முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

களவாடிய காலம்

முகத்தைச் சுழித்து அருகே அப்பாவின் அதட்டலுக்குப் பயந்தவாறே வாய் நிறைய நீரை நிரப்பி கண்களைச் சிக்கென மூடியபடி தலையை உயர்த்தி தொண்டைக்குள் சரியாகப் போட்டு விழுங்கியது போய்.. இயல்பாக வாயில் வைத்து தண்ணீர் விட்டு மாத்திரையை விழுங்கிவிடும் த ருணங்களில் உணர்கிறேன் நான் வளர்ந்து விட்டதை..

செங்க சூள காரா..

ஆகஸ்ட் மாசம் Friend ’ s Day வந்தாலும் வந்தது .. Airtel- ல எனக்கொரு Hello Tunes வசதி Rs.198/- க்கு கிடைச்சது ! அதன்படி , 1.     ஒரு வருடத்துக்கு Hello Tunes வாடகை – இலவசம் ! 2.     ஒரு வருடத்துக்கு Unlimited Song Change -  இலவசம் !! :-) கேட்கவா வேணும் .. ஏற்கனவே மாசம் ஒருமுறை பாட்டை மாத்திகிட்டே இருந்த எனக்கு இந்த ஸ்கீம் வந்தாலும் வந்தது .. தினம் தினம் புதுப் புது பாட்டு தான் !! இதுல என்னவிட சந்தோஷப் பட்டது என் தம்பி அபி தான் .. ஏன்னா ஃபோன் பண்ணிக் கேட்குறது அவன் தான ? அடிக்கடி எனக்குக் கால் பண்ணி , “எக்கா Airtel Super Singer- ல இந்தப் பாட்டு கேட்டேன் .. சூப்பரா இருந்தது” “புதுசா இந்தப் பாட்டு வந்திருக்கே .. கேட்டியா ? ” “ஒடனே ______ ங்கிற நம்பருக்கு மெசேஜ் அனுப்பி அதுல 2- ம் நம்பர் வர்ற பாட்டவைய்யி .. நான் கேட்கனும்” “எக்கா , இந்தப் பாட்டு என்ன படம் தெரியுமா .. ” இப்படில்லாம் பல கேள்விகள் .. எப்படியாச்சும் கன்வின்ஸ் பண்ணி அவன் நினைக்கிற பாட்டையெல்லாம் activat...