முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

விலை

"கீர்த்தி, என்னடி அமைதியாக இருக்க? உனக்கு இந்தப் புடவை ஓ.கே. தான? அமுதாவுக்கு இந்தப் பாசிப்பச்சைக் கலர் நல்ல சூட் ஆகும்னு நினைக்கிறேன்" கேட்டுக்கொண்டே வந்த வித்யாவையும் அவள் கையில் இருந்த புடவையையும் பார்த்தாள் கீர்த்தி. "நல்லா இருக்கு" அமைதியாக ஒரு புன்னகை. "ஏய்.. இவ எனக்கெல்லாம் செலக்ட் பண்ணித் தர மாட்டா.. அவ மட்டும் அழகா செலக்ட் பண்ணி ராணி மாதிரி டிரஸ் பண்ணிக்குவா" கோபித்துக் கொண்ட அமுதாவைச் சமாதானப் படுத்த முயன்றனர் மற்ற இருவரும். "கீர்த்தி என்னைக்குமா டிரஸ் செலக்ட் பண்ணினா? எல்லாம் அவளோட அம்மாதான். இவ நம்ம கூட கடைக்கு வந்ததே பெரிய விஷயம். பேசாம வாடி..கவுண்டர் ப்ரீயா இருக்கு, பார்" என அமுதாவின் கையைப் பிடித்து அழைத்துவந்தாள் நித்யா. ஞாயிற்றுக் கிழமை சாயந்திரம் வேளை திருநெல்வேலி டவுன் ரதவீதித் தெருக்களில் கூட்டம் எவ்வளவு இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. வண்ணாரப்பேட்டையில் ஆர்.எம்.கே.வி. தனக்கென ஒரு புதுக் கிளையைத் தொடங்கியவுடன் டவுனில் கூட்டம் சற்றுக் குறைந்து தான் போனது என்றாலும் ஓரளவுக்கு மக்கள் திரள் திரளாகவும் தனியாகவும் வ...

கதையின் கதை

... “ அ ந்த ராஜாவும் மந்திரியும் தனித்தனிக் குதிரையில ஒரு பெரிய்ய்ய ஆலமரம் ஒன்னைக் கடந்து போய்ட்டு இருந்தாங்களாம். ரொம்பக் களைச்சுப் போயிருந்த அந்த ரெண்டுபேருல ஒருத்தரான மந்திரிக்கு மட்டும் ஆலமரத்தில அமர்ந்திருந்த அந்த ஆண்கிளியும் பெண்கிளியும் பேசிட்டு இருந்த சத்தம் தெள்ளத்தெளிவாக் கேட்டுச்சாம். “இதோ குதிரையில் போகிறார்களே ஒரு ராஜாவும் மந்திரியும், இவர்களைக் கவனமாகப் பார்த்துக்கொள். இந்த ராஜாவுக்கு எண்ணி இரு பௌர்ணமிகளுக்குள் உயிர்போகும் அபாயமிருக்கிறது. யார் நினைத்தாலும் அவனைக் காப்பாற்றவே முடியாது! அவனது உயிர் ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி இருக்கும் ஒரு குகையில் கூண்டிற்குள் கைதாகியிருக்கும் ஒரு பஞ்சவர்ணக்கிளியின் விடுதலையில் இருக்கிறது. இந்த ராஜா அவன் கையாலேயே அதை விடுவித்தாக வேண்டும்...” “ இரு பௌர்ணமிகளுக்குள் அவன் அந்தக் கிளியை விடுவித்து விட்டால்?” “அதற்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால் இந்த ராஜாவின் உயிர் பற்றிய ரகசியம் அறிந்தவர்கள் இந்த உலகினில் மூன்றே பேர்தான். ஒன்று நான்; ஒன்று நீ; மற்றொன்று அவனது உடன் இருந்து இப்போது நாம் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கும் அந்த மந்திரி. ராஜாவின் ...

காதல்

காதல் .. ஒட்டுமொத்த உணர்வுகளையும் உறையச் செய்துவிட்டு ஒற்றைக்கால் மெழுகாய் உருகிக் கொண்டிருக்கும் . வார்த்தையில் வடிக்க எண்ணிக் காத்திருக்கும் போதெல்லாம் மொழியின் ஆளுமை விழிபிதுங்கி நிற்கும் ..

ஆகாசவாணி அனுபவம்

வணக்கம்! பரீட்சை ஒன்றை எதிர்கொள்ள உள்ளதால் வலைப்பூ பக்கமே வரமுடியவில்லை :-) இந்த மாதம் முழுவதும் அப்படித்தான். சரி இங்கே எழுத முடியாவிட்டாலும் இட்லிவடையில் எனது பதிவு ஒன்று வெளியாகியிருக்கிறது! ஆல் இண்டியா ரேடியோ திருநெல்வேலி வானொலி நிலையத்தில் நான் நிகழ்ச்சிகள் புரிந்த அனுபவம் பற்றி ஒரு கட்டுரை. அதன் லின்க் கீழே: நான் சுபத்ரா பேசுறேன் !   படிச்சிட்டு கமெண்ட் பண்ணுவீங்கனு எதிர்பார்க்கிறேன்.. நன்றி :-)   Special Thanks : Idlyvadai- இட்லிவடை சமூக விழிப்புணர்வு சார்ந்த கட்டுரைகளை வெளியிட்டு வரும் கழுகு வலைத்தளத்திற்கு வாழ்த்துகள்...! வலை : கழுகு Forum : kazhuhu Group க ட்ட ுர ை க ீழ ே:   ரேடியோ கேட்டிருப்பீர்கள், ரேடியோ ஸ்டேஷன் பார்த்திருக்கிறீங்களா? நான் பார்த்திருக்கிறேன் ஏன் ரேடியோவில் பேசியே இருக்கிறேன்! நான் கொடுத்த முதல் நிகழ்ச்சியை என்னால் மறக்க முடியாது. எனக்கு மறதியும் சந்தேகமும் ஒட்டிக்கொண்டு பிறந்தவை. வீட்டைவிட்டு வெளியே கிளம்பி சற்றுத் தூரம் நடந்து வந்தபின்தான் பொட்டு வைத்துக்கொண்டோமா என்ற சந்தேகம் வரும்; கேஸ் ...

நாமிருவர்

“ என்னங்க .. ஸ்கூல் வேன் வந்திருச்சா ?” பதற்றத்துடன் கேட்டுக்கொண்டே சமையற்கட்டிலிருந்து விரைந்து வந்தவள் பதிலுக்குக் காத்திராமல் வாசலுக்கு ஓடினாள் . அப்போதைய அசதியைப் போக்குவதற்கு எனக்கு ஒரு ஸ்ட்ராங் காபி தேவையாக இருந்தது . அட ! மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த தம்ளரை இப்போது தான் பார்க்கிறேன் ! ஆறிப்போய்விட்டதோ என்று தொட்டுப் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே ஏமாற்றத்துடன் திரும்பிவந்தாள் . “ இன்னைக்கு லேட் ஆன மாதிரி தெரியல ? எப்பவும் 4.20 மணிக்கெல்லாம் ஸ்கூல்விட்டு வந்திருவானே ..!” மஞ்சள் பூசி முகம் கழுவித் தலைவாரிப் பூவைத்துப் பாண்ட்ஸ் பவுடரின் மெல்லிய வாசத்துடனும் நெற்றியில் வட்டமான சாந்து பொட்டுடனும் அழகாகத் தெரிந்தாள் என் மனைவி . ஏழு வருடங்களுக்கு முன் அவளைப் பெண்பார்க்கச் சென்றபோது பார்த்து ரசித்த அதே முகம் சிறிதும் மாற்றமின்றி ! படபடப்புடன் இருந்ததாலோ என்னவோ லேசான வியர்வையில் முகம் மினுமினுத்தது . நெற்றியிலிருந்து ஒரே ஒரு வியர்வைக் கோடு காதோரமாய் வடிந்து கன்னத்தில் காணாமல் போனது . “ வண்ட...