வணக்கம்! இன்னைக்கு ஆகஸ்ட் 15, சுதந்தரதினம். சுதந்தரதினமும் அதுவுமா ப்ளாக்ல போஸ்ட் போடலன்னா நம்மள யாரும் ‘பிரபல பதிவர்’னு ஏத்துக்க மாட்டாங்க. அதோட சகபதிவர்களுக்கு வாழ்த்துகள் வேற சொல்லனும் இல்லையா. அதுக்காகத் தான் இந்தப் பதிவு. யாரோட தொல்லையும் இல்லாம நிம்மதியா சுதந்தரமா தூங்கி எழுந்தது தான் இன்னைக்கு ஸ்பெஷல்! நண்பர்களுக்கு எல்லாம் வாழ்த்துகள் சொல்லி குறுந்தகவல்கள் அனுப்பிவிட்டு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே இணையத்திற்கு இணைப்பு கொடுத்தேன். நம்ம ப்ளாகர்ஸ் எல்லாம் சுதந்தரதின ஸ்பெஷலா வித்யாசமா கலக்கியிருப்பாங்களேனு தேடிப் பார்த்தேன். சிலர் ரொம்ப அழகா எழுதியிருந்தாங்க. நாட்டுக்காக நாம என்னல்லாம் செய்யனும்னு லிஸ்ட் போட்டிருந்தாங்க. 'படிக்க' ரொம்ப நல்லா இருந்தது :-) அப்புறம் பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்கள் செங்கோட்டையில் வைத்து ஆற்றியிருந்த உரையை ப் படித்தேன். ஏனோ மிகவும் சோகமாக இருந்தது. நிறைய விஷயங்கள் பற்றிப் பேசியிருந்தாலும் ‘ஊழல்’ பற்றிய பகுதிகள் தான் கவனத்தைத் தூண்டின. கடந்த சில காலமாக நம் நாட்டில் ...
Hi from a Hikikomori 🐌