பதிவுலகத் தோழர்களே..

Oct 30, 2010

என்னவோ நான்  “இது கதையல்ல நிஜம்”னு ஒரு பதிவு போட்டதைப் பத்தி.. ”இதெல்லாம் பொய், நம்பாதே.. ரொம்ப அப்பாவியா இருக்க.. அவங்கள பிச்சையெடுக்குறதுக்கு ஊக்குவிக்காத..” அப்படின்னும் ”சே.. என்ன ஒரு தாராள குணம்.. பத்து ரூபா கொடுத்திருக்கியே..” அப்படினு எல்லாம் நிறைய டையலாக் பேசினீங்களே.. மகா ஜனங்களே.. இங்க வாங்க. இதக் கொஞ்சம் படிச்சுப் பாருங்க.

http://gconnect.in/gc/lifestyle/get-ahead/narayanan-krishnan-hero-of-india.html

2002-ம் ஆண்டில் உயர்தர நட்சத்திர உணவகங்களில் பணிபுரியும் சமையல்காரர்களுக்கான (Chef) சிறந்த விருதைப் பெற்று சுவிட்சர்லாந்து சென்று வேலை பார்க்கும் ஒரு அருமையான வாய்ப்பை பெற்றார் நம் கதையின் ஹீரோ. 


சரி.. சுவிட்சர்லாந்து போறதுக்கு முன்னாடி நம்ம ஊருக்குப் போவேமேனு போயிருக்கார். மதுரையில் இருக்கிற ஏதோ ஒரு கோயிலுக்குப் போற வழியில ஒரு பாலத்துக்கு அடியில ஒரு காட்சியப் பார்த்திருக்கார். அங்க ஒரு வயதான மனிதர் பசியில.. சாப்பிடுறதுக்கு ஒன்னுமில்லாம தன்னோட கழிவைத் தானே சாப்பிட்டுட்டு இருந்திருக்கார்.

ஃபிரண்ட்ஸ்.. நான் கேக்குறேன்.. நம்மில் யாரோ ஒருத்தர் இதே காட்சியப் பார்த்திருந்தா என்ன செஞ்சிருப்போம்? உவ்வேனு சொல்லிட்டு ஓடிப் போயிருப்போம்.. அல்லது அதைப் பார்த்து சொச்சோ..னு பரிதாபப் பட்டிருப்போம்.. அல்லது ’பையித்தியம்.. இந்த மாதிரி பையித்தியத்துக்கு எல்லாம் இந்த அரசாங்கம் ஏதாவது செய்யக் கூடாதா’னு கேட்டுட்டுப் போயிகிட்டே இருப்போம். ஆமாவா? இல்லையா?

ஆனா நம்ப ஹீரோ என்ன செஞ்சார் தெரியுமா? அதப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அந்த நொடியிலிருந்து அந்தத் தாத்தாவுக்குத் தானே சாப்பாடு கொடுத்துட்டு வந்திருக்கார்.. அட.. எங்கப் போறீங்க? கதை இன்னும் முடியல.. இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கு.

அவருக்கு மட்டுமில்ல.. இந்த மாதிரி மனநலம் குன்றி பிறரால் கைவிடப் பட்டவர்களுக்கும் யாருமற்ற அனாதைகளுக்கும் தானே உணவளிக்க எண்ணி உடனே என்ன செஞ்சார் தெரியுமா? தான் பார்த்துட்டு இருந்த வேலைய ரிசைன் பண்ணிட்டார்.

சுவிட்சர்லாந்தாவது... ஸ்காட்லாண்டாவது.. இனிமேல் இது தான் நம்ம வேலை. வாழ்க்கைப் பூரா இதத் தான் செய்யப் போறோம்னு அன்னைக்கு முடிவு எடுத்தவர் தான். இன்னைக்கு உலகமெல்லாம் புகழ்ந்து பேசப்படுற ஒரு பெரிய மனிதரா உயர்ந்து நிக்கிறார். அவருக்குக் கோடி கும்பிடு!

சரி.. இதை மட்டும் தான் பண்ணுறாரானா அது தான் இல்ல. அவர் போற எடத்துக்கெல்லாம் முடித்திருத்துவதற்குத் தேவையான சாதனங்களைக் கொண்டு போறாராம். எதுக்கு? அந்த மனநலம் குன்றியவர்களுக்குத் தானே முடித்திருத்தம் செய்வதற்கு. இதை எல்லாம் அவர் வருசத்துக்கு அதிகமில்ல...365 நாள் தான் செய்றாராம். இதை மாதிரி கடந்த ஒன்பது வருஷமா செஞ்சிட்டு இருக்காறாம்.

ஆமா.. பார்த்துட்டு இருந்த வேலைய விட்டுட்டாரே... எங்க இருந்து இந்தச் சேவையச் செய்றார்னு பார்த்தா.. அவரோட தாத்தா தனக்குனு கொடுத்த ஒரு பாரம்பரியமான பழைய வீட்டை வாடகைக்கு விடுறாராம். அதோட இதையெல்லாம் செய்றதுக்குனே “அக்‌ஷயா”னு ஒரு தொண்டு நிறுவனத்தை ஆரம்பிச்சு(இது வேறயா) அதுக்குக் கிடைக்குற கொஞ்சம் உதவித்தொகைய வச்சு சமாளிக்கிறாராம். அதுசரி.. கொடுக்கிறவங்களுக்கு ஆண்டவன் கூரையப் பிச்சுகிட்டுக் கொடுப்பான்ங்க..

எனக்கு இதுக்கு மேல சொல்றதுக்கு வார்த்தை வரலங்க. ஒன்னே ஒன்னு மட்டும் சொல்றேன். என்னடா வேலை பார்க்கிறான்னு அவங்க அம்மா நினைச்சிட்டு இருந்த சமயத்துல ஒரு நாள் நம்ம ஹீரோ தான் பார்க்கிற வேலைக்கு அம்மாவக் கூட்டிட்டுப்போய்க் காட்டிருக்கார். வீட்டுக்கு வந்தவுடனே அவரோட அம்மா... “போடா.. போக்கத்தவனே”னு சொல்லியிருந்தா பரவாயில்லங்க. என்ன சொல்லிருக்காங்க தெரியுமா?

“நீ அவங்களுக்கு எல்லாம் சாப்பாடு கொடு. என் உயிர் இருக்கிற வரைக்கும் நான் உனக்குச் சோறு போடுறேன்”னு சொல்லிருக்காங்கப்பா!!

சரி.. விஷயத்துக்கு வருவோம். நம்ப ஹீரோ பேரு.. “நாராயணன் கிருஷ்ணன்”. CNN நியூஸ் சேனல்ல வருஷா வருஷம் “CNN-Hero of the Year"னு ஒருத்தரை கௌரவிக்கிறாங்க. இந்த வருஷத்துக்கு உலகெங்கும் இருந்து ஒரு பத்துப் பேர் நியமனம் செய்யபட்டிருக்காங்க. அதுல நம்ம ஹீரோ திரு. நாராயணன் கிருஷ்ணனும் ஒருத்தர்!!

நாம செய்ய வேண்டியது ஒன்னு தான். CNN சேனலுக்கான லின்க்க க்ளிக் பண்ணி நம்மளோட ஓட்டுக்களை அவருக்குப் போடனும். அவ்வளோ தான். உலகம் முழுவதிலும் பத்தே பத்துப் பேர். அதில ஒருத்தர் தான் இந்தியர். அதுவும் தமிழர் :-)

அவரோட இந்த ஈடுஇணையற்ற செயலுக்கு இன்னும் நிறைய உதவி கிடைக்கிறதுக்கும் அவரை உற்சாகப்படுத்துறதுக்கும் இந்த ஒரு சின்ன செயல நாம் செய்யனும்னு நினைக்கிறேன்.

Friends.. Please..??

ஓட்டிடுவதற்கு இங்கே க்ளிக்கவும்
ENCOURAGE THIS YOUNG & ENERGETIC HELPING SOUL

கடைசித் தேதி நவம்பர் 18, 2010. அதுகுள்ள எவ்வளோ ஓட்டு வேணும்னாலும் போடலாம்!
நன்றி..... கமெண்ட்ஸ்-ல மீட் பண்ணலாம். (ஓட்டு போட்டுட்டு மெதுவா வாங்க :-) )*
*
Read More...

இது கதையல்ல நிஜம்

Oct 22, 2010


பேருந்தில் ஏறி உட்கார்ந்தேன்.

"நான் கிளம்பவா?" என்ற தம்பியைத் திரும்பிப் பார்த்தேன்.

"ம்ம் சரி. பார்த்துப் போ"

"சரிக்கா. போய்ச் சேர்ந்த உடனே போன் பண்ணு" என்னைப் பேருந்தில் ஏற்றிவிட்டுக் கிளம்பினான்.
Read More...

வெட்கம் பிடிக்கவில்லை

Oct 20, 2010



வெட்கம்
உனக்குப் பிடிக்காது
என்கிறாய்

 விலக்க முயன்று
தோற்றுத் தோற்று
அதற்கொரு
வெட்கம் புதிதாய் 
முளைக்க
வெட்கமே
உனக்குப் பிடிக்காது
என்கிறாய்.. 
*
*
Read More...

பறக்கும் தட்டு

Oct 14, 2010

ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி :-)

நானும் ப்ளாக்-அ ஆரம்பிச்சு இவ்வளோ நாளாச்சு. எதாவது ஒரு நல்ல போஸ்ட் போடலாம்னா எதுவுமே தோனமாட்டேன்னது. சரி.. 'பேசுகிறேன்'-னு தலைப்ப வச்சுக்கிட்டு பேசாமலே இருந்தா நம்ம followers-குக் கோபம் வருமேனு (என்ன.. பேசினாத் தான் வருமா?) சட்டு புட்டுன்னு ஒரு பதிவைப் போட்டுட்டேன்.

ஐன்ஸ்டீன் சொல்லிருக்கார்.. "There are two ways to live your life. One is as though nothing is a miracle. The other is as though everything is a miracle".

இதை நிறைய தடவ நான் யோசிச்சுப் பார்க்கிறதுண்டு. சின்ன வயசுல பார்த்தீங்கனா பாரா பட்சம் இல்லாம எல்லா விஷயமுமே நமக்கு அதிசயமாத் தான் தெரியும். அதிலும் அதிகம் பேசாத (என்னை மாதிரி) குழந்தைகள், தான் நினைக்கிறத எல்லாம் யார்கிட்டயும் கேட்கவும் செய்யாது. மனசுக்குள்ளயே போட்டு future reference-காக பூட்டி வச்சிரும்.

இப்படி நடந்த ஒரு விஷயம்.. அப்ப எனக்கு வயசு 4 இருக்கும். (ஐயோ.. ஓடிப் போயிராதீங்க. முழுசாக் கேளுங்க). இராத்திரி எத்தன மணி இருக்கும்னு தெரியாது. நடு தூக்கத்துல எழுந்து நான் ஒன் பாத்ரூம் போகணும்னு எங்க அப்பாவ எழுப்பி விட்டேன். சும்மா வீட்டுக்குப் பக்கத்துல வெட்டவெளி தான். எங்கேயோ தூரத்துல இருந்து சாலையில் வாகனங்கள் போற சத்தம் எனக்குக் கேட்டது. வானத்துல ஏரோப்ளேன் பறக்குற சத்தம் மாதிரி. ஒரு சந்தேகத்துல எங்க அப்பா கிட்ட கேட்டேன்.

"இது என்ன சத்தம் பா"

"அது.. வானத்துல லாரி போகுதுல.. அந்த சத்தம்". இது தான் எங்க அப்பா சொன்ன பதில். (அதுசரி.. நடு தூக்கத்துல தூங்கிட்டு இருந்த அப்பாவ எழுப்பிவிட்டுக் கேட்டா அவர் என்ன சொல்லுவார்?)

நீங்க நம்புவீங்களோ இல்லையோ.. விவரம் தெரிஞ்சு ரொம்ப நாளைக்கு அப்புறம் கூட வானத்துல லாரி பறக்கும்னு நான் நம்பிகிட்டு இருந்தேன். அப்பா சொன்ன அந்த நிமிஷத்துல இருந்து வானத்துல பறக்குற காக்கா...குருவி...குப்பைல இருந்து எதைப் பார்த்தாலும் ஒரு அதிசயம்.. ஆச்சர்யம். இப்படி ஒரு நினைப்போட இருந்தவளுக்கு.. ஒருநாள் இந்த UFO... UFO-னு கேள்விப்பட்ட உடனே ஏற்பட்ட அதிசயத்துக்கு அளவே இல்ல.

என்ன அது.. UFO? Unidentified Flying Objects-ஆம். வானத்துல பறக்குற "பறக்கும் தட்டு". பார்க்க வட்டு(disk) மாதிரி தன் இருக்குமாம். திடீர்னு மின்னல் மாதிரி வந்துட்டு சில நொடிகள் இருந்துட்டு மறைஞ்சு போயிருதாம். சில நேரம் பாலைவனம் மாதிரி இடங்களில தரையிறங்கி அதுக்குள்ள இருந்து யாரோ எந்திர (ரோபோ ரஜினி இல்லப்பா) மனிதர்கள் (aliens) மாதிரி இறங்குறதையும் சிலபேர் பார்த்திருக்காங்களாம். நம்ம பார்க்கிறோம்னு தெரிஞ்ச மறு வினாடியே உள்ள ஏறி ஸ்வைங்ங்...ங்குனு பறந்து போயிருதாம் அந்த ஏலியன்ஸ். இத சின்ன வயசுலேயே படிச்சு ரொம்ப ஆச்சர்யப்பட்டேன்.

இந்த மாதிரி அப்பப்ப நடந்துட்டே இருந்ததுனு கேள்விபட்டேன். இப்ப சில நாட்களுக்கு முன்னால் (Oct 6, 2010) சீனாவில எட்டாவது தடவையா ஒரு விமான நிலையத்துல UFO வந்து அதுனால விமானப் போக்குவரத்துகளை எல்லாம் ஒரு மணி நேரம் நிறுத்தி வச்சாங்களாம்! என்ன கொடுமை சரவணா இது!!

விமானப் போக்குவரத்துக் காவலர்கள் தங்களது ராடார் கருவியின் மூலம் அந்த வாகனம் வந்ததை உறுதி செஞ்சிருக்காங்க. நிறைய தடவை விமானிகள் தான் இந்த UFO-களை அதிகமா கண்டுபிடிக்கிறாங்க. ஏன்னா ஒரு வேளை அவங்களுக்குத் தான் வானத்துல போற ஹெலிகாப்டர் ஏரோப்ளேன் ஜெட் மாதிரி வானூர்திகளுக்கும் இந்த மாதிரி வித்தியாசமான UFO-களுக்கும் உள்ள வித்தியாசம் தெரியும் போல.

இது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப் பட்ட ராணுவச் செயலாகவும் இருக்கக் கூடும்னு சீன அரசு அலர்ட்டா இருக்காம்.

பொதுவா இதப் பத்தி நம்பாதவங்க எல்லாம் விண்வெளியில் பறக்கும் விண்கற்கள், வால் நட்சத்திரங்கள், வேறு சில வானூர்திகள், வானத்தில் நம் கண்களை ஏமாற்றும் சில ஒளிப் பிளம்புகள் இவை தான் UFO-க்கள்னு தவறாக எண்ணப்படுகிறதுனு சொல்றாங்க.  இருந்தாலும் பார்க்கிறவங்க அதைப் படமும் பிடிச்சுக் காட்டும் போது நம்மளால நம்பாம இருக்கமுடியல.

இதப் பத்தி இன்டர்நெட்ல பாக்கலாம்னு வந்தா... அம்மாடியோவ்.. UFO பத்தி கிட்டத்தட்ட 2000 பதிவுகள், 400 புகைப்படங்கள், 500 கேஸ்கள்னு ஒரு பெரிய தளமே இருக்கு! www.ufoevidence.org போய்ப் பாருங்க. இதுல என்ன சொல்றாங்கனா நிச்சயமா பூமியைத் தவிர வேற சில கிரகங்களில நம்பள மாதிரியோ வேற மாதிரியோ மனிதர்கள்(aliens) இருக்காங்கங்கறதுல சந்தேகமே இல்லையாம்!! நாம இன்னும் அவங்களக் கண்டுபிடிக்கவே இல்லை. ஆனா, அவங்க நம்ம பூமிக்கே வந்து நம்மோட samples எடுத்துக்கிட்டு நம்மகிட்ட இருந்து ‘எஸ்’ ஆகிப் போறதப் பார்த்தா நம்பளவிட தொழில்நுட்பங்களில சிறந்தவங்களா இருப்பாங்கனு தான் எனக்குத் தோனுது.

வரிசையாப் புதுசு புதுசா கிரகத்தைக் கண்டுபிடிச்சிட்டே இருந்தாலும் இப்ப புதுசா பூமிய மாதிரியே ரொம்ப குளிரும் இல்லாம ரொம்ப வெப்பமும் இல்லாம உயிர்கள் வாழ்வதற்குப் பொருத்தமான மிதமான வெப்பநிலை உடைய ஒரு கிரகத்தைக் கண்டு பிடிச்சிருக்காங்களாம். இதையெல்லாம் கேட்கும்போது எனக்குத் தோனுறது ஒரே விஷயம் தான். மனிதனோட அறிவுக்கு எட்டாத எவ்வளவோ விஷயங்கள் கொட்டிக்கிடக்கு. என்ன தான் நாம பரந்து விரிஞ்ச அறிவோடு யோசிச்சுப் பார்த்தாலும் செயல்பட்டாலும் இயற்கையின் விநோதங்களை யாராலும் define பண்ணவும் முடியாது முழுமையா describe பண்ணவும் முடியாதுங்கறது தான். 

கொஞ்சம் இருங்க.. வெளியில எதுவோ சத்தம் கேட்குது. UFO-வா இருக்கும்னு நினைக்கிறேன். என்னது? நீங்களும் வரீங்களா?? வேண்டாங்க. வேஸ்டு. அது என்ன மாதிரி நல்லவங்க கண்ணுக்கு மட்டும் தான் தெரியுமாம் :-) சரி.. கமெண்ட்ஸ் போட மறந்துறாதீங்க. டாட்டா.
*
*
Read More...