித்தனத்தின் திருவுருவங்கள். வீட்டில் யாருடைய தொந்தரவுமின்றி தனிமையே கதியாக இருந்து பழகியவளுக்கு இந்தக் குழந்தைகளின் அருகாமை சிறிது தொந்தரவாகத் தான் இருந்தது. இருந்தாலும் இந்தத் தருணங்கள் மீண்டும் கிடைக்கப்பெறாதவை என்பதை அறிந்திருந்தமையால் அவற்றை ரசிக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளத் தொடங்கியிருந்தேன். எனது அறைதான் அவர்களுக்குத் “திறந்திடு சீசேம்” மந்திரம் சொல்லிக்கொண்டு உள்ளே குதித்து ஓடி கொண்டாட்டம் போடும் 'அலிபாபா குகை'. அதில் அவர்களுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் இருக்கும். சில பொருட்கள் என்னவென்றே புரியாதவை. ஆனாலும் அவற்றையும் எடுத்து ஆராய்ந்து பார்த்து யாரும் அறியாமல் இருந்தவாறே வைத்துவிட்டுச் செல்வது. இந்த ‘இருந்தவாறே வைத்துவிட்டுச் செல்வது’ எல்லா வஸ்துகளுக்கும் பொருந்...

ஹாய் தோழி!

என்னடா இவளும் அழகுக் குறிப்புகள் எழுத ஆரம்பிச்சிட்டான்னு நினைக்கிறீங்களா ? ஆமாங்க :-) நிறைய பேர் ‘ இயற்கை அழகே அழகு ; செயற்கையாக எதுக்கு நாம ஏதாவது செய்யனும் ?’ என்றும் ‘ நானெல்லாம் பிறந்ததிலிருந்து லைஃப்பாய் சோப்பும் பான்ட்ஸ் பவுடரும் தவிர வேறு எதுவுமே என் முகத்திற்குப் போட்டது இல்லை ; ஆனாலும் எனது தோல் இவ்வளவு தூய்மையாக இருக்கிறது ’ ( என் அம்மா தான் !) என்பது போன்ற வசனங்களும் பேசி நான் கேட்டிருக்கிறேன் . என்னைப் பொறுத்தவரையில் இயற்கையாகவே எல்லாம் அமையப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள் . ஆனால் எல்லாமே பெர்ஃபெக்ட்டாக அமைந்திருப்பது சில பேருக்குத் தான் . அப்படி அமையப் பெறாதவர்கள் சில சின்னச் சின்ன முயற்சிகள் பயிற்சிகள் செய்து நம்மை நாமே செம்மைபடுத்திக் கொள்வதில் தவறேயில்லை . இந்தப் பகுதியில் கூந்தலைப் பராமரிப்பதற்கான சில டிப்ஸ் கொடுக்கிறேன் . முயற்சி செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைத் தவறாமல் பதியுங்கள் ஃப்ரென்ட்ஸ் ! பொதுவாக அது இது என்று பலவற்றை முயற்சி செய்து பார்த்துவிட்டு நமக்கு எதுவ...