முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

குட்டீஸ் எனப்படும் குட்டிப்பிசாசுகள் (பகுதி-1)

“ எப்படி அக்கா இவளை வெச்சு சமாளிக்கிறீங்க ” என வெறுப்பின் உச்சத்தில் நான் வாய்விட்டுக் கேட்டுவிட்ட அந்தக் கேள்வியில் “ இவளா கேட்டாள் ” எனச் சற்று ஆச்சர்யப் பட்டுத்தான் போனார்கள் பாப்பாத்தி அக்கா . “ என்ன பவித்ரா பண்றது ? நீயும் பார்க்கத் தான் செய்ற . இதுக்கு மேல எப்படி கண்டிக்கிறது ? நானும் அடிச்சுப் பார்த்துட்டேன் . எல்லாம் செஞ்சு பார்த்துட்டேன் . ஒன்னும் நடக்கமாட்டேங்குதே !” என வருத்தப்பட்டார்கள் அக்கா . “ இங்க தான் நீங்க தப்பு பண்றீங்க .. கண்டிக்கிறது தப்பில்லை . ஆனா , எந்த விஷயத்துக்காக , எந்த நேரத்துல , எப்படி கண்டிக்கிறீங்கங்குறது தான் முக்கியம் . அடிக்க வேண்டிய நேரத்துல அடிச்சா தான் அடுத்து அதைச் செய்யும்போது பயம் வரும் . சும்மா சும்மா அடிச்சிட்டே இருந்தா , அதோட சீரியஸ்னஸ் தெரியாம போயிரும் . அடிவாங்கி அடிவாங்கி மழுங்கிரும் . குட்டிப் பையன் கூட பரவாயில்ல . இவ இருக்காளே .. வாயாடி . காயத்ரி தான் பெரிய சேட்டை ! சரி விடுங்க . வளர வளர சேட்டை குறைஞ்சிடும் ” என்று நான்கு பிள்ளைகளைப் பெற்று வளர்த்...

நான் தம் அடிக்கிற ஸ்டைல பார்த்து..

“நான் தம் அடிக்கிற ஸ்டைல பார்த்து தனலெட்சுமி விரும்புச்சு.. நான்...” “ஏய்.. நிறுத்து. என்ன இப்போ? நான் வர்றதுக்குக் கொஞ்ச நேரம் லேட் ஆயிடுச்சுனா போதும். போற வர்ற பொண்ணுங்களைப் பார்த்து லுக் உட்டுட்டுப் பாட்டு பாட வேண்டியது. இதுவரைக்கும் எத்தனை பேர் உன்னப் போட்டுச் சாத்திருக்காங்கன்னு தெரியலயே.. கையில இது வேற. ச்ச.. நான் வந்த வழியா போறேன். பை.. நீ வேற எவளையாவது பார்த்துக்கோ. இதெல்லாம் சரிபட்டு வராது” “தேவி... ப்ளீஸ்.. என்ன விட்டுப் போயிறாத.. தேவீ..” “பை பை..” “தேவி.. ஸ்ரீதேவி.. உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா.. பாவி, அப்பாவி.. உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா....!” “போ.. என் பின்னாடியே வராத. நான் உன் மேல ரொம்ம்ம்ப கோவமா இருக்கேன்.” “என் கண்மணியே கண்மணியே.. சொல்லுவதைக் கேளு.. என் கண்மணிக்குக் கோபம் வந்தால் மின்னும் பனிப் பூவு..” “ஷட் அப்.. எவளாவது ஏமாந்தவ காதுல பூ வெச்சிருப்பா.. அவகிட்ட போய் சொல்லு” “சிந்துதடி சிந்துதடி முத்து மழை பூவு” “அடடா.. என் கவியரசர் கம்பா!” “கொஞ்சம் பாடுனா போதுமே.. எதிர்பாட்டு பாடிருவியே” “...................” “பே...

அமாவாசையும் பௌர்ணமியும்

“ கருவேப்பிலைக் கொழுந்தே ” என்றே எப்போதும் செல்லமாகக் கொஞ்சும் அப்பா .. “ அப்படியென்ன தெரிகிறது அந்தக் கண்ணாடியில் .. கருவாச்சி ” எனக் கடிந்துகொள்ளும் அம்மா .. அடிவாங்கி அழும்போதெல்லாம் “ போடீ … கருப்பாயி ” என ஆத்திரத்தைக் கொட்டும் தம்பி .. “ உனக்குக் கல்யாணம் ஆகுறது கஷ்டம்டீ ” என வக்கணை காட்டும் தோழி .. “ உன் நிறத்துக்கு இதுதான் பொருந்தும்மா ” எனப் பிடிக்காததைத் திணிக்கும் துணிக்கடைக்காரன் .. மாதா மாதம் மளிகைப் பொருட்களுடன் மறவாமல் இடம்பிடிக்கும் ஃபேர் அன்ட் லவ்லி எல்லாம் மறந்து போனது “ நீ என் கிளியோபட்ரா ” எனப் பாடிப் பரிசம்போட்டுப் போன சீமைக்காரன் போன்ற சிவப்பு மாப்பிள்ளையால் ! .

விலை

"கீர்த்தி, என்னடி அமைதியாக இருக்க? உனக்கு இந்தப் புடவை ஓ.கே. தான? அமுதாவுக்கு இந்தப் பாசிப்பச்சைக் கலர் நல்ல சூட் ஆகும்னு நினைக்கிறேன்" கேட்டுக்கொண்டே வந்த வித்யாவையும் அவள் கையில் இருந்த புடவையையும் பார்த்தாள் கீர்த்தி. "நல்லா இருக்கு" அமைதியாக ஒரு புன்னகை. "ஏய்.. இவ எனக்கெல்லாம் செலக்ட் பண்ணித் தர மாட்டா.. அவ மட்டும் அழகா செலக்ட் பண்ணி ராணி மாதிரி டிரஸ் பண்ணிக்குவா" கோபித்துக் கொண்ட அமுதாவைச் சமாதானப் படுத்த முயன்றனர் மற்ற இருவரும். "கீர்த்தி என்னைக்குமா டிரஸ் செலக்ட் பண்ணினா? எல்லாம் அவளோட அம்மாதான். இவ நம்ம கூட கடைக்கு வந்ததே பெரிய விஷயம். பேசாம வாடி..கவுண்டர் ப்ரீயா இருக்கு, பார்" என அமுதாவின் கையைப் பிடித்து அழைத்துவந்தாள் நித்யா. ஞாயிற்றுக் கிழமை சாயந்திரம் வேளை திருநெல்வேலி டவுன் ரதவீதித் தெருக்களில் கூட்டம் எவ்வளவு இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. வண்ணாரப்பேட்டையில் ஆர்.எம்.கே.வி. தனக்கென ஒரு புதுக் கிளையைத் தொடங்கியவுடன் டவுனில் கூட்டம் சற்றுக் குறைந்து தான் போனது என்றாலும் ஓரளவுக்கு மக்கள் திரள் திரளாகவும் தனியாகவும் வ...

கதையின் கதை

... “ அ ந்த ராஜாவும் மந்திரியும் தனித்தனிக் குதிரையில ஒரு பெரிய்ய்ய ஆலமரம் ஒன்னைக் கடந்து போய்ட்டு இருந்தாங்களாம். ரொம்பக் களைச்சுப் போயிருந்த அந்த ரெண்டுபேருல ஒருத்தரான மந்திரிக்கு மட்டும் ஆலமரத்தில அமர்ந்திருந்த அந்த ஆண்கிளியும் பெண்கிளியும் பேசிட்டு இருந்த சத்தம் தெள்ளத்தெளிவாக் கேட்டுச்சாம். “இதோ குதிரையில் போகிறார்களே ஒரு ராஜாவும் மந்திரியும், இவர்களைக் கவனமாகப் பார்த்துக்கொள். இந்த ராஜாவுக்கு எண்ணி இரு பௌர்ணமிகளுக்குள் உயிர்போகும் அபாயமிருக்கிறது. யார் நினைத்தாலும் அவனைக் காப்பாற்றவே முடியாது! அவனது உயிர் ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி இருக்கும் ஒரு குகையில் கூண்டிற்குள் கைதாகியிருக்கும் ஒரு பஞ்சவர்ணக்கிளியின் விடுதலையில் இருக்கிறது. இந்த ராஜா அவன் கையாலேயே அதை விடுவித்தாக வேண்டும்...” “ இரு பௌர்ணமிகளுக்குள் அவன் அந்தக் கிளியை விடுவித்து விட்டால்?” “அதற்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால் இந்த ராஜாவின் உயிர் பற்றிய ரகசியம் அறிந்தவர்கள் இந்த உலகினில் மூன்றே பேர்தான். ஒன்று நான்; ஒன்று நீ; மற்றொன்று அவனது உடன் இருந்து இப்போது நாம் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கும் அந்த மந்திரி. ராஜாவின் ...