கட்டிய புடவையோடு வாழ்க்கைப்பட கைகொடுத்தது வறுமையின் நிறம் *** "பட்டினி" கவிதைக்கு கிடைத்த பரிசு காலித் தட்டு *** பஞ்சு மெத்தை தோற்றுப் போனது பழைய சேலையிடம் *** மழையில் வெளுக்காத வண்ணத்துப்பூச்சி வெளுத்தது மனதை. *** யாரென்று தெரியவில்லை அசைத்த கையோடு ரயிலுக்குள் நான் *** முதுகில் குத்தியவனை முதுகால் தாங்கியது வண்டியில் மாடு *** வியர்வையைத் துடைத்த அழுக்குச்சட்டையால் மணத்தது வெள்ளைச்சட்டை *** உறங்கிய தாயின் உறங்காச் சேயை தாலாட்டிச் சிரித்தது காற்றாடிச் சத்தம் *** கடலில் கலவரம் விஷமச் சிரிப்புடன் வெள்ளை நிலா. *** கதிரவனுக்கும் கடலுக்கும் கலவரமில்லாக் கலப்புத் திருமணம் இடம்: தொடுவானம் * *
Hi from a Hikikomori 🐌