There should be no fear of death, for the death of the body is but a gentle passing to a much freer life – Helen Greaves

At his best, man is the noblest of all animals; separated from law and justice he is the worst – Aristotle

What's in a name? That which we call a rose by any other name would smell as sweet - Shakespeare

காதல்

Feb 14, 2011



காதல்..

ஒட்டுமொத்த உணர்வுகளையும்
உறையச் செய்துவிட்டு
ஒற்றைக்கால் மெழுகாய்
உருகிக் கொண்டிருக்கும்.

வார்த்தையில் வடிக்க எண்ணிக்
காத்திருக்கும் போதெல்லாம்
மொழியின் ஆளுமை
விழிபிதுங்கி நிற்கும்..

கைகொடுத்துத் தூக்கிவிட
எத்தனிக்கும் போதெல்லாம்
காற்றுக்கேது கால்களென
கடத்திக்கொண்டு போகும்..

எட்டும் தொலைவினில்
எழிலாய்ச் சிரிக்கும்
பற்ற எண்ணினால்
பட்டாம்பூச்சி ஆகும்..

உதடுகளின் உச்சரிப்பை
உதாசீனப் படுத்திவிட்டுக்
கண்களுக்குள்ளே சென்று
களவாடிப் போகும்..

ஓடிஒளிந்து போய்
மறைவாய் நின்றாலும்
சரிதான் வாவெனச்
சடைபிடித்து இழுக்கும்.

இதழ்களின் வழியே
இதயத்தை உறிஞ்சும்
இமைகள் சொருகி
இமயத்தைக் காணும்

அதட்டும் வேளையில்
அடங்கிப் போகும்
அப்புறமாய் வந்து
அழுகையை வார்க்கும்

கிடைப்பதை எல்லாம்
ஏற்க மறுக்கும்
கொடுக்க வேண்டியே
குறைபட்டுக் கொள்ளும்

விட்டுக் கொடுக்கும்
தட்டிக் கேட்கும்
எட்டி உதைக்கும்பின்
கட்டி அணைக்கும்.

வளர்பிறை நிலவாய்
வளர்ந்துவரும் காதல்
வசப்படும் போது
வாழ்க்கை சுவைக்கும்…!



Happy Valentine's Day :-)

***

26 comments:

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நல்கவிதை. காதலர் தின நல்வாழ்த்துக்கள்

ஜெயந்த் கிருஷ்ணா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

விட்டுக் கொடுக்கும்
தட்டிக் கேட்கும்
எட்டி உதைக்கும் – பின்
கட்டி அணைக்கும்.

//

Superb lines..

எஸ்.கே said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

எங்கே போனாலும் ஒரே கவிதை மயமா இருக்கே இன்னைக்கு!:-)

கவிதை நல்லாவே இருக்கு!

HAPPY VALENTINE'S DAY!

TamilTechToday said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Nice Info Keep it up!

Home Based new online jobs 2011

Latest Google Adsense Approval Tricks 2011

Just Pay Rs.1000 & Get Google Adsense Approval Tricks.

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

New google adsense , google adsense tricks , approval adsense accounts,

latest adsense accounts , how to get approval adsense tricks, 2011 adsense tricks ,

Quick adsense accounts ...

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

dsfs said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

காதலர் தினத்திற்கென காதலாய் எழுதிய கவிதை போல. இனிமையான வரிகள் சுபத்ரா

தமிழ்க்காதலன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

காதலின் பரிமாணங்கள் பரிமாறிய விதம் அருமை. இன்னும் அதன் பரிணாமங்கள் நிறைய உண்டு. நீங்கள் பேசியிருக்கும் களங்கள் நன்று. காலத்தால் கலைக்க முடியாத விசயம்... வாழ்க்கையின் அடிநாதம்... மனிதனில் மலர்ந்த மலர் காதல். மனங்களை முடிச்சிட்டு தன்னை நிலைநிறுத்தும் கம்பீரம் காதல். வாழ்த்துகள்.

மாணவன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

காதலர் தின சிறப்பு கவிதை சூப்பர்...


காதலர் தின நல்வாழ்த்துக்கள் :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Happy Valentine's Day

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ம் ம்
நல்ல இருக்குங்க

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//இதழ்களின் வழியே
இதயத்தை உறிஞ்சும் //
very nice suba!
happy valentines day! :)

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

>>>காதல்
வசப்படும் போது
வாழ்க்கை சுவைக்கும்…!

அழகு வரிகள்

'பரிவை' சே.குமார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Kavithai Super.

தினேஷ்குமார் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ஒவ்வொரு வரிகளிலும் காதலின் உயிர்ப்பு அருமை சகோ ....

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ கலாநேசன்
மிக்க நன்றி.

@ வெறும்பய
நன்றி அண்ணா..

@ எஸ்.கே.
நன்றி அண்ணா..

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ பொன்மலர்
என்னடி.. கவிதைக்கு ஒரு கவிதை மாதிரி கமெண்ட் போட்டிருக்க? :-)

@ தமிழ்க்காதலன்
மிக்க நன்றி.

@ மாணவன்
மிக்க நன்றி..

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ ரமேஷ்
மிக்க நன்றி..

@ சிவா
தேங்க்ஸ் சிவா..

@ பாலா
நன்றி பாலா..

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@ சி.பி.செந்தில்குமார்
மிக்க நன்றி..

@ சே.குமார்
மிக்க நன்றி..

@ தினேஷ்குமார்
மிக்க நன்றி சகோ.

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//ஒற்றைக்கால் மெழுகாய்உருகிக் கொண்டிருக்கும்.//

//
காற்றுக்கேது கால்களெனகடத்திக்கொண்டு போகும்..//

//அதட்டும் வேளையில்அடங்கிப் போகும்அப்புறமாய் வந்துஅழுகையை வார்க்கும்//

ரசித்த வரிகள்..

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

காதலின் அனைத்து பரிமாணங்களையும் கவிதையாக்கி இருக்கிறீர்கள்.

அன்புடன் நான் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மொத்தத்துல காதல் கிறுக்குதனமா இருக்கும் என்கிறிங்க.... காதல் உணர்வை நல்லாதான் சொல்லியிருக்கிங்க....
பராட்டுக்கள்.

Radha said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

//விட்டுக் கொடுக்கும்தட்டிக் கேட்கும்எட்டி உதைக்கும் – பின்கட்டி அணைக்கும்.
//
Was reminded of another poem by my sister.
Please see here
:-)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@பாரத்... பாரதி...மிக்க நன்றி பாரத்..பாரதி..!

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@சி.கருணாகரசுஅட.. என்னங்க டக்குனு இப்படி சொல்லிப்புட்டீங்க? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சி.கருணாகரசு :-)

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@RadhaRadha, went there. Kavinaya's that poem was so nice and rhythmic. Thank u for the link.. :-)

மதி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

// ஓடிஒளிந்து போய்
மறைவாய் நின்றாலும்
சரிதான் வாவெனச்
சடைபிடித்து இழுக்கும்.//

மிகவும் ரசித்த வரிகள் .. நன்று. வாழ்த்துகள். நேரம் இருந்தால் என் பதிவையும் கொஞ்சம் எட்டிப் பாருங்கள்
www.sunshinesignatures.blogspot.com

சுபத்ரா said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@மதி

மிக்க நன்றி.. நிச்சயம் பார்க்கிறேன்.