மஞ்சள் பூசிக் குளித்திராத தமிழ்ப் பெண்கள் இருக்கிறீர்களா ? வாய்ப்பு குறைவு தான் . இன்றைய காலக்கட்டத்தில் எத்தனைப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிக்கிறீர்கள் ? இதற்கும் வாய்ப்பு குறைவு தான் ! எனது பள்ளிக்கால நினைவுகளில் மறக்க முடியாத ஒன்று – விடுமுறை நாட்களில் தோழிகளுடன் தாமிரபரணி ஆற்றுக்குச் சென்று வெகுநேரம் நீந்தி விளையாடிக் குளித்து விட்டு வருவது . எப்போதாவது நிகழும் இந்நிகழ்ச்சியில் நீங்காமல் இடம் பெற்றிருப்பது ‘ மஞ்சள் ’ பூச்சு . ஆற்றுக்குக் கிளம்பும் முன்னரே யாரவது ஒரு அக்கா ஒரு சிறிய செய்தித்தாள் துண்டில் வேண்டிய அளவு கோபுரம் பூசுமஞ்சள் தூளை வைத்து மடித்து எடுத்துக் கொண்டு வருவார் . சோப்பு தேய்த்துக் குளித்து முடித்தவுடன் இறுதியாகத் தோழிகள் அனைவரும் அக்கா கொண்டு வந்திருந்த அந்த மஞ்சள் பொட்டலத்தைப் பிரித்து ஆளுக்குக் கொஞ்சமாக எடுத்து முகத்திலும் கைகளிலும் ( சிலர் குதிகால்களிலும் ) தேய்த்துக் கொண்டு அனல் பரக்கும் அந்த உச்சி வெயிலில் இடுப்ப...
Hi from a Hikikomori 🐌