முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கமலாவும் நானும்

வணக்கம் ! ரொம்ப நாள் கழிச்சு என்னோட பதிவு இட்லிவடைல வந்திருக்கு . உங்க எல்லாருக்கும் “ திரு . பி . எஸ் . ரங்கநாதன் aka கடுகு aka அகஸ்தியன் ” அவர்களை நல்லா தெரிஞ்சிருக்கும் . அவரோட “தாளிப்பு” வலைப்பூல வந்த கமலா சீரீஸ் கட்டுரைகளோட, அவரோட பல முக்கியமான சொந்த அனுபவங்களை எல்லாம் சேர்த்து வந்த புத்தகம் தான் “கமலாவும் நானும்”. நந்தினி பதிப்பகம். அவரோட வலைத்தளம் கூட ஒரு treasure house மாரி இருக்கும் . அவர்கள் எழுதுன “ கமலாவும் நானும் ” புத்தகத்தைப் பத்தி ரசிச்சு ஒரு பதிவு எழுதிருக்கேன் .

பறக்கவே என்னை அழைக்கிறாய்!

எனக்கு என் அம்மாவை ரொம்பப் பிடிக்கும். அவங்களைப் பிடிக்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே எங்க ஆச்சியை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். எங்க பாட்டிக்கு எங்க அம்மா ஒரே பொண்ணு. எங்க அம்மாவுக்கு நான் ஒரே பொண்ணு :-) அதனால என் மேல பயங்கர பாசம் எங்க பாட்டிக்கு. நான் ஏதாவது சேட்டை பண்ணிட்டு அம்மாகிட்ட அடிவாங்கி அழுதபோதெல்லாம் எங்க பாட்டி என் அம்மா மேல கோபப்பட்டு ‘உண்ணாவிரதம்’ இருப்பாங்கன்னா பார்த்துக்கோங்க! அதனாலயே நான் எப்பவும் அவங்க கூடவே அலைவேன். அவங்க எனக்கு இன்ட்ரோ கொடுத்து வெச்சதுதான் “அக்கக்கோ குருவி”. பெரிய ஆலமரத்துல எங்கேயோ ஒரு கிளையில உக்கார்ந்து “அக்கோ... அக்கோ”னு கூவிக்கிட்டே இருக்கும். என் தம்பி வேற என்னை அக்கானு தான் கூப்பிடுவானா.. ஸோ அது என்னைத் தான் கூப்பிடுதோனு எனக்குப் பயங்கர ஆவல். தினமும் அதுக்காகக் காத்திருந்து காத்திருந்து, எங்க அம்மாகிட்டேயும் ஆச்சிகிட்டேயும் கூட கேட்க ஆரம்பிச்சேன் அக்கக்கோ குருவி எங்கேனு. சமீபத்துல ஒருநாள் அதே குரலை இங்கே வீட்டருகில் கேட்டதும் ஒரு கணம் டைம் மெஷினில் ஏறி இறங்கிவிட்டேன். விடுமுறை விட்டதும் ஒவ்வொரு வருடக் கோவில் கொடைக்கும் அப்பாவின் ...

ஐ.ஏ.எஸ். தமிழ்ப் பாடம்

ஐ . ஏ . எஸ் . தேர்வில் தமிழை ஒரு பாடமாக (optional subject) எடுப்பவர்களுக்கு என்ன பாடங்கள் (syllabus) கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா ? பொதுவாக இந்தப் பாடங்கள் இணையத்தில் ஆங்கிலத்தில் தான் அதிகம் கிடைக்கின்றன . தமிழில் தேடுபவர்களுக்காக இது :-) நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் – இதில் வரும் பாடங்களில் நல்ல materials கிடைத்தால் சிரமம் பாராமல் எனக்கு subadhra23@gmail.com மின்னஞ்சல் அனுப்புங்கள் .. ப்ளீஸ் .   தமிழ் முதல் தாள் UPSC Tamil optional syllabus Tamil I paper பிரிவு -A பகுதி : 1 தமிழ் மொழி வரலாறு முதன்மையான இந்திய மொழிக் குடும்பங்கள் - இந்திய மொழிகளுக்கிடையே பொது நிலையிலும் சிறப்பாக திராவிட மொழிகளிடையிலும் தமிழ்மொழி பெருமிடம் - திராவிட மொழிகளின் வகைப்பாடும் அவை பரவியுள்ள தன்மையும் . சங்ககாலத் தமிழ் - இடைக்காலத் தமிழ் – பல்லவர் காலத் தமிழ் மொழி அமைப்பு மட்டும் - தமிழில் பெயர் , வினை , பெயரடை , வினையடை , கால இடைநிலைகள் மற்றும் வேற்றுமை உருபுகள...