அடியை வாங்கியதும்
அடம்பிடித்த குழந்தை
அணைத்துக் கொண்டது
**
திடுக்கிடச் செய்யும்
சைரன் சத்தம்
மரண பயமோ?
**
ஜெர்ஸியானாலும் சிந்தியானாலும்
பசித்தே இருக்கிறது
பசுவின் கன்று.
**
உறங்கி விழித்ததும்
குழம்பிப் போகிறேன்
எது வாழ்வு? எது கனவு?
**
மழைக்காலம் முழுவதும்
மழைநீர் சேகரிப்பு
ஒழுகும் வீடு
**
51 comments:
அனைத்துமே சூப்பர்ங்க...
"ஹைக்கூ முயற்சி" முயற்சி இல்ல ஹைக்கூவேதான் அற்புதம்..
தொடருங்கள்.......
//உறங்கி விழித்தேன்குழம்பிப் போனேன்எது வாழ்வு? எது கனவு?** //
அல்டிமேட் கலக்கல்...
//மழைக்காலம் முழுவதும்
மழைநீர் சேகரிப்பு
ஒழுகும் வீடு.//
சுத்தமான ஹைக்கூ !
நன்று
ஆமா அதென்ன முயற்சி.... எல்லா ஹைக்கூவும் நல்லாத்தான் இருக்கு...
எல்லா ஹைக்கூவும் நன்றாக இருந்த போதும்
// திடுக்கிடச் செய்யும்
சைரன் சத்தம்
மரண பயமோ?
உறங்கி விழித்தேன்
குழம்பிப் போனேன்
எது வாழ்வு? எது கனவு?
மழைக்காலம் முழுவதும்
மழைநீர் சேகரிப்பு
ஒழுகும் வீடு. //
மூன்றும் ரொம்ப பிடித்திருந்தது!
ஒன்றும், நான்கும் ரெம்ப பிடித்துள்ளது.
சூப்பர் சுபத்ரா..
ஐந்தாவதுதான் ஹைக்கூக்கு நெருங்கி வருகிறது.சூப்பர்.இது மாதிரி காட்சிப்படுத்துங்கள்
’திடுக்கிடச் செய்யும்’ ”மரண பயமோ?” என்று ஹைக்கூவுக்குள் நீங்கள் வந்து கோனார் நோட்ஸ் போடக்கூடாது சுபத்ரா.”பசித்தே இருக்கிறது” சமுதாயச் சாடல் வேண்டாம். விலகி நின்று காட்சிப்படுத்துங்கள்.
வாழ்த்துக்கள் சுபத்ரா
@ மாணவன்
மிக்க நன்றி!
@ சென்னை பித்தன்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
@ வெறும்பய
நன்றி அண்ணா, ஹைக்கூவுக்கு எனச் சில விதிமுறைகள் இருக்குல. அதான் அப்படி :-)
@ எஸ்.கே.
மிக்க நன்றி அண்ணா!
@ தமிழ் உதயம்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
@ அமுதா கிருஷ்ணா
மிக்க நன்றி! :-)
@ கே.ரவிஷங்கர்
மிக்க நன்றி!! அடுத்த முயற்சியில் முன்னேறுகிறதா பார்க்கலாம் :-)
கடைசி மட்டும் தான் சரியாக வந்துள்ளது. இன்னும் கொஞ்சம் முயற்சித்தால் உங்களால் முடியும்.
@ ஜோதிஜி
மிக்க நன்றி!!
கடைசி கவிதை ஹைக்கூ கவிதைக்குண்டான இலக்கணத்தோடு ஒத்துப்போகிறது.
மற்றவை நல்லமுயற்சி
ஹைக்கூ அற்புதம்.
@ Terror
இது ஹைக்கூ இல்லனு எல்லாரும் ஏகோபித்த கருத்தைச் சொல்லிட்டாங்க...அதனால திரும்பவும் முயற்சிக்க போறேனே :-)
@ நாஞ்சில் பிரதாப்
மிக்க நன்றி!
@ சித்ரா அக்கா
Thank You :-)
மழைக்காலம் முழுவதும் மழைநீர் சேகரிப்புஒழுகும் வீடு.//
எவ்ளோ செலவளிக்கிரீங்க. எந்திரன் படம் பார்த்த காசுக்கு வீட்டை சரி பண்ணிருக்கலாமே?
அடியை வாங்கியதும்
அணைத்துக் கொண்டது
அடம்பிடித்த குழந்தை.//
அந்த சூடு சுரணை இல்லாத குழந்தை நீங்களா?
மரண பயமோ?
திடுக்கிடச் செய்யும சைரன் சத்தம்///
அவ்வளவு சத்தமாவா கேக்குது? இதுக்குமா பயப்படுவீங்க?
ஜெர்ஸியானாலும் சிந்தியானாலும்பசித்தே இருக்கிறதுபசுவின் கன்று.//
அப்படியா சரவணா பவன்ல சாப்பாடு வாங்கி கொடுங்க a
உறங்கி விழித்தேன்
குழம்பிப் போனேன்
எது வாழ்வு? எது கனவு?//
கிள்ளி பாருங்க
@ ரமேஷ்
தண்ணி குடிங்க.. என்ன இப்படித் திடுதிப்புனு வந்து இவ்வளோ கமெண்ட் போட்டுட்டுப் போயிட்டீங்க?
/சுபத்ரா said...
@ ரமேஷ்
தண்ணி குடிங்க.. என்ன இப்படித் திடுதிப்புனு வந்து இவ்வளோ கமெண்ட் போட்டுட்டுப் போயிட்டீங்க?///
கமென்ட் அதிகமா போட்டா தண்ணி குடிக்கனுமா? டவுட்டு...
@ ரமேஷ்
இல்ல.. களைச்சுப் போயிருப்பீங்களேனு சொல்ல வந்தேன்!
அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள்.
ஏனுங்க ஒவ்வொரு கவிதையிலேயும் பாதிய காணொம்? ஓ அப்படி எழுதுனாத்தான் ஹைக்கூவா......?
/////அடியை வாங்கியதும்அணைத்துக் கொண்டதுஅடம்பிடித்த குழந்தை/////
அப்போ அழுகலியா?
////]மரண பயமோ?
திடுக்கிடச் செய்யும்சைரன் சத்தம்////
போலீஸ்... ஆம்புலன்ஸ்... ஃபையர் சர்வீஸ்? இதுல எதுக்கு பயம்? ஓ சிரிப்பு போலீசுக்கா? இப்போ அவரும் தலைல சைரன் மாட்டிக்கிட்டாரா? என்ன கொடும சார் இது?
////ஜெர்ஸியானாலும் சிந்தியானாலும்பசித்தே இருக்கிறதுபசுவின் கன்று./////
இதென்னடா கொடுமையா இருக்கு, எந்தக்கன்னுக்குட்டியா இருந்தா என்னங்க, பசிக்காதா? இது ஒரு குத்தமா?
////உறங்கி விழித்தேன்குழம்பிப் போனேன்எது வாழ்வு? எது கனவு?//////
வழக்கமா நம்ம பசங்க நைட்டு ராவா அடிச்சுட்டு காலைல சொல்றது இது.... நீங்களும் சொல்லியிருக்கீங்க....ம்ம்ம்....!
/////மழைக்காலம் முழுவதும்மழைநீர் சேகரிப்புஒழுகும் வீடு. //////
கவித கவித..... அங்கங்க மானே தேனே மட்டும் போட்டுக்குங்க.... அப்புறம் நீங்க எங்கேயே போயிடுவீங்க....
/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
/சுபத்ரா said...
@ ரமேஷ்
தண்ணி குடிங்க.. என்ன இப்படித் திடுதிப்புனு வந்து இவ்வளோ கமெண்ட் போட்டுட்டுப் போயிட்டீங்க?///
கமென்ட் அதிகமா போட்டா தண்ணி குடிக்கனுமா? டவுட்டு....//////
ஆமா இவரு தண்ணியெல்லாம் சும்மா குடிக்க மாட்டாரு, யாராவது ஓசில வாங்கிக் கொடுத்தாதான் குடிப்பாரு....
எல்லாம் ஏற்கனவே படித்தது போன்ற உணர்வு............
ஹாய் சுபா! ஆசான்கள் திருத்தங்கள் சொல்லிட்டாங்க!
உன்னோட பார்வைக் கோணம் ரொம்ப அழகா இருக்கு! தொடர்ந்து எழுது! :)
அந்த கனவு பற்றிய ஹைக்கூ நிறைய யோசனை செய்ய வைக்குது சுபா! :)
முயற்சி திருவினை ஆக்கும்....
ஆனா...வீண் முயற்சி செய்யாதேமா....
அப்புறம் நானும் ஹைக்கூ மாதிரி லோக்கூ எழுதுவேன்
(Joke Apart)
எல்லாமே நல்லா இருந்தது
உறங்கி விழித்தேன்
குழம்பிப் போனேன்
எது வாழ்வு? எது கனவு?
மழைக்காலம் முழுவதும்மழைநீர் சேகரிப்புஒழுகும் வீடு.//////
அருமை அருமை :)
@ மதுரை சரவணன்
மிக்க நன்றி!
@ ப.ராமசாமி
அண்ணன், நீங்களும் திடீர்னு வந்து இப்படிக் கும்பலா கமெண்ட்டிட்டீங்களே!
//ஏனுங்க ஒவ்வொரு கவிதையிலேயும் பாதிய காணொம்? ஓ அப்படி எழுதுனாத்தான் ஹைக்கூவா......?//
ஹி..ஹி..ஹி :-)
@ சமீர்
அப்படியா? :-)
@ Balaji Saravana
நன்றி BS :-) என்னை இவ்வளோ என்கரேஜ் பண்றதுக்கு.. அடுத்த தடவை நல்ல வருதா பார்க்கலாம்.
@ அருண் பிரசாத்
மிக்க நன்றி ஜி :-)
@ ஜெ.ஜெ.
Thank u very much dear :-)
மரண பயமோ?
திடுக்கிடச் செய்யும்
சைரன் சத்தம்////
mmm இது ரொம்ப சூப்பர் எனக்கு எல்லாம் பிடிச்சு இருக்கு
நல்லா எழுதி இருக்கிங்க தொடர்ந்து எழுதுங்க
ஹாய் ஹைக்கூ சூப்பர்... ஹைபர்... கலக்கல்
அற்புதம்
nice poems. keep it up and try to write more di
@ சௌந்தர்
நன்றி சௌந்தர்!
@ சந்ரு
மிக்க நன்றி!
@ அப்பாவி தங்கமணி
மிக்க நன்றி! :-)
@ அரசன்
அப்படியா? மிக்க நன்றி!
@ பொன்மலர்
Thank You Dear.. Nice to see you here. Keep visiting my blog :-)
அனைத்துமே சூப்பர்ங்க...
"ஹைக்கூ முயற்சி" முயற்சி இல்ல ஹைக்கூவேதான் அற்புதம்
வழிமொழிகிறேன். அதுவும் ஒவ்வொரு கவிதைக்கும் படங்கள் பிரமாதம்
@ தங்கராசு நாகேந்திரன்
தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!!
எல்லாம் நன்றாக இருக்கிறது - முதலாவது மற்றும் கடைசி - இவை இரண்டுடனும் நன்றாகத் தொடர்பு படித்திக்கொள்ள முடிகிறது.
முதல் ஹைக்கூ,
"அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன்
அருள் நினைந்து அழும் குழவி"
என்ற பாசுர வரிகளை நினைவூட்டுகிறது.
நிற்க, இந்த வலைப்பூவில் கொடுத்துள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரி சரியானதா?
~
கிரிதாரியின்,
ராதா
@ Radha
தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, ராதா.
என் மின்னஞ்சல் முகவரி சரியானதே!
subadhra23@gmail.com
//ஜெர்ஸியானாலும் சிந்தியானாலும்
பசித்தே இருக்கிறது
பசுவின் கன்று//
//மழைக்காலம்
முழுவதும் மழைநீர் சேகரிப்பு
ஒழுகும் வீடு. //
********
இந்த இரண்டு ஹைக்கூ கவிதைகளும் படு சூப்பர் ரகம்...
@R.Gopi
நன்றி கோபி அண்ணா..
L போர்டு என்று சொல்லிவிட்டு என்னமா எழுதுது இந்த பொன்னு. மிக்க அருமை. பாராட்டுக்கள். நன்றி.
கலப்படம்
முல்லைப் பூ
கனகாம்பரம் கலந்து
கட்டிக் கொண்டே சொன்னார்
எங்கேயும் எதிலும்.........
******************************
பூம் பூம் மாடு
தலைப்பாகை
கொண்ட
டில்லி பொம்மை
------------------------------
@ புவனை சையத்
மிக்க நன்றி :)
Post a Comment