(சாரு நிவேதிதா விமர்சகர் வட்டம் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசை வென்றிருக்கும் என் கதை கீழே) ஆளுக்கொரு பொருளை வைத்துக்கொண்டு ஐந்துபேரும் சேர்ந்து அந்தக் குழியைத் தோண்டத் துவங்கியிருந்தோம் . “ அட்வென்ச்சர் வேணுங்கிறதுக்காக இதெல்லாம் ஓவர் திவ்யா ” லலிதா ( எ ) லல்லி நூறாவது முறையாக அந்த டயலாகை சொல்லி முடித்தாள் . அந்தக் குளிர் பனியிலும் அவளது முகம் வேர்த்து வெளுத்திருந்தது . “ உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்கா ? இந்த ஸ்மெல்ல எப்படித்தான் தாங்கிக்கிறீங்களோ ” “ எவ்வளவோ பண்ணிட்டோம் ; இதப் பண்ண மாட்டோமா ? அப்படினு என் மனசு சொல்லுது ” சிரித்துக்கொண்டே நான் சொன்னதைக் கேட்டவள் மண்வெட்டியைக் கீழே போட்டுவிட்டு அருகிலிருந்த வேறொரு கல்லறையின் மேல் சோர்ந்து போய் விழுந்தாள் . அது அவளை ஏந்திக் கொண்டது .
Hi from a Hikikomori 🐌