முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கவிதைகள்


கட்டிய புடவையோடு
வாழ்க்கைப்பட கைகொடுத்தது
வறுமையின் நிறம்
 ***


"பட்டினி" கவிதைக்கு
கிடைத்த பரிசு
காலித் தட்டு
***


பஞ்சு மெத்தை
தோற்றுப் போனது
பழைய சேலையிடம்
***


மழையில் வெளுக்காத
வண்ணத்துப்பூச்சி
வெளுத்தது மனதை.
***



யாரென்று தெரியவில்லை
அசைத்த கையோடு
ரயிலுக்குள் நான்
***


முதுகில் குத்தியவனை
முதுகால் தாங்கியது
வண்டியில் மாடு
***


வியர்வையைத் துடைத்த
அழுக்குச்சட்டையால் மணத்தது
வெள்ளைச்சட்டை
***


உறங்கிய தாயின் உறங்காச் சேயை
தாலாட்டிச் சிரித்தது
காற்றாடிச் சத்தம்
***


கடலில் கலவரம்
விஷமச் சிரிப்புடன்
வெள்ளை நிலா.
***


கதிரவனுக்கும் கடலுக்கும்
கலவரமில்லாக் கலப்புத் திருமணம்
இடம்: தொடுவானம்
*
*

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
எல்லாமே அருமை..
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ முகிலன்

நன்றி முகிலன் :-)
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
//யாரென்று தெரியவில்லை
அசைத்த கையோடு
ரயிலுக்குள் நான்//

பிடித்திருந்தது.ஒரு மின்னல் நேர கணத்தில் நடந்ததை எழுதி இருக்கிறீர்கள். கிட்டத்தட்ட ஹைக்கூவுக்கு நெருங்கி வருகிறது.மீதியெல்லாம் சமுதாய சாடல்,சுய இரக்கம்,நீதி போதனை வகையில் கவிதைகள்.

என் வலையில் ஹைக்கூவின் விதிகளைப் படித்திருப்பீர்கள்.அதன்படி முயற்சியுங்களேன்.

நாம் எழுதுவது எல்லாம் ஹைக்கூவே அல்ல. ஆனால நான் முடிந்தவரை 98.99% மேற் சொன்னவைகளைத் தவிர்க்கிறேன்.

இங்கே படிக்கவும்:

http://raviaditya.blogspot.com/2009/07/blog-post_11.html
மங்குனி அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்…
சுபத்ரா மேடம் , எனக்கு கவிதைகள் அவ்வளவாக புடிக்காது , எல்லாம் எதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட வரிகளாக இருக்கும் . . எனக்கு எழுதவும் வராது , ஆனால் நீங்கள் கேள்வி பதில் மாதிரி நச்சு எழுதி இருக்கீங்க . ரொம்ப நல்லா இருக்கு ,. வாழ்த்துக்கள் , தொடருங்கள்
தனி காட்டு ராஜா இவ்வாறு கூறியுள்ளார்…
கலக்குங்க கவித் தாரகை....

//பஞ்சு மெத்தை
தோற்றுப் போனது
பழைய சேலையிடம்//

இந்த ஒன்று மட்டும் சரியாக புரியவில்லை ...
எதற்காக பழமையே சுகம் என்பது போல் வாழ வேண்டும் ....
laptop -யை விட calculator -யே பரவாயில்லை என்று சொல்வது போல் உள்ளது....
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ மங்குனி அமைசர்

வருகைக்கும் தங்களது மேலான கருத்துக்கும் மிக்க நன்றி மங்குனி அமைச்சரே....

(தாங்கள் ஒரு மங்குனி மன்னா.....சாரி அமைச்சர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள் அரசே...சாரி அமைச்சே..)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ தனி காட்டு ராஜா

//கலக்குங்க கவித் தாரகை....//

ஓஹோ.. உங்கள கடத்திட்டு வந்து ஒரு நாள் பூரா டிவி முன்னாடி உட்கார வச்சு அட்வெர்டைஸ்மெண்ட் மட்டும் பாக்க வைக்கணும்... இத எங்கயோ கேட்ட மாதிரி இருந்தா நான் பொறுப்பில்ல த.க.ரா அவர்களே..

// //பஞ்சு மெத்தை
தோற்றுப் போனது
பழைய சேலையிடம்//

இந்த ஒன்று மட்டும் சரியாக புரியவில்லை ...//

அம்மாவோட பழைய காட்டன் சேலைய மடிச்சு மடிச்சு வச்சு அத மெத்தை மாதிரி ஆக்கித் தூங்குறது ரொம்ப சுகமா இருக்கும். அதான்.

//எதற்காக பழமையே சுகம் என்பது போல் வாழ வேண்டும் ....//

அப்படிலாம் நான் சொல்லவே இல்ல. சொல்லவும் முடியாது.

//laptop -யை விட calculator -யே பரவாயில்லை என்று சொல்வது போல் உள்ளது....//

Everything has its own value. லேப்டாப் இருந்தா கூட பக்கத்துல Calculator வச்சா தான் வேல ஓடுது நிறைய இடத்துல. (Atleast in Banking)

எது எப்படியோ... வசிஷ்டர் வாயால............. :-)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ கே. ரவிஷங்கர்

மிக்க நன்றி ஜி. நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் படிச்சேன் ஜி. அடுத்த முயற்சி நிச்சயமா ஹைக்கூவில் முடியும்னு நினைக்கிறேன்.

நன்றிகள் பல.

(தலைப்பையும் லேபிளையும் மாத்திட்டேன்)
தனி காட்டு ராஜா இவ்வாறு கூறியுள்ளார்…
//ஓஹோ.. உங்கள கடத்திட்டு வந்து ஒரு நாள் பூரா டிவி முன்னாடி உட்கார வச்சு அட்வெர்டைஸ்மெண்ட் மட்டும் பாக்க வைக்கணும்... இத எங்கயோ கேட்ட மாதிரி இருந்தா நான் பொறுப்பில்ல த.க.ரா அவர்களே..//

BE CAREFUL ......[ம்.....என்னைச் சொன்னேன் ...]
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ தனி காட்டு ராஜா

:))))))
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ நசரேயன்

நன்றி நசரேயன்
ராமலக்ஷ்மி இவ்வாறு கூறியுள்ளார்…
அனைத்தும் மிக அருமை. ரசித்தேன்.
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ ராமலக்ஷ்மி

நன்றி ராமலக்ஷ்மி
நாமக்கல் சிபி இவ்வாறு கூறியுள்ளார்…
அனைத்தும் அருமை! பாராட்டுக்கள்!
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ என்.ஆர்.சிபி

நன்றி நாமக்கல் சிபி.
"உழவன்" "Uzhavan" இவ்வாறு கூறியுள்ளார்…
ஆகா.. அத்தனையும் அருமை.
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ உழவன்

மிக்க நன்றி உழவன் :-)
R.Gopi இவ்வாறு கூறியுள்ளார்…
சுபத்ரா...

என் வலைக்கு (ஜோக்கிரி) விஜயம் செய்து கமெண்டியதற்கு மிக்க நன்றி....

எனக்கும் கவிதை பிடிக்கும்... அதுவும் நன்றாக எழுதியிருந்தால் நிறையவே பிடிக்கும்...

//மழையில் வெளுக்காத
வண்ணத்துப்பூச்சி
வெளுத்தது மனதை. //

மேலே உள்ள கவிதைகள் எல்லாம் நன்றாக இருந்தாலும், நான் மேலே குறிப்பிட்டுள்ளது படு டாப் டக்கர்...
சி.பி.செந்தில்குமார் இவ்வாறு கூறியுள்ளார்…
ஹைக்கூ கவிதைகளும் ,லே அவுட்டும் அருமை
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ R.Gopi

நன்றி கோபி அண்ணா. ஒரே மூச்சில் எனது பதிவுகள் அனைத்தையும் படித்துவிட்டு அவற்றுக்கெல்லாம் கமெண்ட்ஸும் போட்டதுக்கு மிக்க நன்றி அண்ணா.. :-)
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@ சி.பி.செந்தில்குமார்

நன்றி சி.பி.செந்தில்குமார். வருகைக்கும் கருத்துக்களுக்கும்.
Sivany இவ்வாறு கூறியுள்ளார்…
எல்லாமே அருமை..
தமிழ் இவ்வாறு கூறியுள்ளார்…
ரசித்தேன்
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@Sivany

மிக்க நன்றி..
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
@திகழ்

நானும் ரசித்தேன். உங்களின் இந்தக் கமெண்டை :-))
Preethi@Ramki இவ்வாறு கூறியுள்ளார்…
i am new to ur page.all are nice
Preethi@Ramki இவ்வாறு கூறியுள்ளார்…
iam new to ur blog. all are nice
Preethi@Ramki இவ்வாறு கூறியுள்ளார்…
hi iam new to ur blog. all are nice
சுபத்ரா இவ்வாறு கூறியுள்ளார்…
Thank u and best wishes for ur life..

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதி இன்று இருந்தால்

  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழ்க் குடியின் மணிமகுடமே.. பைந்தமிழ்த் தேர்ப்பாகனே.. பாரதியே.. இன்று நீ இருந்தால்... கல்பனா சாவ்லாவையும் கிரண் பேடியையும் கண்டு பிரமித்துப் போவாயா.. அல்லது.. 'ஆதிக்கம்' செய்யும் ஆண் வர்க்கத்தின் அடிமைச் சின்னங்களாய்.. காவியம் படைக்காமலே காணாமல் போன நம் கண்ணம்மாவையும் செல்லம்மாவையும் பார்த்துப் பரிதவித்துப் போவாயோ.. தெரியவில்லை! ஐந்து வயதில் ஐம்பது புத்தகங்களும் ஈரைந்து வயதில் இணையதளமும் என்று சாதனை படைக்கும் நம் பாரதச் சிறுவர்களைக் கண்டு களிப்பாயா.. அல்லது.. கரன்சிகளுக்குள்ளே காணாமல் போன 'கல்விக் கலை'யை கனவிலேயே கற்றுக் கொள்ளும் ஏழை 'ஏகலைவன்'களை எண்ணிக் கொதிப்பாயோ.. தெரியவில்லை! ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்ட 'மனித சாதி'க்கு அன்பாலே அருமருந்திட்ட அன்னை உள்ளங்களை எண்ணி ஆனந்தம் கொள்வாயா.. அல்லது.. ஆயிரம் சாதிக்கொடிகள் உயரே பறக்க தன் உடலை மறைத்துக் கொள்ள ஓர் ஒற்றைத் துணிக்கு ஏங்கித் தவிக்கும் ஏழையைப் பார்த்து ஏமாற்றம் கொள்வாயோ தெரியவில்லை! தாய்நாட்டைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாத ...

தமிழ் vs சமஸ்கிருதம்

நாம் எல்லாம் இங்கே இருக்க வேண்டியவர்களே இல்லை . வேறு எங்கே இருக்க வேண்டியவர்கள் என்று கேட்கிறீர்களா ? அதைத் தான் நானும் “ தீ ” விரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன் .             சமீபத்தில் ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது . துருக்கி தான் Indo-European மொழிகள் உருவாகிய இடம் என்று . “Indo” என வந்ததால் இந்திய மொழிகள் எல்லாமே இதில் அடக்கம் என நினைத்து ஓர் அதிர்ச்சியுடன் அதைப் பற்றிப் படிக்கத் தொடங்கினேன் . “ இதில் என்ன அதிர்ச்சி ” என்று கேட்பவர்களுக்கு – “ பின்னே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இலக்கியங்களைக் கொண்ட நம் ‘ தமிழ் ’ மொழியின் பூர்வீகம் துருக்கி என்றால் எப்படி இருக்கும் ?”             நிறைய வாசித்ததுக்கு அப்புறம் தான் தெரிந்தது , Indo-European மட்டுமல்ல   மேலும் பல மொழிக் குடும்பங்களும் அவற்றின் கீழே எக்கச்சக்கமான உப மொழிக் குடும்பங்களும் (Indo-Iranic, Indo-Pacific, Indo-Germanic etc.) பிரிவு ...

பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்

முதன்முறையாக நான் ஒரு தொடர்பதிவு எழுதுகிறேன் :) என்னை எழுதச்சொல்லி அழைத்திருந்த அருண்பிரசாத் துக்கு நன்றி !!! பெண்குரலில் பெண்ணின் மனதைச் சொல்லும் பத்துப் பாடல்கள் . எனக்குப் பிடித்த நிறைய பாடல்களை அவரே எழுதிவிட்டார் :) அதனால் அவற்றை விடுத்து வேறு பத்துப் பாடல்களை நான் இங்கு கொடுத்துள்ளேன் :) *** 1. உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் படம் : குணா இசை : இளையராஜா பாடியவர் : ஜானகி , எஸ் வரலஷ்மி எழுதியவர் : வாலி   சில வரிகள் : ” உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார் யாரிவர்கள் மாயும் மானிடர்கள் ஆட்டி வைத்தால் ஆடும் பாத்திரங்கள் ” இந்தப் பாடலைக் கேட்கும்போதும் கேட்ட பின்னரும் மனதில் ஒரு இனமறியா உணர்வு ஏற்படுவதை நின்று நான் ரசித்ததுண்டு ! இருவர் குரலும் உணர்த்தும் வெவ்வேறு உணர்வுகள் ... அற்புதம் . *** 2. மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் படம் : பாக்யலக்ஷ்மி பாடியவர் : பி . சுசீலா இயற்றியவர் : கவிஞர் கண்ணதா...