முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

அதுக்குள்ள வளர்ந்துட்டியே அபி..! என் கண் முன்னால் பிறந்து வளர்ந்து இப்பொழுது 18 வயதைத் (பிறந்த நாள்: 12-01-1994 ) தொட்டு நிற்கும் என் அன்புத் தம்பி அபினேஷ் க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்....! நம்ம விவேக் குக் (சுவாமி விவேகானந்தர் தாங்க! பிறந்த தினம்: 12-01-1863 ) கூட இன்னைக்குத் தான் பிறந்த நாள்....! :-) இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! பி.கு.: 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வை எதிர்கொள்ள இருக்கும் உனக்கு எனது பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும்.  STOP NOT TILL UR GOAL IS REACHED HAPPY BIRTHDAY TO YOU! * *

ஹைக்கூ முயற்சி

  அடியை வாங்கியதும் அடம்பிடித்த குழந்தை அணைத்துக் கொண்டது ** திடுக்கிடச் செய்யும் சைரன் சத்தம் மரண பயமோ? **  ஜெர்ஸியானாலும் சிந்தியானாலும் பசித்தே இருக்கிறது பசுவின் கன்று. **   உறங்கி விழித்ததும் குழம்பிப் போகிறேன் எது வாழ்வு? எது கனவு? **   மழைக்காலம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு ஒழுகும் வீடு **

Happy New Year !

Happy New Year நின்னைச் சிலவரங்கள் கேட்பேன்-அவை நேரே இன்றெனக்குத் தருவாய்-என்தன் முன்னைத் தீயவினைப் பயன்கள்-இன்னும் மூளா தழிந்திடுதல் வேண்டும்-இனி என்னைப் புதியவுயி ராக்கி-எனக் கேதுங் கவலையறச் செய்து-மதி தன்னை மிகத்தெளிவு செய்து-என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்! தோளை வலியுடைய தாக்கி-உடற் சோர்வும் பிணிபலவும் போக்கி-அரி வாளைக் கொண்டுபிளந் தாலும்-கட்டு மாறா வுடலுறுதி தந்து-சுடர் நாளைக் கண்டதோர் மலர்போல்-ஒளி நண்ணித் திகழும்முகந் தந்து-மத வேலை வெல்லும்முறை கூறித்-தவ மேன்மை கொடுத்தருளல் வேண்டும் தவ மேன்மை கொடுத்தருளல் வேண்டும் தவ மேன்மை கொடுத்தருளல் வேண்டும் - மகாகவி பாரதியார் **********   நன்றி : எனது கட்டுரையை வெளியிட்டு இந்தப் புத்தாண்டை மகிழ்வுடன் துவக்கிவைத்த ”இட்லிவடை”க்கு எனது மனமார்ந்த நன்றி!!!   அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

Wishes :)

நூறாவது பதிவை க் காணும் என் அன்புத் தோழி “ பொன்மலர் ”க்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்....!! கணினி மென்பொருள்கள், தொழில்நுட்பம் பற்றிப் பல தரமான பதிவுகளை வாசகர்களுக்குத் தரும் அவளுடைய முயற்சிக்கு என் வணக்கங்கள்!! வாழ்த்துகள்!!!

பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்

முதன்முறையாக நான் ஒரு தொடர்பதிவு எழுதுகிறேன் :) என்னை எழுதச்சொல்லி அழைத்திருந்த அருண்பிரசாத் துக்கு நன்றி !!! பெண்குரலில் பெண்ணின் மனதைச் சொல்லும் பத்துப் பாடல்கள் . எனக்குப் பிடித்த நிறைய பாடல்களை அவரே எழுதிவிட்டார் :) அதனால் அவற்றை விடுத்து வேறு பத்துப் பாடல்களை நான் இங்கு கொடுத்துள்ளேன் :) *** 1. உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் படம் : குணா இசை : இளையராஜா பாடியவர் : ஜானகி , எஸ் வரலஷ்மி எழுதியவர் : வாலி   சில வரிகள் : ” உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார் யாரிவர்கள் மாயும் மானிடர்கள் ஆட்டி வைத்தால் ஆடும் பாத்திரங்கள் ” இந்தப் பாடலைக் கேட்கும்போதும் கேட்ட பின்னரும் மனதில் ஒரு இனமறியா உணர்வு ஏற்படுவதை நின்று நான் ரசித்ததுண்டு ! இருவர் குரலும் உணர்த்தும் வெவ்வேறு உணர்வுகள் ... அற்புதம் . *** 2. மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் படம் : பாக்யலக்ஷ்மி பாடியவர் : பி . சுசீலா இயற்றியவர் : கவிஞர் கண்ணதா...