முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Yeh Dil Hai...

நானும் என்னமாது ஒரு நல்ல படம் பார்த்தா விமர்சனம் எழுதலாம்னு நினைச்சிட்டே தான் இருக்கேன் . நல்ல படம் ஒன்னும் வரலையா இல்ல வந்தப்பம் நான் தான் பார்க்கலையானு தெரியல .. இதுவரைக்கும் ஒன்னு கூட எழுதல . நேத்து அலெக்ஸ் பாண்டியன் படத்தைப் பார்த்துட்டு ஏண்டா போனோம்னு ஆயிட்டு . (கண்ணா லட்டு தின்ன ஆசையா’வாது போயிருக்கலாம்) பேசாம அந்த நினைப்பைக் கைவிட்டுட்டு டிவி சீரியலுக்கு விமர்சனம் எழுதலாம்னு தோனுச்சு :-) நான் பார்க்குறது ரெண்டே ரெண்டு சீரியல் . ரெண்டுமே Zee- தமிழ் . ஒன்னு ‘ ஜான்சிராணி ’; இன்னொன்னு ‘ மறுமணம் ’.  ஜான்சிராணி ல நடிச்சிருக்குற சின்ன பொண்ணு மனுகர்னிகா ( உல்கா குப்தா ) வும் அவளோட நடிப்பும் ரொம்ப அழகாயிருக்கும் . கூடவே வர்ற அந்தக் குட்டி இளவரசியும் அவளோட வக்கனையான வாய்ச் சுழிப்பும் ... அப்புறம் மனுகர்னிகாவோட குரு ;-) எல்லாருமே ரசிக்கும்படியா நடிச்சிருக்காங்க . இதுல எனக்கு ரொம்ப பிடிச்சது மனுகர்னிகாவுக்கு வாய்ஸ் கொடுத்த பொண்ணோட குரல் , உச்சரிப்பு மற்றும் அழகிய தமிழ் வசனங்கள் . இந்தித் தொடரின்...

கேள்வியின் நாயகனே

இறுதியில் வென்றுவிட்டாய் நீ . போட்டியில் ஜெயித்துவிட்டாய் . அறுதியிட்டு எதையும் கூறிவிடமுடியாது எனினும் நானே ஒப்புக் கொண்டுவிடுகிறேன் . நமக்குள் எதற்கும் எப்போதும் போட்டி நிலவுவதுண்டு நிலவியதுண்டு . ( நிகழ்காலத்தில் குறிப்பிடமுடியாமல் கடந்தகாலமாகக் குறிப்பிடச் செய்கிறதே , அதன் பெயர் தான் விதி என்பதா ? ) தேர்வுகளில் யார் அதிக மதிப்பெண்கள் எடுக்கிறோம் என்று ; ஒரு புத்தகத்தை யார் முதலில் வாசித்து முடிக்கிறோம் என்று ; இப்போது ஒன்று ஞாபகம் வருகிறது . “ புத்தகம் என்ன பியானோவா வீணையா புல்லாங்குழலா , அதை வாசிப்பதற்கு ? புத்தகத்தைப் ‘ படிக்க ’ த் தான் முடியும் ” என்று நீ கிண்டல் செய்வாய் . இதைச் சொல்லும்போது இன்னொரு ஞாபகம் . Shenoy- யும் Flute- ம் வெவ்வேறென அறிந்திருந்தவளுக்கு Flute- ன் இந்திப் பதம் தான் Shenoy என்று கூறி என்னைக் கேலி செய்திருக்கிறாய் .

கவிதைகள்

நான் ரசித்த பிரமிள் , ஆத்மாநாம் , கல்யாண்ஜி மற்றும் கலாப்ரியாவின் கவிதைகள் உங்களுக்காக ...

பழந்தமிழர்களின் வாணிகம்

தமிழர்கள் பழங்காலத்திலேயே கடல் வாணிகத்திலும் உள்நாட்டு வாணிகத்திலும் சிறப்படைந்திருந்தார்கள் என்பதற்குத் தமிழிலக்கியச் சான்றுகள் மட்டுமல்லாமல் வெளி நாட்டாரின் பழங்காலக் குறிப்புகளின் சான்றுகளும் உள்ளன . கி . மு . பத்தாம் நூற்றாண்டின் அரசனாகிய சாலமனுக்குத் தமிழ்நாட்டுக் கப்பல்கள் மயில் தோகையும் யானைத் தந்தமும் வாசனைப் பொருள்களும் கொண்டு சென்றன . பழைய ஈப்ரூ (Hebrew) மொழியில் உள்ள துகி ( மயில் இறகு ) என்னும் சொல் “ தோகை ” என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபு . “ அஹலத் ” ( வாசனைப் பொருள் ) அகில் என்னும் தமிழ்ச்சொல் திரிந்து அமைந்தது . ஆங்கிலத்தில் உள்ள சாண்டல் (Sandalwood), ரைஸ் (Rice) என்னும் சொற்கள் கிரேக்க மொழியின் வாயிலாகப் பெறப்பட்ட பழைய தமிழ்ச் சொற்களாகிய சந்தனம் ( சாந்து ). அரிசி என்பவற்றின் திரிபுகளே . கி . மு . ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்பே அரிசியும் மயிலும் சந்தனமும் தமிழ்நாட்டிலிருந்து பாபிலோனியாவுக்குக் கடல்வழியாகச் சென்றன .