இப்பொழுது தான் 12-01-2011 அன்று அபியின் 18-வது பிறந்தநாளுக்கு வாழ்த்தியது போல் இருக்கிறது. அதற்குள்ளே அவனுக்கு 19-வது பிறந்தநாளும் முடிந்துவிட்டது. பொங்கலும் வந்துவிட்டது! இந்த வருடம் பொங்கலுக்கு நான் ஊருக்குப் போகாதது வருத்தம் தான். யோசித்து பார்த்தால் நான் ஊரை மிஸ் பண்ணுவதை விட வீட்டில் அம்மாவும் அபியும் மிகவும் மிஸ் பண்ணுவார்கள் என நினைக்கிறேன். அப்படி என்ன தீபாவளிக்கு இல்லாதது பொங்கலுக்கு என்று கேட்கிறீர்களா? அது.. வருடத்துக்கு ஒரு முறை, பொங்கலுக்கு முதல்நாள் இராத்திரி தான் நான் கோலம் போடுவேன். அம்மா எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு வாசலைப் பெருக்கிக் கோலம் போடுவதற்கு ஏதுவாக ஏற்படுத்திக் கொடுத்த பின்னர், ஸ்கார்ஃப் எடுத்துத் தலையில் கட்டிவிட்டு கோலப்பொடிகளைத் தயார்நிலையில் வைத்து, அபியிடம் சொல்லி FM ரேடியோவை வாசலுக்கு அருகே மிகவும் சத்தமாக ஆன் செய்து வைத்துவிட்டுக் கோலம் போடுவதற்கு அமர்ந்தால் மணி 11 ஆகியிருக்கும். அதற்கு முன்னரே நான் என் கோலம் நோட்டை எடுத்து என்ன கோலம் போடவேண்டும் என முடிவு செய்து ஓரிரு முறை காகிதத்தில் வரைந்தும் பார்த்துப் பழகியிருப்பேன். அப்படியே 11 மணி...
Hi from a Hikikomori 🐌