அந்தா இந்தானு சொல்லி கடைசில தீபாவளி நாளைக்கே வரப்போவுது. மூனு வருஷம் குஜராத்ல தீபாவளி கொண்டாடிட்டு இப்பம் தான் திருநெல்வேலில அம்மா அப்பா தம்பிகளோட இந்த வருஷத் தீபாவளியைக் கொண்டாடப் போறேன். அதனால பயங்கர சந்தோஷத்துல இருக்கேன். வீட்டுல நாளைக்கு என்ன ‘ஸ்பெஷல்’னு இன்னுந் தெரியல. நானே குலாப் ஜாமூன் மிக்ஸ் வச்சு முதன்முறையா ஸ்வீட் செய்யலாம்னு ப்ளான். பார்க்கலாம். முன்னாடியே போயிருந்தா பக்கத்து வீட்டுக் குட்டீஸ்க்கு மெஹந்தி வச்சு உட்ருக்கலாம். தப்பிச்சிட்டாங்க ;-) அத சாப்டு இத சாப்டுனு சொல்ற அம்மா, டிவி ப்ரொகிராம் பார்த்து கமெண்ட்ஸ் சொல்லிட்டு இருக்குற அப்பா, கைய புடிச்சு இழுத்துட்டுப் போய் வெடி(பட்டாசு) போட வைக்கிற தம்பி, மஞ்சள் தடவுன புது டிரெஸ்ல ரவுண்ட்ஸ் வர்ற சின்ன பிள்ளைங்க, ஃப்ரெண்ட்ஸ்னு சந்தோஷமா இருக்கப் போகுது. அதே சந்தோஷத்தோட உங்களுக்கும் என் மனம் நிறைந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்