முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அவள் பெயர் பூவெழினி

(சாரு நிவேதிதா விமர்சகர் வட்டம் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசை வென்றிருக்கும் என் கதை கீழே) ஆளுக்கொரு பொருளை வைத்துக்கொண்டு ஐந்துபேரும் சேர்ந்து அந்தக் குழியைத் தோண்டத் துவங்கியிருந்தோம் . “ அட்வென்ச்சர் வேணுங்கிறதுக்காக இதெல்லாம் ஓவர் திவ்யா ” லலிதா ( எ ) லல்லி நூறாவது முறையாக அந்த டயலாகை சொல்லி முடித்தாள் . அந்தக் குளிர் பனியிலும் அவளது முகம் வேர்த்து வெளுத்திருந்தது . “ உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்கா ? இந்த ஸ்மெல்ல எப்படித்தான் தாங்கிக்கிறீங்களோ ” “ எவ்வளவோ பண்ணிட்டோம் ; இதப் பண்ண மாட்டோமா ? அப்படினு என் மனசு சொல்லுது ” சிரித்துக்கொண்டே நான் சொன்னதைக் கேட்டவள் மண்வெட்டியைக் கீழே போட்டுவிட்டு அருகிலிருந்த வேறொரு கல்லறையின் மேல் சோர்ந்து போய் விழுந்தாள் . அது அவளை ஏந்திக் கொண்டது .

பனிமலரே.. பனிமலரே.. பனிமலரே :)

அம்மா, மழை மற்றும் மரியான்

Blog பண்ணி பல நாள் ஆச்சு. Time இருந்தா mood இல்ல. Mood இருந்தா விஷயம் இல்ல. விஷயம் இருக்கும் போது time இல்ல. படிக்கதுக்கு வேற எக்கச்சக்கம் இருக்கு. டிசம்பர் 1 ம் தேதி ஒரு dragon மாரி என்ன பாத்து சீறிகிட்டு இருக்கு (அன்னைக்கு தான் Mains exam ). படிக்கனும் படிக்கனும் ஒன்னு விடாம படிக்கனும் (அதுக்கு index தான் படிக்கனும்னு நீங்க சொல்றது எனக்கு கேக்கல) :)) கடின உழைப்பு , கடவுள் அருள் , நண்பர்களின் உதவிகள் இது போக முதல்நிலை த் தேர்வுல நான் பாஸ் பண்ணதுக்கு முக்கிய காரணம் என் அம்மா :) தினமும் என்ன encourage பண்ணியே பேசிட்டு இருப்பாங்க. Hard work பண்ணு.. பலனை எதிர்பாருனு சொல்லுவாங்க. Result வர்றதுக்கு முந்தின நாள் , ‘ திக் திக்னு இருக்குமா ’ னு நான் சொன்னதுக்கு எந்த அம்மாவா இருந்தாலும் சொல்லியிருக்கக் கூடிய பதில் ‘ கவலப்படாத. நீ பாஸ் பண்ணிருவ ’. ஆனா எங்க மம்மி என்ன சொன்னாங்க தெரியுமா ? ‘ நீ ஹார்ட் வொர்க் பண்ணிருந்தா கண்டிப்பா பாஸ் பண்ணுவ. கவலப்படாத ’ ( துலாம் ராசி ) இ தைக் கேட்டதுக்கு அப்புறம் என் இதயம் நிமிஷத்துக்கு 144 தடவ துடிக்க ஆரம்பிச்சது :)) இப்ப மெயின...