மூடர் கூடம் - ‘நவீன’த்துவ(க்க)ம்
Oct 4, 2013
பரீட்சை முடிந்த பிறகு தான் blog பக்கம் வரவேண்டும் என நினைத்தேன். ஆனால் ‘இதை நான் சொல்லியே ஆகனும்’ வரிசையில் முதலாவதாக இருக்கிறது மூடர் கூடம் படவிமர்சனம். ‘எந்தப் படந்தான் நம்மள முதமுதல்ல விமர்சனம் எழுதவைக்கப் போதோ’ என்று வெகு நாட்கள் காத்திருந்தது இன்று தான் நேரம் காலம் எல்லாம் கூடி முடிவுக்கு வந்திருக்கிறது. படத்தின் தொழில்நுட்பங்களை விமர்சிக்கும் அளவுக்கு எனக்கு அறிவில்லை என்பதால் ஒரு common
man பார்வையில் படம் எப்படியிருந்தது என்பதை இதோ எழுதுகிறேன்.
சந்தர்ப்பவசத்தால் காவல் நிலையத்தில் சந்திக்க நேர்ந்த நான்கு நபர்கள் ஒரு வீட்டுக்குத் திருடச்சென்று அதன் பிறகு நடக்கும் சில சம்பவங்களின் கோர்வைதான் படம். ‘இதுதான் கதை’ என்று சொன்னால் ‘இதிலென்ன பிரமாதம் இருக்கிறது’ என்று தான் கேட்கத் தோன்றும். ஆனால் “இலக்கை அடைவதை விட பயணம் சிறப்பாக அமைவதே மேல்” என்னும் புத்தரின் வசனத்தை பேனரில் நமக்கு மேற்கோள் காட்டியிருப்பதைச் சிறப்பாக நடைமுறைபடுத்தியிருக்கிறார் நவீன்.
படம் overacting
எதுவும் இல்லாமல் casual லாக இருந்தது. முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் வசனங்கள் பேசும் நவீனிலிருந்து வாயை ஊஊ என்று வைத்துக்கொள்ளும் செண்ட்ராயன் வரை எல்லோருடைய கதாப்பாத்திரங்களும் இயல்பாக இருந்தன. டாம் அன்ட் ஜெரி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் இரு காட்சிகளில் உதட்டைச் சுழித்துச் சுழித்துப் பேசும் அந்தச் சின்னப்பெண்.. அய்யோ! எந்தப் பாத்திரமும் நடிப்பில் குறைவைக்கவேயில்லை. Trailer பார்த்தபோது ‘பச்சைத் தமிழன் கிட்ட ஆங்கிலம்’ பேசுவது, ஒரு ஊரிலே ஒரு சின்ன பையன் பாடல், படத்தின் title, மாறுபட்ட கதாப்பாத்திரங்கள் என ஆவலைத் தூண்டியிருந்த பல விஷயங்கள் படத்தில் ஏமாற்றம் அளிக்கவில்லை. ஒவ்வொரு கதாப்பாத்திரமும் செய்யும் ஒவ்வொரு so called
மூடத்தனமான செயலையும் செய்வதன் பின்னர் ஒரு
justification அவ்வப்போது flash backs-ஆகக் காட்டப்பட்டது கூட சலிப்பூட்டாமல் ரசிக்கும்படியாகவே இருந்தது. உதாரணத்துக்கு நாய்க்குக் கூட ஒரு முன்கதை, ஒரு பாடல். மேலும் ஒரு முழு கார்ட்டூன் பாடல்.
படம் முழுவதும் நிறைய இடங்களில் கம்யூனிசக் கருத்துகள். 100 மனிதர்களையும் 100 மாம்பழங்களையும் வைத்து survival
of the fittest எவ்வாறு உயர்வுதாழ்வுகளைக் கொண்ட ஒரு சமுதாயத்தைப் படைத்திருக்கிறது என்ற எடுத்துக்காட்டு superb. பாரதிதாசன், பாரதியார் படம் வரையப்பட்டிருந்த சுவரின் அருகில் புரண்டு சண்டை போடுவது, கருப்பு-சிவப்பு-வெள்ளை நிற ஆடைகள்,
professional திருடனின் உருவ அமைப்பு, பக்தவத்சலம், மண்டோதரி போன்ற பெயர்க்காரணங்கள், நீயும் பொம்மை நானும் பொம்மை பாடலோடு சேர்ந்த காட்சிகள் எல்லாம் பார்க்கும்போதே பலவற்றின் குறியீடுகளாகத் தெரிந்தன :)
இந்த உலகம் ஒரு மூடர் கூடம் தான் என்பதை நான்கு கதாப்பாத்திரங்களின் வாயிலாக நம் அனைவரையும் உருவகம் செய்திருக்கிறார் நவீன். HAPPY
LIFE ஐ நாம் தலைகீழாக வைத்துப் பார்த்துக்கொண்டு நிஜமான HAPPY
LIFE எங்கே எனத் தேடிக்கொண்டிருப்பது, ஒருகட்டத்தில் விலைமதிப்பற்ற அதனைக் கையில் வைத்துக்கொண்டே உணராமல் அதற்காக ஏங்குவது.. பின்னர் உணர்ந்தபோது அது நம் கையைவிட்டுச் சென்றிருக்க மறுபடியும் அதனைத் துரத்திச் செல்வது என முடிகிறது படம்.
படத்தில் படித்தவராகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் நவீனுக்கு நண்பர்களின் ஒவ்வொரு மூடத்தனமான செயலுக்கும் பொறுமையாக
step-by-step ஆகப் பதில் கூறிப் புரியவைக்கும் clarity நிறைந்த கதாப்பாத்திரம். Navin, R
u a Maths student? :P
பார்த்தால் இந்த மாதிரி ஹாலிவுட் பாணியிலான படங்களைப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. பொதுவாக, வாசித்த புத்தகங்களைத் திரும்ப வாசிப்பதோ, பார்த்த படங்களை மறுபடியும் பார்ப்பதோ என்னைப் பொறுத்தமட்டும் boring விஷயங்கள். ஆனால் இந்தப் படத்தை மீண்டும் பார்க்க நினைக்கிறேன். Hats off Navin !!!
Labels:
பட விமர்சனம்
Posted by
சுபத்ரா
at
1:14 PM
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
அட... ...ம்... வாழ்த்துக்கள்... உங்களின் வயது என்னவென்று தெரிகிறது...
முதல் சினிமா விமர்சனமா... வாழ்த்துக்கள்... படத்தில் பல குறியீடுகளை நானும் ரசித்தேன்....
I dont think anyone in the world can write a POSITIVE REVIEW like this one, besides our Subatra!!! In this review, I hardly see any criticisms, flaws or factual errors pointed out. I am sure that movie is not flawless.
I think Navin will be flattered if he happens to read this review and he will become a fan of Subatra. Someone should tell him to check this review out! :-)
I must admit, I usually can see the negative points in a movie rather than the +ve aspects Subatra could see.
***இந்த உலகம் ஒரு மூடர் கூடம் தான் என்பதை நான்கு கதாப்பாத்திரங்களின் வாயிலாக நம் அனைவரையும் உருவகம் செய்திருக்கிறார் நவீன். HAPPY LIFE ஐ நாம் தலைகீழாக வைத்துப் பார்த்துக்கொண்டு நிஜமான HAPPY LIFE எங்கே எனத் தேடிக்கொண்டிருப்பது, ஒருகட்டத்தில் விலைமதிப்பற்ற அதனைக் கையில் வைத்துக்கொண்டே உணராமல் அதற்காக ஏங்குவது..***
Motivated people and greatest achievers are greedy people and they never were satisfied with what they had. They wanted more and more and perhaps that's why they could achieve what they achieved.
If everybody is happy with what they have, such a life would be BORING too or not? I always think "Heaven" is a boring place and I would rather go to "Hell" :-)
Take it easy, Subatra!
@வருண்
Hmm. I'm not in anyway related to the making of any movie, to get contented with it. And I don't have anything to expect from cinema, rather I have higher goals than that which make me go on :-)
Take it easy, Varun!
@வருண்
And regarding that HAPPY LIFE doll, running for something that would keep me exciting.. without knowing that it is in my hand and running for something else knowing what the doll in my hand has, both are different things :-)
The former happens in Moodar Koodam.
First of all plot of this movie is NOT an original thought. It is inspired (I would say copied) from the korean movie, "Attack the Gas Station"! Even great people justify that one can not create anything without "copying" something. But I dont buy such a BS!
Whenever we see some "outstanding movies" from a "creator" in Tamil Cinema, it is always the same story. If one dig deep into it he/she will soon realize that it is a "stolen plot/thought" from some foreign movie! The stolen part is easily overlooked by the "critics" when it is NOT stolen from a "popular Hollywood movie" as we are all ignorant one way or other! When I learn that "that great movie" is a "stolen plot" it is a big "turn off" for me. I lose respect for the "creator" (Navin here)! That's me. I dont expect the world to be like me. I do know, "All kind of people to make the world!"
Take care, Subadhra! :)
@வருண்
Thanks for the information, Varun! I think most of the Tamil film makers follow Einstein.
"The secret of creativity is to hide the sources" :D :D :D
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_3.html) சென்று பார்க்கவும்... நன்றி...
முதலில் பார்த்ததே உங்கள் மூடர் கூட்டம் விமர்சனத்தைதான்
வலைச்சரத்தின் வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்
நல்லாவே இருக்கும் உங்கள் தொகுப்பு ...
வாழ்த்துக்கள் ஆபீசர்...
வணக்கம்
ஐயா.
தங்களின் வலைப்பக்கம் இன்றுதான் அறிந்தேன். வலைச்சரம் பக்கம் வலைச்சரப்பணிக்கு வாழ்த்துக்கள்.
எனது மற்ற வலைப்பூ-முகவரி
2008rupan.wordpress.com
இதனால் தங்களின் பக்கம் கருத்துப்போட முடியாது... google கணக்கு உள்ளவர் மட்டுமே தங்களின் பக்கம் வந்து கருத்துப்போட முடியும் அதை தளர்த்தினால் நன்று என்று நினைக்கிறேன்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஐயா என்று தவறுதலாக உள்ளது மாற்றி விடுங்கள்...
-நன்றி-
-ரூபன்-
என்னை வலைச்சரத்தில் அறிமுக படுத்தியமைக்கு மிக்க நன்றி சுபத்ரா
This is a remake of english movie Trespass. http://en.wikipedia.org/wiki/Trespass_(2011_film)
This is a remake of english movie TresPass http://en.wikipedia.org/wiki/Trespass_(2011_film)
Post a Comment