க . சுதாகர் என்பவரால் எழுதப்பட்டு வம்சி பதிப்பகத்தில் வெளிவந்திருக்கும் ‘6174’ நாவலைப் படிக்க நேர்ந்தது . தமிழர்களின் பழம்பெரும் வரலாற்றை அறிந்துகொள்வதில் எப்போதும் ஒரு தேடல் என்னுள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையிலும் லெமூரியா என்ற வார்த்தையைத் தவிர அதைப்பற்றி அறிந்துகொள்வதற்கு வேறு மூலங்களே இல்லாத நிலையிலும் குவாண்டம் பிசிக்ஸின் தத்துவங்களுக்கு வாயைப்பிளக்கும் ஒரு கணிதப் பட்டதாரியான எனக்கு லெமூரியா + கணிதம் + இயற்பியல் + பண்பாட்டய்வு எனக் கலந்துகட்டி எழுதப்பட்டிருக்கும் ஒரு நாவலைப் படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டதில் அதிசயம் ஒன்றுமில்லை . போதாததற்கு தம்பியின் கல்லூரி இறுதியாண்டு project வேறு Fibre Optic Crystals பற்றியது . கேட்கவா வேண்டும் ?
Hi from a Hikikomori 🐌