முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மரணபோதை

யாரோ ஒரு அழகு பாட்டி பொதுவாக வீட்டின் தலைப்பிள்ளை பாட்டியிடம் வளர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் . முதல் குழந்தையாய்ப் பிறந்த நான் என் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்ததில் ஆச்சர்யமேதுமில்லை . நான் ஒற்றைத் துணியில் ஓடித் திரிந்த அந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே என் மனம் கவர்ந்தவள் அவள் . எண்ணெய் விட்டுப் பிசைந்த வெறும் சோறாக இருந்தாலும் அவள் கையால் ஊட்டிவிடும் போது அமுதமாகிவிடும் .

தேவதை வம்சம் நீயோ!

அப்போது பன்னிரெண்டாம் வகுப்பு . புதிதாக வீடு மாறிய சமயம் . பள்ளி முடிந்து நேராகப் புதுவீட்டுக்குப் போகத் தெரியாது . “நானே வந்திருதேன்ப்பா” என்று வேறு அப்பாவிடம் சொல்லியிருந்தேன் . மாலை ஆறு மணி ஆகியிருந்தது . எந்த பஸ் .. எந்த ஸ்டாப்பிங் என எல்லாம் கேட்டு வைத்திருந்தாலும் தனியே போவதற்குத் தயக்கம் . இருட்ட ஆரம்பித்திருந்த வேளையில் வகுப்பில் என் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம் கேட்க , “அந்த லாஸ்ட் பெஞ்ச்ல சித்ரா தேவினு ஒரு பொண்ணு இருக்காள்ல .. அவளும் கே . டி . சி . நகர் தான் . அவகிட்ட கேட்டுப் பாரு” என்று சொல்ல அவளைத் திரும்பிப் பார்த்தேன் .

தற்கொலை

இதயத்தைத் துளை போடும் ரணம் ஒன்று வேரறுத்துக் கொண்டிருக்கிறது

பூமி - சில தகவல்கள்

நாம வாழுற இந்தப் பூமியைப் பற்றியும் பிரபஞ்சத்தைப் பற்றியும் நிறைய விஷயங்கள் படிக்கும் போது எனக்கு ஆச்சர்யமா இருந்தது .. அதை உங்களுக்கும் சொல்லலாமேனு இந்தப் பதிவு :)        பால்வீதியில் (the Milky Way Galaxy) நம் சூரியனைப் போன்ற நட்சத்திரங்கள் ஏறத்தாழ 100,000 மில்லியன் இருக்கின்றன .        நம் சூரியக் குடும்பத்திற்கு மிக அருகே இருக்கும் ஒரு நட்சத்திரத்தில் இருந்து அதன் ஒளி நம்மை வந்தடையும் நேரம் – 4 வருடங்கள் .        சூரியனில் இருந்து பூமிக்கு அதன் ஒளி வந்தடையும் நேரம் – 8 நிமிடங்கள் .        நிலவில் இருந்து அதன் ஒளி நம் பூமிக்கு வந்தடையும் நேரம் எவ்வளவு தெரியுமா ? ஒரே ஒரு வினாடி .        சூரியனின் வெளிப்புற வெப்பநிலை - 6000° C. அதன் உட்புறத்தின் வெப்பநிலை – 20 மில்லியன் ° C.        சூரியன் பூமியை விட 300,000 மடங்கு...