முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

தேடல்

எழுதி முடித்துவிட்டுக் காணாமல் தேடிய பேனா மூடியொன்று பின் ஒரு மழைநாளின் கேளிக்கைப் பொழுதின்போது சேற்றில் புதைந்தவாறு காட்சியளித்துக் கொண்டிருந்தது. யாரும் பார்க்காவண்ணம் எடுத்து வெயிலில் போட்டுவிட்டு நினைவின்றி வீடு திரும்பியதும் தொலைந்து போனது அதன் ஆயுள். தேடிக்கிடைக்காத பொருட்கள் எப்படியும் வேறுசிலப் பொருட்களின் தேடல்களின்போது கிடைத்தேவிடுகின்றன. ...அப்படியே எப்பொருளின் எந்நாளையத் தேடலில் கிடைத்தே போய்விடப்போகிறது நான் எப்பொழுதும் தேடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை எனும் பொருள்? *

குழப்பம்

அப்படியே பைத்தியம் பிடித்துவிடும் போல இருக்கிறது . ஒருவேளை ஏற்கனவே பிடித்திருக்குமோ ? ஆனால் யாரும் எதையும் சொல்லக் காணோமே ! தலையைத் திருப்பிப் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த தரணி சாரைப் பார்த்தால் அவர் எப்போதும் போலப் புன்னகைத்துவிட்டு ‘ என்ன ’ என்பதுபோல் பார்த்தார் .

நில்! கவனி! கடந்துசெல்!

உருட்டி ஊட்டிய பின்பு வயிறு நிறைத்த வழித்துப் பிசைந்த கடைசிக் கையுருண்டை கோர்த்த சரம் போக எஞ்சிச் சிதறிப்போன பிஞ்சு பிச்சி மொட்டுகள் கடைசிப் பொருளைப் பொறுக்காமல் விட்டுவந்த வாடகை வீடு மருண்டு விழித்த பின்னிரவு உறக்கத்தினூடே புதைந்த கனவுவொன்றின் எச்சம் சாயம் வெளுத்த ரவிக்கையின் ஆயுளை நீட்டிக்கொண்டே சென்ற காலண்டர் ஊசி மைத்தடவல்களை மறந்து ஸ்டிக்கர்ப் பொட்டுகளுக்கு மாறிவிட்ட கண்ணாடிச் சட்டம் மொழுகிய மேடையின் ஈரத்தில் கரைந்து மணந்த வெள்ளைக் கோலங்கள் காக்காமுள் குத்திய காற்றாடியுடன் ஓலைக்கூரையில் காய்ந்து போன வேப்பங்குச்சி அடிவாங்கிய ஒலிச்சுருளின் பாடலைப்போல அவ்வப்போது நிறுத்தி நிதானிக்கச் செய்யும் இவைகளால் நகர்ந்து கொண்டிருக்கும் என் உலகம்.

திருநெல்வேலி அல்வா

என் எழுத்தை எனக்கே அறிமுகம் செய்து வைத்த எனது அபிமான வலைப்பூ “ இட்லிவடை ” யில் எனது மற்றுமொரு பதிவு ஒன்று வெளியாகியுள்ளது ..  “ நீங்க எந்த ஊரு ?” யாரோ . “ திருநெல்வேலி ” இது நான் . “ ஓ ... தின்னவேலியா ? ( நக்கலாக ) சரி சரி ” “ இல்ல , திருநெல்வேலி ” எரிச்சலுடன் நான் . “ நானும் அதைத் தான் சொன்னேன் .. தின்னேலினு தானே சொல்வீங்க ?” இன்னும் சிரிப்புடன் . “ தின்ன எலியுங் கிடையாது .. திங்காத எலியுங் கிடையாது ... எங்க ஊரு பேரு திருநெல்வேலி !” ( ஹ்ம்க்கும் ) ஒரு தடவ ரெண்டு தடவயில்ல .. நெறைய தடவ இது நடந்துருக்கு . அது ஏன்னே தெரியல . திருநெல்வேலின்னாவே எல்லாருக்கும் எங்கயிருந்து தான் வருதோ ஒரு நக்கல் தெரியல . ஊருக்குள்ளயே இருந்தவரைக்கும் ஒன்னுமே தெரியாது . டிவியில விவேக்கு பேசுனாலும் வடிவேலு பேசுனாலும் விஜய் பேசுனாலும் விக்ரம் பேசுனாலும் வேற யாரு பேசுனாலும் ஜோக்கோடு ஜோக்கா பார்த்துச் சிரிச்சிக்குவோம் . ஆனா பன்னெண்டாப்பு முடிச்சிக் காலேஜில சேரனும்னு வெளியூருக்குப் போவும்போது தான் தெரியும் .. நம்மளும்...